Tuesday 2 May 2017

வள்ளலார் போல் அவர் ஒரு ஆன்மீகவாதி

பசும்பொன் தேவர் திருமகனார் மீது பல்வேறு சமய மார்க்கத்தை சார்ந்தவர்களும் பெரும் மதிப்பு கொண்டிருந்தனர்.  தேவர் சிறந்த ஆன்மீகவாதியாகத் திகழ்ந்தார். மத அடிப்படைவாதத்தை அவர் என்றுமே ஏற்றதில்லை.  வள்ளலார் போல் அவர் ஒரு ஆன்மீகவாதி. அதனால் தான் வெளிநாடு வாழ் பிற மதத்தவர்களும் தேவர் அவர்களைப் போற்றினர்.

2-4-1955 ஆம் ஆண்டு "பர்மா நாடு" இதழின் ஆசிரியர் திரு .வி.எச்.டேவிட் அவர்கள் தேவர் அவர்களை பர்மாவிற்கு அழைத்த கடித நகலை இணைத்துள்ளேன்.

அதே போல் 20-12-1955 ஆண்டு பர்மா வாழ் கமுதி முஸ்லீம் ஜமாஅத்தார்கள் தேவருக்கு அளித்த  வரவேற்பிதழையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

பர்மா நாடு  ஆசிரியர் டேவிட் அவர்களின் கடிதம் .......

THE BURMA NADU
Burma's Leading Daily and Weekly
- ESTD - 1925

V. H. DAVID
Editor and Publisher

2 - 4 - 55

அன்பு மிக்க தலைவர் அவர்களுக்கு

எமது இதயங் கனிந்த வாழ்த்துக்கள். எனது கடிதம்  எழுதி தபாலில் போடும் தருணம் தங்களது பர்மா விஜயம் குறித்து உடனடியாக முடிவு செய்ய வேண்டும்.....

அகில பர்மா தமிழர் சங்கத்தின் ஆண்டு விழாவை தாங்களே திறந்து வைப்பதற்கான முயற்சி எடுத்துக் கொள்ளப் பெறும். இது தங்களின் வசதியைப் பொறுத்துள்ளது.

"பர்மா நாடு " க்கு தங்களின் விசேஷ வாழ்த்துச் செய்தியையும், பர்மா வாழ் தமிழ்ப் பெருமக்களுக்கு  ஆசி செய்தியையும் உடனடியாக ஆகாயத் தபாலில் அனுப்பி வைக்குமாறு பெரிதும் எதிர்பார்க்கின்றேன். சிரமத்திற்கு பொறுக்கவும்.

தேவரை பர்மாவிற்கு அழைக்க சாதி மதங்களைக் கடந்து தமிழர் தலைவராகத் தான் அழைத்துள்ளனர்.

அதே போல் தான் பர்மா வாழ் கமுதி முஸ்லீம் ஜமாஅத்தார்களின் வரவேற்பும்.

"தென்னாட்டு போஸ் என்று புகழப்படுபவரும், தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சி தலைவரும், சென்னை  சட்டசபை மெம்பரும், மதிப்பிற்குரிய நம் மாபெரும் தலைவருமாகிய பசும்பொன் உயர் திரு .உ. முத்துராமலிங்கத் தேவர் MLA அவர்களுக்கு பர்மா வாழ் கமுதி முஸ்லீம் ஜமாஅத்தார்கள் அன்பின் பெருக்கால் ஆசி கூறி வாசித்தளித்த ஆனந்த வரவேற்பிதழ் " என்று நீண்ட வரவேற்பை அளிக்கின்றனர்.
20-12-1955 .

இதையெல்லாம் மறைத்து விட்டு தேவரை இந்து மதவாதி போல பலரும் கட்டுக்கதைகளை  ஆதாரமில்லாமல்  எழுதி வருகின்றனர். ஆன்மீகவாதிகளுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கும் வேறுபாடு காணத் தெரியாத மூடர்கள்.

வள்ளலாரும் சங்கராச்சாரியாரும் ஒன்றா?

குன்றக்குடி அடிகளாரும் ஆர்எஸ்எஸ் ம் ஒன்றா?

தேவர் மீது சுமத்தும் அவதூறுகளை வரலாறு துப்பி எறிந்து விடும்.

No comments:

Post a Comment