Monday 31 October 2016

தேவர் திருமகான்

[http://www.naamtamilar.org/youtube-videos/] [காணொளிகள் - நாம் தமிழர் கட்சி] is good,have a look at it!

Sunday 9 October 2016

நீ ஓடி வரும் ஞான கங்கை.

ஓ...முத்துராமலிங்கமே!! நீ ஓடி வரும் ஞான கங்கை.உன்னை உணர்ந்தவர்கள் உலகில் எத்தனை பேரடா? முத்துராமலிங்கத் தேவர் எனது தம்பி.அவன் மட்டும் தற்போது இருந்தால் அவன் தலைமையில் பார்வர்டுபிளாக்கில் இணைந்து பணியாற்றி இருப்பேன்-கவியோகி சுத்தானந்த பாரதி அவர்கள்.

Friday 30 September 2016

கோரிப்பாளையம் தேவர் சிலை – சுவாரசியமான தகவல்கள்!

கோரிப்பாளையம் தேவர் சிலை-
(எழுத்து கார்த்திக்தேவர்)


கோரிப்பாளையம் தேவர் சிலை – சுவாரசியமான 13
பிண்ணணி தகவல்கள்!
* 1957 செப்டம்பர் 28 ம் தேதி மதுரையில் நடைபெற்ற
ஜனநாயக காங்கிரஸ் மாநாட்டில் தேவர் பேசிவிட்டு
வைகைக்கரை ஆற்றுப் பாலத்தில் வந்து
கொண்டிருக்கும் போது 1950 ம் வருடத்திய தடுப்பு
காவல் சட்டப்படி தேவரை கைது செய்தனர், தன்
கழுத்தில் கிடந்த ருத்ராட்சை மாலையை கழட்டி
கொடுத்துவிட்டு இங்குதான் போலீஸ் ஜீப்-ல்
ஏறினார்.
(விடுதலை இந்தியாவில் அரசியல் ரீதியாக
பழிவாங்க முதன்முதலில் சட்டத்தை ஏவிய நிகழ்வாக
அரசியலர்கள் கணிக்கிறார்கள்… பின்னாளில் இந்த
வழக்கை பயன் படுத்தியே தேவரை ஜாதிய
தலைவராக்க முயன்றனர்)
* 1966 ஜனவரி மாதம் மதுரை தமுக்கம் மைதானத்தில்
பார்வர்ட் பிளாக் கட்சி மாநாடு நடைபெற்றது அந்த
மாநாட்டில் தேவரை கைது செய்த இடத்தில்
தேவருக்கு சிலை வைக்க தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
* பார்வர்ட் பிளாக் கவுன்சிலர்கள் முத்துமாயத்தேவர்
மற்றும் சோனை சேர்வை ஆதரவினால்
நகர சபை தலைவர் தேர்தலுக்கு போட்டியிட்ட
திமுகவை சேர்ந்த s.முத்து வெற்றி பெற்றார்
.இதனால் துணைத்தலைவர் பதவியை பார்வர்ட்
பிளாக்கிற்க்கு வீட்டுக் கொடுக்கும்படி
கேட்கப்பட்டது .இதை திமுக தரப்பு மறுக்கவே
துணைத்தலைவர் தேர்தலில் இருந்து பார்வர்ட்
பிளாக் வெளிநடப்பு செய்தது .இதனால் சிண்டிகேட்
காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்தன் வெற்றி பெறுகிறார்
.இதன் மூலம் பார்வர்ட் பிளாக்கின் ஆதரவு
இல்லையென்றால் மதுரை நகரசபையை இழந்து
விடுவோம் என்ற அச்சம் திமுகவிற்கு வந்தது . இதன்
விளைவாக பார்வர்ட் பிளாக்கின் ஆதரவு அவசியம்
என்று உணர்ந்த திமுக முத்துமாயத்தேவருக்கு
நகரமைப்புக் குழு தலைவர் பதவி தந்து தன்னை
பாதுகாத்துக் கொண்டது .இதன் மூலம் பார்வர்ட்
ப்ளாக் “தேவருக்கு சிலை வைப்போம்” என தீர்மானம்
கொண்டுவந்து வெற்றிக்கரமாக
நிறைவேற்றினார்கள்.
* 1969-ல் தலைவருக்கு வெண்கல சிலை வைப்போம்,
தலைக்கு ஒரு ரூபாய் கொடுங்கள் என்று சிலை
அமைக்கும் பணியை தொடர்கிறார் மூக்கையாத்
தேவர்!
* வெண்கல சிலை வடிவமைக்க தேவையான பணம்
வசூலாக வில்லை, பணத்திற்காக தேவர்
வீசுவாசிகள் வீட்டையும் தட்டினார்,பணத்திற்காக
ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்றார்
திரு.மூக்கையாதேவர்.கூலித்தொழிலாளி முதல்
பெரியமனிதர்கள் வரை பணம் தந்தனர்
* எந்தத் தலைவனுக்கும் இல்லாத அளவில் 14
(பதினாலு) அடி உயரத்தில் தேவரது முழுவுருவ
வெண்கலச்சிலை உருவானது.
*அண்ணாதுரை இறந்த பின்பு தி.மு.க-வினார்
கோரிப்பாளையத்தில் அண்ணா சிலையை
வைக்கப்போகிறோம் என்றும், தேவர் சிலைக்கு
வேறு இடம் பார்க்கலாம் என்றும கோரினர்.
பார்வட்பிளாக் விடாப்பிடியாக இருந்து
கோரிபாளைய இடத்தை தன் வசப்படுத்தியது.
* 1974 ஜனவரி 5ம் தேதி சிலை திறப்பு விழா, சிலை
திறப்புக்கு இந்திய ஜனாதிபதி திரு.வி.வி.கிரி
யும், அப்போதைய தமிழக முதல்வரும்
அழைக்கப்பட்டனர்.
* இந்திய ஜனாதிபதி திரு.வி.வி.கிரி நம் தேசிய
தலைவர் தேவர் சிலையை திறந்து வைத்து
பேசுகையில் “தனக்கு திருக்குறளை கற்றுத் தந்தவர்
திரு.பசும்பொன் தேவர் அவர்கள்” என்றார்.
விடுதலைப் போராட்டத்தில் தேவரோடு ஒரே
சிறையில் இருந்தோம், தேவர் ஒரு மகான்”
என்றார்.நீண்டமணி நேரம் தேவரைப்பற்றியே
பேசிக்கொண்டிருந்தார். தேவரின் நிழலிலேயே
வளர்ந்த திரு.ஏ.ஆர்.பெருமாள் நன்றி கூறினார்.
* இது முழுக்க முழுக்க பார்வர்ட் பிளாக் கட்சியின்
நிகழ்ச்சி மட்டுமே. சிலை அமைந்த இடத்திற்கு
பணமும் ,அந்த சிலையை பராமரிக்க மாநகராட்சிக்கு
கட்டவேண்டிய பணமும் பார்வர்ட் பிளாக் கட்சியின்
சார்பில் செலுத்தப்பட்டது.
* கோரிப்பாளையம் தேவர் சிலை முழுக்க முழக்க
மக்கள் பணத்தில் உருவாக்கப்பட்டது இதில் அரசாங்க
பணமோ அரசாங்க உதவியோ கிடையாது.இந்த
விழா அரசாங்கம் சார்பாக நடைபெறவில்லை
.திமுகவின் ஆட்சிக் காலத்தில் கருணாநிதி
முதல்வர் என்ற முறையில் நிகழ்ச்சியில் கலந்து
கொண்டது மட்டுமே திமுகவின் பங்கு .இதில்
திமுகவின் கருணாநிதிக்கு எந்த சம்பந்தமுமில்லை
* எந்த இடத்தில் தேசியத் தலைவர் பசும்பொன் தேவரை
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜாதியத்
தலைவராக களங்கம் சுமத்தினார்களோ அதே இடத்தில்
தமிழக முதல்வர் தலைமை வகிக்க ,இந்தியாவின்
முதல் குடிமகன் தேவரின் சிலையை திறந்து
வைத்து தேவரின் களங்கம் துடைக்கப்பட்டு தேசியத்
தலைவராக அடையாளப்படுத்தப்படுகிறார்

Saturday 24 September 2016

பசும்பொன் தேவர் பொன்மொழிகள்

பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் பன்முக தலைவர் . அரசியல் ஆன்மீகம் இரண்டிலும் சிறந்து செயல்பட்டார். அவரின் சொற்பொழிவுகள் காலத்தை வென்ற கல்வெட்டுகள்