Tuesday 2 May 2017

நேதாஜிக்கு நேரு செய்த பெருந் துரோகம் - தேவர் அறிக்கை

நேதாஜி மர்ம மரண விசாரணைக் குழு ஒன்றை நேரு அமைத்தார். அதன் தலைவராக INA வின் முன்னாள் தளபதி ஷாநவாஸ் கான் நியமிக்கப்பட்டார். அந்த ஆணையத்தில் சாட்சியளிக்க தேவருக்கு  அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஷா நவாஸ் கான் அனுப்பிய அழைப்பாணையை இத்துடன் இணைத்துள்ளேன்.

அந்த ஆணையத்தில்  தேவர் முதல் சாட்சியாக விசாரிக்கப்பட்டார்.
ஆதாரங்களைக் கொடுக்கும் முன் குழுவினரிடம் சில வினாக்களை தேவர் எழுப்பினார்.

1. நேதாஜியின் மர்ம மறைவு குறித்து விசாரிக்க இந்த விசாரணைக் குழு ஜப்பான் நாட்டை விடுத்து மற்ற நாடுகளுக்கும் பயணம் செய்ய உத்தேசித்துள்ளதா? என்று கேட்டார்.

இதற்கு குழுவினர் சரியாகப் பதில் சொல்லவில்லை.

2. இந்த விசாரணை ஆணையத்திற்குப்  பதிலாக உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப் படுவது பொருத்தமாக இருக்கும் என்றார். மேலும் போர்க் குற்றவாளிகள் விசாரணை ஆணையத்தின் தலைவராக இருந்த இராதா வினோத் பால் தலைவராக இருப்பது சரியாக இருக்குமென்றார்.

அதற்கு சாத்தியமில்லை என்று கூறி விட்டனர். 

3. நேதாஜியின் பெயர் சர்வதேச போர்க் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? இல்லையென்றால் அதற்கான முறையான அறிக்கையை வெளியிட இந்திய அரசு தயாராக இருக்கிறதா? எனக் கேட்டார்.

அதற்கு நாங்கள் வெறும் விசாரணை குழுதான். அரசிடம் பேசிவிட்டு சொல்கிறோம் என்றனர். சிறிது நேரம் கழித்து விட்டு அரசிடமிருந்து இது சம்பந்தமான எந்தப் பதிலையும் பெற இயலவில் லை என்றனர்.

உடனே பசும்பொன் தேவரவர்கள், "நான் நேதாஜி இயக்கத்தைச் சேர்ந்தவன். நேதாஜி போர்க் குற்றவாளி இல்லை என்று அறிவிக்கும் வரை இந்த விசாரணைக் குழுவோடு ஒத்துழைக்க முடியாது" என்று அறிவித்துவிட்டார்.

நேதாஜிக்கு நேரு செய்த பெருந் துரோகம்  இது. பின்னர் இவை பற்றி தேவர்  பத்திரிக்கையாளர் சந்திப்பில் விரிவாக அறிக்கை வெளியிடுகிறார். தி ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்டு என்ற ஆங்கில நாளிதழ் தேவரின் படத்துடன் செய்தியை வெளியிட்டது.

அந்த பத்திரிக்கைச் செய்தியை கண்ணகி இதழ் வெளியிட்டது. அதனையும் இத்துடன் இணைத்துள்ளேன்

நன்றி:

திரு.தினகர பாண்டியன்

தேவரின் இரத்த வழிச் சொந்தம். தேவருக்கு தம்பி மகன் ( ஆவணங்கள் உதவியவர்)

திரு .பேரா.க.செல்வராஜ்
நக்கீரன்

No comments:

Post a Comment