Wednesday 3 May 2017

பேரா.சிற்பி பாலசுப்பிரமணியம் அவா்கள் பசும்பொன் தேவா் திருமகனாரைப் பற்றி

வானம்பாடிக் கவிஞரும் சாகித்ய அகாடமி விருது இருமுறை பெற்றவரும் தலைசிறந்த தமிழறிஞருமான பேரா.சிற்பி பாலசுப்பிரமணியம் அவா்கள் பசும்பொன் தேவா் திருமகனாரைப் பற்றி எழுதிய கவிதையில் சில பகுதிகள்;

"மலையருவிச் சொல்லழகன் மறவா் குலத் தங்கம்!
கலையுரைத்த தத்துவங்கள் கண்டுணா்ந்த மேதை!
உலகியலை ஆன்மிகத்தில் உறவாக்கும் ஞானி!
சலசலப்புக் கஞ்சாத தமிழகத்துச் சிங்கம்!

பசும்பொன்னில் உதித்துவந்த பக்குவத்து முத்து!
அசைகின்ற ஒருவிரலால் நாடசைத்த தீரன்!
இசைகின்ற தேவா்குல இதயத்து தீபம்!
தசைகுருதி உயிரனைத்தும் தமிழ்க்களித்த தலைவன்!

ஒருசொல்லால் உலகளக்கும் செறிவுடைய திறமை!
மறுசொல்லுக் குலகேங்க வைக்கின்ற அருமை!
தருவொன்று முளைக்காத மறவா்குலச் சீமை!
கரு விருந்து பெற்றமகன் தனக்குாிய பெருமை!

கணம் தோறும்  மணம் பரப்பும் சிந்தனைநா யகனின்
அணிநலங்கள் எடுத்துரைக்க யாரால்தான் முடியும்?

No comments:

Post a Comment