Tuesday 2 May 2017

1952 பொது தேர்தல் தேவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின்

1952 பொது தேர்தலில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் சில பகுதிகள்:
----------------------------------------------------------------------------------------------------------------

" பார்வர்ட் பிளாக் கட்சிக்கு பொதுத்தேர்தலில் அத்தனை பிரமை இல்லை.ஏன் எனில் தேர்தலால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளையும் குறிப்பாக விவசாயிகள், தொழிலாளர்களின் ஜீவாதாரப் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து விடுவதென்பது அசாத்தியம்.
ஆனால், அதே சமயம் இந்தத் தேர்தலால் வயது வந்தோர் வாக்குரிமைக்கு வசதியிருப்பதால் தவறான ஆட்சியில் அவதிப்படும் மக்களுக்கு அந்த கஷ்டங்களிலிருந்து விடுபட, ஒரு நெறியான நேர்மையான ஆட்சியை அமைக்க, இந்தத் தேர்தல் ஒரு சரியான வசதி என்பதை பார்வர்ட் ப்ளாக் அசட்டை செய்து விடவில்லை. அதிக அக்கறையோடு வரவேற்கிறது."

"இப்போது நடைமுறையில் இருக்கும் அரசியல் நிர்ணயம் இந்திய மக்களையும் அவர்களது முன்னேற்ற இயக்கங்களையும் நசுக்கிப் பூர்சுவாக்களுக்கு அடிமைப்படுத்தும் சாசனமே தவிர வேறில்லை".

"மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய பிரதிநிதிகளை, மக்கள் விரும்பாத போது அப்பிரதிநிதித்துவ உரிமைகளைப் பறித்து வெளியேற்ற மக்களுக்கு ஜனநாயக விதிப்படி உரிமை வழங்கப்படும்".

"நேரு சர்க்காரின் வெளிநாட்டுக் கொள்கை பலவீனமாயும், சுயமதிப்பற்றதாயும் இருக்கிறது. நடுநிலையின் பேரால் ஆங்கிலோ,அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது அபிமானத்தோடு அவர்களின் துயரங்களைக் கலைந்து காப்பதிலேயே கவனமாயிருக்கிறது.
உலகம் இன்று இரண்டு முகாம்களாகப் பிரிக்கப்பட்டு நிற்கிறது. ஓன்று, அமெரிக்கா,பிரிட்டன்,பிரான்சு முதலிய கூட்டு வல்லரசு முகாம்.
மற்றொன்று சோவியத் ரஷ்யா. மக்களாட்சி நிலவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், புதிய சீனா, உலகின் பல பாகங்களிலுமுள்ள முன்னேற்ற இயக்கங்கள் இவைகளை கொண்ட முகாம்.
இந்த நிலையில் மூன்றாவது முகாமைப் பற்றி எவர் சிந்திக்கவும் பேசவும் செய்கிறார்களோ அவர்கள் உலகின் முன்னேற்ற இயக்கங்களுக்கு கேடு செய்ய கொல்லைப்புற வழியாக ஆங்கிலோ,அமெரிக்க முகாமுக்கு உதவி செய்கிறவர்கள் என்பது நிச்சயமான சங்கதி.
ஆங்கிலோ,அமெரிக்க ஏகாதிபத்திய முகாமுக்கு சரியான எதிர்ப்பு சக்தி நெறியும், நேர்மையும் கலந்த ஒரு உன்னதமான அமைப்பு பார்வர்ட் பிளாக்கின் திட்டம்.
இதற்கும், குறிப்பாக மனித சுதந்திரத்திற்கும் ஆங்கிலோ, அமெரிக்க சக்தி பெரிய விரோதி என்பது தீர்மானம் . எனவே நமக்கும் அவர்களுக்கும் இணைப்பு என்பது நினைக்கவொன்றாத சம்பவம்.
உலகின் சாமான்ய மக்களால் புகழப்படும் ரஷ்யா, புதிய சீனா முகாமின் பக்கமே நமது அனுதாபம் சார்ந்து நிற்கும்

No comments:

Post a Comment