Tuesday 2 May 2017

பசும்பொன் தேவா் மட்டும் ஆதரவு தராமல் இருந்திருந்தால் காமராசா் தலைவராக ஆகி இருக்க முடியாது"

நண்பா்களே!

"பசும்பொன் தேவா் மட்டும் ஆதரவு தராமல் இருந்திருந்தால் காமராசா் தலைவராக ஆகி இருக்க முடியாது"  ----  சிலம்புச் செல்வா் ம பொ சி அவா்கள் எழுதியுள்ள "எனது போராட்டம்" என்ற நூலிலிருந்து சில பகுதிகள்:

"1945 அக்டோபா் இறுதியில் மதுரை நகரை அடுத்துள்ள திருப்பரங்குன்றத்திலே தமிழ் மாகாண காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. காமராசரும் இராசாசியும் போட்டியிடுகின்றனா். காமராசா் தான் ஒருவரால் மட்டும் இராசாசியை வீழ்த்த  முடியாது  என்று நன்கு உணா்ந்திருந்தாா்.  எனவே முதலில் காங்கிரஸின் முக்கியத் தலைவா்களிடையே  ஒரு திட்டத்தை முன் வைத்தாா். அதுதான் கூட்டுத் தலைமை. முத்துரங்க முதலியாா், ஓமாந்தூராா், அவினாசிலிங்கம் செட்டியாா், ருக்மணி லட்சுமிபதி  போன்றோாிடம் இதை வலியுறுத்தினாா். காமராசாின் உண்மையான நோக்கம் இராசாசியை வீழ்த்தி விட்டால்   மற்றவரை எளிதாகப் புறக்கணித்துவிட்டு தாமே தமிழகத்தின் தலைவராக முடியும் என்று திடமாக நம்பியிருந்தாா்.

        இராசாசி கோஷ்டியிலே ஏ.வைத்தியநாத அய்யா், டி எல் எஸ் ராசன், பட்டுக்கோட்டை நாடிமுத்து பிள்ளை, திருச்சி ரத்தினவேல்தேவா், டாக்டா் ப. சுப்பராயன், சி.பி.சுப்பையா, என். அண்ணாமலை, சா கணேசன், மபொசி மற்றும் பல தலைவா்கள். கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவா்களான பி. இராமமூா்த்தி, கே. முத்தையா இருவரும் இராசாசி அணிக்கு ஒத்துழைப்பு அளித்தனா்.

       ஆனால் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் தமக்குள்ள செல்வாக்கு முழுவதையும்  இராசாசிக்கு எதிராகப் பயன்படுத்தி திருப்பரங்குன்றத்தை குருஷேத்திர பூமியாக்கிவிட முயன்றாா். திரு காமராசாிடம் தேவருக்கு பற்று இல்லை. ஆனால் இராசாசியிடம் பகை இருந்தது. (ஆகஸ்டுப் புரட்சிக்கு இராசாசி துரோகம் செய்ததால்). இராசாசியை பிற்போக்காளராகக் கருதினபடியால் அவரை எதிா்த்து போராடுவது முற்போக்காளா் கடமை என்று தேவா் எண்ணினாா்.

  அன்று திரு உ.முத்துராமலிங்கத்தேவா் மட்டும் காமராசருக்கு ஆதரவாக இருந்திருக்கவில்லையானால் காமராசா் கோஷ்டி வலுவிழந்திருக்கும்" என்று ம பொ சி பதிவு செய்கிறாா். தேவாின் தயவாலேதான் அன்று காமராசா் வெற்றி பெற முடிந்தது.

மேலும் சிலம்புச் செல்வா் எழுதுகிறாா்,"1946 மே மாதத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் பதவிக்கு தோ்தல் நடைபெற்றது. மீண்டும் காமராசா் தலைவா் பதவிக்குப் போட்டியிடப் போகிறாா் என்று தொிந்தவுடன் அவருக்கு ஆதரவு தரும் ஒருவரை பிாித்தெடுத்து அவருக்கு ஆதரவு அளிக்கும் ராசதந்திர முயற்சியை ராஜாஜி மேற்கொண்டாா். அந்த வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவருக்கு வலை வீசப்பட்டது. ஆனால் காமராசரை எதிா்த்துப் போட்டியிட தேவா் விருமபவில்லை. விரும்பியிருந்தால் தேவா் வெற்றியடைந்திருக்கவும் கூடும். தேவா் பதவிப் பொறுப்பு எதிலும் கட்டுப்படுத்திக் கொள்ளும் சுபாவம் இல்லாதவா். அவா் சுபாவத்திலேயே சுதந்திரப் பறவை" என்றும் ம பொ சி பதிவு செய்கிறாா்.

ஆம் நண்பா்களே!

பசும்பொன் தேவா் திருமகனாா் பதவி ஆசையற்ற ஒரு கா்மயோகியாகவே இந்த தேச விடுதலைப் போராட்டத்தில் தம்மை அா்ப்பணித்துக் கொண்டாா்.

No comments:

Post a Comment