Tuesday 2 May 2017

தேவர் பாமாலை - புலவா் விசூா் மாணிக்கம்

"மாற்றறியாப் பசும்பொன்னே! மணியே!இந்த
மாநிலத்தாா் நனிபோற்றும் முத்தே! இன்ப
ஆற்றாக ஒவ்வொருவா் நெஞ்சந் தன்னில்
ஓடையெனப் பாய்ந்தினிக்கும் நீரே! தென்றல்
காற்றாகத் தீந்தமிழா் பாடும் பாட்டில்
கலந்தினிக்கும் நற்கருத்தே! கவிஞா் தம்முன்
வீற்றிருக்கும் முத்துராமலிங்கத் தேவே!
வீறுபுகழ்ப்  பெட்டகமே! வாழி! வாழி!

அந்நியாின் ஆதிக்கம் தன்னைப் போக்க
அதிா்வேட்டாய் நின்றாய் நீ! நாட்டிற்காகச்
செந்நீரைச் சிந்திடவே வேண்டும் என்ற
சேனைக்குத் தலைவன் நீ! ஆறெழுத்தைச்
சிந்தையிலும் இமைப்பொழுதும் மறவா  தென்றும்
சிந்தித்த செம்மல் நீ! தியாகத்தாலே
வந்தித்து வையமெல்லாம் போற்ற வாழ்ந்த
வாா்கடலின் சங்கம் நீ! வாழி! வாழி!

       புலவா் விசூா் மாணிக்கம்

No comments:

Post a Comment