Wednesday 10 December 2014

எருமைகுளம் அனைத்து சமூக ஒற்றுமை ஆலயம்

அனைத்து சமுக ஒற்றுமை ஆலயம் 

பசும்பொன் தேவருக்கு கோவில் ஒன்று கட்டினாலும் குறை சொல்ல ஆளில்லை. திரு. வி.கண்ணதாசன்.  


கமுதி சாயல்குடி சாலையில் பெருநாழி விலக்கு ல் உள்ள கிராமம் எருமைகுளம் தான் எனது ஊர். அவ்வூரில் பெரும்பான்மையாகதேவரும் அதற்கு சற்று நிகராக நாயக்கரும் 25 பள்ளர் குடும்பமும் சில சக்கிலியர் இனகுடும்பமும் வாழும் ஊர். கடந்த 2005ம் ஆண்டு கிராம கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அனைத்து சமுதாயத்தின் சார்பாக கிராம நிதியில் இருந்து நமதுஊரில் தெய்வீகத்திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவர் திருக்கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டு வேலை ஆரம்பிக்கப்பட்டது. ஒருபக்கம் ஆலயம் வேலையும் மறுபக்கம் அதற்கான அனுமதி பெறவும் மும்மரமாக பணி நடந்தது.அனுமதி வேண்டி சக்கிலியர் இனத்தவரும், ஊராட்சிமன்ற தலைவருமான மாரி அவர்கள் மாவட்ட கலேக்டரிடம் ராமநாட்டில் மனு கொடுத்தார். கோவில் பாதி எழும்பிய நிலையில் காவல்துறையின் கதாநாயகன் அப்போதைய கமுதி DSPமதிப்புமிகு திரு.செந்தில்வேலவன் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டு காரணங்களை கூறாமல் 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர்.அந்த ஐந்து பேரில் மூவர் தேவர் ஒருவர் சக்கிலியர், நாயக்கர் ஒருவரும் அடங்குவர்.பின்பு கிராமத்தின் சார்பாக வழக்கு கவனிக்கவும் தனி கமிட்டி அமைக்கப்பட்டது.அப்போது ஆதரவு அளித்த அரசியல் தலைவர் வல்லரசு பிரிவு பார்வர்ட் பிளாக்தலைவரும், மாவட்ட கவுன்சிலருமான புலிக்கொடி வேந்தன் கமுதி S.ராஜபாண்டியன் அவர்கள் மட்டுமே. பின்பு கோவில்பணி கிடப்பில் போடப்பட்டது. பின் 2008 ம் ஆண்டு நான் என் நண்பர் ரஞ்சித்குமார்,வழிவிட்டான், முத்து மற்றும் வடிவேல் உதவியுடன் தேர்தல் புறக்கணிப்பு நோட்டிஸ் ஒட்டினோம். ஏனென்றால் அந்த சமயத்தில் புலிக்கொடி வேந்தர் கமுதிராஜபாண்டியன் விபத்தில் இறந்ததால் இடைத்தேர்தல் நடைபெற்றது.தேர்தல் விதிமுறை மீறிய குற்றம் சாட்டப்பட்டு கோவிலாங்குளம் காவல்நிலையத்தில் விசாரனையில் படிப்பாதால் அறிவுரை கூறி எங்களை அனுப்பிவைத்தார்கள் கண்ணியமிகு காவலர்கள். அதன்பின் 2011 ம் ஆண்டு அக்டோபர் 21ல் தடையை மீறி பாதியில் நின்ற ஆலயத்தில் தெய்வம் தேவரின் சிலைவைக்கப்பட்டது. தற்போது நீண்ட. இடைவேளைக்கு பின்பு இப்போதுதான்கோவில் வேளை முழுமையாக முடிக்க வேளை நடைபெறுகிறது.நமது தெய்வம் தேசியத்தின் வீரத்திருமகன் ஆலயம் சிலை வைக்க கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டு போராடவேண்டிய நிலை உள்ளது. இதில் எங்கள் கிராமத்தின் அனைத்துசமூக மக்களின் பங்களிப்பும் கிராம பெரியவர்களின் தியாகமும் பாராட்டகூடியது.நன்றி எனது கிராம பெரியோர்களுக்கு. 

 சிலை வைக்கப்பட்டபோதுஉள்ள போட்டோ மற்றும்

2008 ம்ஆண்டு பிப்ரவரி 14 ல் நான் அடித்து ஒட்டிய நோட்டிஸ் இது ( மாதிரி)இது நோட்டிஸ் செய்தியாக அன்று மலைமலர் செய்தித்தாளிலும் வந்ததுகுறிப்பிடதக்கது. 

Tuesday 9 December 2014

தேசபக்தி தமிழர் முழக்கம்

தேவர் ஜெயந்திக்கு டாக்ஸியில் போகத்
தடை கூடாது என்று கோரிய மனு தள்ளுபடி!
http://tamilnadu.indiaeveryday.in/fullnews---------1246-7656056.htm
Posted by: Sutha
Published: Monday, October 20, 2014, 15:49 [IST]

சென்னை: பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் தேவர் ஜெயந்தி
விழாவுக்கு வாடகை வாகனங்களில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதை நீக்க
வேண்டும் என்று கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம்
தள்ளுபடி செய்து விட்டது.
இதுதொடர்பாக தேசபக்தி தமிழர் முழக்கம் என்ற அமைப்பின் சார்பாக அதன்
தலைவர் அறிவழகன் தாக்கல் செய்திருந்த மனுவில்,
சுதந்திர பேராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
குருபூஜை, தேவர் ஜெயந்தி என்ற பெயரில் நடத்தப்படும் இந்த
நிகழ்ச்சிக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் பொதுமக்கள் ஏராளமானோர்
ராமநாதபுரம் மாவட்டம், பசுபொன் கிராமத்துக்கு வருகிறார்கள்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், வாடகை வாகனங்களில்
மாவட்டத்துக்குள் பொது மக்கள் வருவதற்கு தடை விதித்துள்ளன. எனவே, இந்த
தடையை அகற்றவேண்டும்.
தேவர் ஜெயந்திக்கு பொதுமக்கள் பலர் வாடகை வாகனங்களில் செல்ல
அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து கடந்த 7-
ந்தேதி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர், போலீஸ்
சூப்பிரண்டு ஆகியோருக்கு கோரிக்கை மனு கொடுத்தும்
இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என் கோரிக்கையை பரிசீலிக்க
தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன்
முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர்
சஞ்சய் காந்தி வாதிடுகையில், மனுதாரர் மனுவை ராமநாதபுரம் மாவட்ட
எஸ்.பி. பரிசீலித்து மனுதாரரின்
கோரிக்கையை நிராகரித்து இன்று உத்தரவிட்டுள்ளார். அந்த
உத்தரவு இமெயில் மூலம் மனுதாரருக்கும்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதை ஏற்ற நீதிபதி, அறிவழகனின் மனுவை பைசல் செய்வதாக
கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Story first published: Monday, October 20, 2014, 15:49 [IST]
English Summary
Madras HC has dismissed a petition seeking permission to hire cabs to participate Thevar Jayanthi function.
Topics: thevar jayanthi madras hc தேவர் ஜெயந்தி சென்னை உயர்நீதிமன்றம

தேசபக்தி தமிழர் முழக்கம்

தேவர் ஜெயத்தி தடையை எதிர்த்து போராடிய தேசபக்தி தமிழர் முழக்கம்.

தேசபக்தி தமிழர் முழக்கம்

தேசபக்தியையும்,
தெய்வபக்தியையும் ஒருசேர போற்றி வாழ்ந்த எம்பெருமான் ஸ்ரீ ஸ்ரீ
பசும்பொன் தெய்வீகத்திருமகனாரையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ்
அவர்களையும் மனதில் கொண்டு நம் முக்குலத்து தெய்வங்கள் மற்றும்
தலைவர்களின் ஆசியோடும். தேவரின சொந்தங்களின் ஆதரவோடும் முகநூல்
மூலம் சிறு இயக்கமாக ஆரம்பிக்கப்பட்ட தேசபக்தி தமிழர் முழக்கம் என்ற
அமைப்பு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும்
உறுப்பினர்களை கொண்டு செயல்படுகிறது. எங்களது உழைப்பில் வரும்
வருமானத்தில் சிறுபகுதியை ஒதுக்கி இன நலத்துக்காக செயல்படவுள்ளோம்.
மேலும் தேசபக்தி தமிழர் முழக்கம் ஆனது தமிழக அரசால்
அங்கீகரிக்கப்பட்டு 127/2014 என்ற பதிவு எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தேசபக்தி தமிழர் முழக்கம்

தேசபக்தி தமிழர் முழக்கம் அரசால் பதிவு பெற்ற ஒரு இயக்கம்.

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்த ஸ்ரீதேவரின்
பக்தர்களால் நடத்தப்படும் இயக்கம்.

இளைஞர்களால் வழிநடத்தப்பட்டாலும் கட்டுப்பாடுகள் நிறைந்த இயக்கம்.

தேவரே தெய்வம்

ஸ்ரீ பசும்பொன்னாரே தெய்வம்:-

கருவேலங்காட்டு மண்ணில் சந்தனமாய் பிறந்தவரே!
நெறிஞ்சிமுள்ளு பூமியிலே குறிஞ்சிய போல் பூத்தவரே!
எங்கராசா பசும்பொன் தங்கராசா!
எங்கராசா பசும்பொன் தங்கராசா!
பாலைவன தேசத்துல பால்மழையா பொழிஞ்சவரே!
உத்தமி இந்திராணி கருவரையில் உதித்தவரே!
இசுலாமு தாய்மார்பில் முதல் பாசம் அறிஞ்சவரே!
ஆண்டவன் மகன் போல வந்தீர!
நாங்க வாழவே புதுபாதை தந்தீரே!
தெற்குதெசை தேசத்துல சூரியனாய் உதிச்சவரே!
மண்ணாலும் வம்சத்துல மனசால பிறந்தவரே!
எங்கராசா பசும்பொன் தங்கராசா!
எங்கராசா பசும்பொன் தங்கராசா!
கைரேகை தீர்போழிக்க கையெழுத்து தந்தவரே!
பாட்டாளி இனத்துக்கெல்லாம் படிப்பறிவை கொடுத்தவரே!
சாதி மத பிரிவொழிக்க சபைநடுவே சொன்னவரே!
ஆண்டவன் மகன் போல வந்தீரே!
நாங்க வாழவே புதுபாதை தந்தீரே!
கலவரப்பேயொன்னு காலநிலை மாத்திடுச்சே!
அழிவில்லா ஆதவன அரசியலும் சாய்த்திடுச்சே!
சிலம்பத்துல வல்லவர சிலந்திவலை சுத்திடுச்சே!
உம் உழைப்பில் வளர்ந்த கட்சி உங்க உசுற திண்ணிடுச்சே!
நாடாள பிறந்த உம்மை நயவஞ்சகம் கொண்ணுடுச்சே!
மரணம் உமக்கென்றும் வாராது!
உங்க புகழோ பூமேலே பன்னீரு!
மரணம் உமக்கென்றும் வாராது!
உங்க புகழோ பூமேலே பன்னீரு.

எவனுக்கும் ஏன் அந்த எமனுக்கும் மண்டியிடாத மரணம் அடியேனுக்கு வேண்டும்.
பசும்பொன்னே கோவில்!ஸ்ரீலஸ்ரீ பசும்பொன்னாரே தெய்வம்.

Tuesday 2 December 2014

பசும்பொன் அருள்மிகு தெய்வீகத்திருமகனார் ஸ்ரீதேவர் தரிசனம்

தெய்வீகத்தின் சிறப்பை உலகரியசெய்த மகான் ஸ்ரீதேவர்அவர்களின்
ஆலயத்தில் 30/10/2014 அன்று அதிகாலை நடைபெற்ற அபிசேகம் மற்றும் பூசை
காணகண்கோடி வேண்டும்.

இணைவோம் நமக்கு "இணை"யில்லாமல்.

இணைவோம் நமக்கு இணையில்லாமல் தேவரினத்தின் அடுத்த நிலை
இதுவாகத்தான் இருக்கவேண்டும். தேசநலனில் அக்கரை கொண்ட இனம்
தமிழகத்தில் தேவரினம் தான். புலித்தேவரில் ஆரம்பித்து வேலுநாச்சியார்,
மாமன்னர் மருதுபாண்டியர் பசும்பொன் தேவர் வரை தேசவிடுதலைக்காகவே
தங்கள் வாழ்நாள் இறுதிவரை வாழ்ந்தார்கள். சுதந்திரத்திற்கு பின் சுயநல
அரசியலின் சூழ்ச்சியால் பசும்பொன் தேவர் தனது 55வயதிலேயே முடித்துக்கொண்டார்.
இவர்கள் தான் சார்த்த இனத்திற்காக மட்டும் என எதுவுமே செய்யாமல் வாழ்ந்தவர்கள்
ஆதே நேரத்தில் தேசத்திற்காக எல்லாவற்றையும் இழந்தவர்கள். இவர்களின்
மறைவிற்கு பின் தேவரினம்  சுயநலஅரசியல்வாதிகளால் பிரிவினைகள்
ஏற்ப்படுத்தப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட தேவரினம்
அரசானையும் சுயநல முக்குலத்தோர் அரசியல்வாதிகளால் முடங்கிபோனது.
கடந்த சில ஆண்டுகலாகவே கள்ளர் மறவர் அகமுடையார் இனங்கள் தொடர்ந்து
பல இழப்புகளை சந்தித்து கொண்டிருக்கின்றது.அதனை எல்லாம் தடுக்க
இணைவோம் நமக்கு இணையில்லாமல் என்ற எண்ணத்தோடு இளைஞர்கள்
முதலில் இணையவேண்டும். அதனை தோடர்ந்து வரும் சந்ததியும் இது தொடர
ஏதுவாக அமையும்.