Wednesday 31 May 2017

சாதாரண மனிதரின் பசும்பொன் பயணம். நன்றி மாயத்தேவர்


அக்டோபர் 30 ஆம் அன்று பசும்பொனில் இருக்க வேணும் என்று திட்டம் .....

அக்டோபர் 29 சென்னை மாநகரில் இருந்து வெயில் அலைபேசியில் அழைக்கிறார்..
நள்ளிரவு நாலு மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில்
சந்திப்பதாக திட்டம் ..
இரவு மழையுடன் புறப்பட்டு மதுரை மாநகரை நோக்கி ......
மதுரை நோக்கி செல்லும் வழி அனைத்தும் காவல் துறை கண்காணிப்பு கடும்
பரிசோதனை ...எதற்கு இவ்வளவு பரிசோதனை ......பாதுகாக்கவா???...
எல்லா வாகனத்தையும் வீடியோ பதிவு ...
தனி வாகனத்தில் செல்பவர்கள் புறப்படும் பகுதியில் காவல் நிலையத்தில்
பதிவு இது எதற்கு பாதுகாக்கவா??...
வேறு எதற்க்குமா ?.......
ஒரு வழியாக மதுரை சென்று அடைந்து அருப்புக்கோட்டை வழியாக
தும்மு சின்னன்பட்டி எனும் அந்த அழகிய சிறு கிராமத்துக்கு வெய்லணன் உடன்
சென்று அடைந்தேன் ...
இது வரை ஒரு சாதாரண பயணம் ..
இனி மேல் தான் பல ஆச்சரியங்களை சந்தித்தேன் .....
பத்திரிக்கைகளை பல படி எழுதி வருகிறார்கள் ....
முக்குலத்தோர் முரடர்கள் , கலவரம் செய்பவர்கள் தேவர் ஜெயந்தி நாட்களில்
மது அருந்தி ஆடி கொண்டு பொது இடங்களில் முரட்டு தனமாக
நடந்து கொள்பவர்கள் என்று ஒரு பிம்பத்தை மீடியா உருவாக்கி இருக்கிறது ...
தமிழகத்தின் மற்ற பகுதி மக்கள் தேவர் ஜெயந்தி என்றால் தென் தமிழகத்தில்
கலவரமாக இருக்கும் என்று ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளனர் ...
ஆனால் உண்மை நிலை என்ன ?...
என்ன ஆச்சரியம் .......
நான் பார்த்தவரை மது அருந்திய தேவர் பெருமக்களை ஒருவரை கூட
பார்க்கவில்லை .....
மது அருந்தி தரம் தாழ்ந்த மக்கள் இருக்கும் இடத்தில மகளிர்
இருப்பதில்லை ....இருக்கமாட்டார்கள் ...இது நீங்கள் அறியாததில்லை
ஆனால் பசும்பொன்னில் என்ன நிலவரம் ...
தேவர் பெருமக்கள் குடும்பம் குடும்பமாக வந்தனர் ..
தாய், தந்தை , மகள் , மகன் ,வயதுவந்த பெண்பிள்ளைகள் ,வயது முதிர்ந்த
பெண்மணிகள் ,உடல் ஊனமுற்ற ஆண்
பிள்ளைகள் ,முளைச்சு மூணு இலை விடாத குழந்தைகள் என
ஒரு கிராமத்து திருவிழா போன்று இருந்தது ....
வேறு குற்றம் செய்கிறார்களா ?
இல்லை ....
என்னது இல்லையா ? பொய் சொல்லாதீர்கள் என்கிறீர்களா ?
இல்லை நண்பரே .....
பொய்சொல்லவில்லை ....எந்த ஒரு அரசியல் கட்சி கூட்டதிற்கு செல்லும்
தொண்டர்கள் எப்படி உற்சாகமாக இருப்பார்கள் ...அது போன்று தான்
இருக்கிறார்கள் ...
எந்த அரசியல் கட்சி கூட்டத்துக்கு தொண்டர்கள் இரு சக்கர வாகனத்தில்
மூன்று பேராக செல்லவில்லை ???? நாம் போனால் குற்றமா ???
எந்த அரசியல் கட்சி கூட்டத்துக்கு தொண்டர்கள் வாகனத்தின் மேல்
ஏறி செல்ல வில்லையா???
நாம் சென்றால் மட்டும் குற்றமா ???
எந்த அரசியல் கட்சி கூட்டத்துக்கு தொணடர்கள் கட்சி கொடியை தலையில்
கட்டிசெல்லவில்லை....??? நாம் தலையில் மஞ்சள் துண்டு கட்டினால் கையில்
மஞ்சள் ரிப்பன் கட்டினால் குற்றமா ???
ஆக இரு சக்கர வாகனத்தில் செல்வது , வானில் சத்தமிட்டு செல்வது தலையில்
ரிப்பன் கட்டி செல்வது எப்படி குற்றாமாகும் ???
இது மக்கள் கூட்டமாக ஓரிடம் செல்லும்போது இயல்பாக ஏற்படுவது.
வேளாங்கண்ணி நோக்கிவருடம் தோறும் கிருஸ்துவ பெருமக்கள் கூட்டமாக
பாதயாத்திரை செல்லும் போது இந்திய நாடு சமைய சார்பற்ற நாடு அதனால்
போது இடத்தில் செல்லும் போது அரசு இது போன்ற கட்டுப்பாடு விதிக்க
முடியுமா ???
தேவர்கள் மீது மட்டும் ஏன் இந்த அடக்குமுறை ....?
அடுத்தாக பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மூன்று நாள் திருவிழா எனும்
போது நான் பார்த்தவரை ஒரு நாளில் 20 லட்சம் மக்கள் கூடி கலைகிறார்கள் ....
மக்கள் நிம்மதியாக தேவரை தரிசிக்க முடியவில்லை ... ...
ஏன் ???
அரசு எந்திரம் வேறு எந்த விழாவும் நடத்திய தில்லையா ???
ஏன் ???
ஏன் ஒரு கட்டுப்பாடான நிர்வாக செயல்பாடு இல்லை ???
தேவர்களை காட்டுமிராண்டிகளாக மீடியாகளுக்கு சித்தரிக்க
ஒரு வாய்ப்பாக இந்த திருவிழாவை அரசு பயன்படுத்திக்கொள்கிறதா???
அப்படிதான் தெரிகிறது ....... ..
இனி மக்களின் உணர்வுகளை பார்போம் ...
தேவர்களின் உணர்வு படி அவர்கள் ஒரு தலைவனின்
விழாவுக்கு செல்லவில்லை .......
ஆம் அவர்கள் விழாவுக்கு செல்லவில்லை ....
அவர்கள் தேவர்களின் தேவனை
தேவ சேனாபதியை
அந்த
கந்தபெருமனை
அவர்களின் கண்ணின் மணியாகிய
அவர்களின் கண்முன் நடமாடிய முருகபெருமனை வழிபட செல்கிறார்கள் ...
அவர்கள் பாண்டிய குலத்தை காத்த தலைவனை காண சென்றார்கள்.
தன்னுடைய சுகங்களை தமக்காக இழந்த திருமகன் வாழும்
இடத்துக்கு ......பரம்பரை பரம்பரையாக
நன்றி மறவாத இனத்தை சேர்ந்த அந்த மக்கள் ...
நன்றிகடனாக
செய் நன்றி மறவாத உயர்குணமுடைய தேவர் பெருமக்கள்
தேவரின் திருவடியை சேவிக்க செல்கிறார்கள் ....
அவர்கள் இந்துவாக கிறிஸ்துவராக செல்லவில்லை .......
தேவராக ....
இரத்த சொந்தத்துக்காக செல்கிறார்கள் ...
அந்த செந்தில் வேலனின் அவதாரத்துக்கு மொட்டை போட்டு செல்கிறார்கள்..
வந்த உறவுகள் பசியால் வாடிவிட கூடாது என்று
வாண்டையார் , வெள்ளைசாமி தேவர் ,சேதுராமன் ,அரசகுமார் போன்ற மற்றும் பெயர்
தெரியாத மூத்த உறவுகள் அன்னமிட்டனர் ..
அன்னமிட்ட கைகளுக்கு தேவர் பெருமக்கள் வாழ்த்துகூறி சென்றனர்.
அவர்கள் இட்ட அன்னத்தின் பெருமையை மனமகிழ்ந்து கூறி
அனைவரும் அனைவரையும் அன்னமுன்ன அழைத்தனர் .
மதுரை தொடங்கி ஊர் எங்கும் தோரணம் ,
தேவர் புகைப்படம் உள்ள வீடு எங்கும் மலர்மணம்,
தெரு எங்கும் தேவர் புகழ் மணக்கும் நாட்டுபுற பாடல்கள் .
,சிலைகள் எங்கும் பால்குடம் .
ஓ இதுதான் தேவலோகமா ?...
காண கண் கோடி வேண்டும் ..
திசை எங்கும் தேவர் புகழ்....
ஊர் எங்கும் பசும்பொன்னுக்கு சென்றீர்களா என ஒருவரை ஒருவர்
விசாரிக்கிறார்கள் ..
பெண்மக்கள் , சிறுவர்கள் முதல் பெரியவர் வரை உற்சாமாக
பசும்பொன்னை நோக்கி செல்கிறார்கள் ..
செல்லும் வழி எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் ...
பசும்பொன் பயணத்தில் நான் கண்டது
அவர்கள் தேவர்கள் முருகனின் அவதார திருநாளை கொண்டாடுகிறார்கள் ...
அவர்கள் கொண்டாடுவதை மற்ற இன மக்களும் மகிழ்ச்சியுடன்
வரவேற்கிறார்கள் ......
மூத்தவர்களுடன் உரையாடியதிலிருந்து மற்ற இனமக்கள் தேவர்
இருந்தவரை பாதுகாப்பாக இருந்ததாக சொல்கிறார்கள் .......
தேவர் ஒரு தூய்மையான அப்பழுக்கற்ற துறவி என கூறுகிறார்கள் ..
குறள் கூறுகிறது
"அந்தணர் என்போர் அறவோர் "
"அவரவர் எச்சத்தால் காணப்படும் "
புரிந்தவர் புரிந்து கொள்க

நன்றி:  மாயத்தேவர்  Maya devar

Monday 15 May 2017

தேவரைப்பற்றி சில முக்கிய நபர்கள் சொன்னவை


1. மனிதனும் தெய்வம் ஆகலாம் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் தேவர்.
சொன்னவர் : (கிருபா. வாரியார்)

2. வயதில் சிறியவர், அறிவிலும், ஆற்றலிலும், அனுபவத்திலும் உலகிலேயே சிறந்தவர் தேவர். சொன்னவர் : (இராஜாஜி)

3. நாட்டு விடுதலைக்காகவும், மக்கள் நலனுக்காகவும், சமய எழுச்சிக்காகவும், அரும்பாடுபட்டவர் தேவர்.
சொன்னவர் : (ஈ.வெ.ரா.பெரியார்)

4. தேவர் ஒரு அதிசய புருஷன், கர்மவீரர், மகாயோகி.
சொன்னவர்: (என்.ஜி.ரெங்கா)

5. அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களில் ஒருமித்த இளவல் தேவர்.
சொன்னவர்:(அறிஞர் அண்ணா)

6.அதீத துணிச்சல் கொண்ட, நெறிமாறா மாமாதை, வணங்கத் தூண்டும் தேசியத்தலைவர் தேவர்.
சொன்னவர்:(காமராஜர்)

7. மிகச்சிறந்த சிந்தனைத்திறன் கொண்ட தீர்க்கத்தரசி தேவர்.
சொன்னவர் : (ஜீவானந்தம்)

8. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பும் சரி, பின்பும் சரி தேவரைப்போல் ஒரு சுத்த வீரத்தலைவர் பிறந்ததும் இல்லை, பிறக்கப்போவதும் இல்லை.
சொன்னவர்:(எம்.ஜி.ஆர்)

9. எனக்கு தெரிந்தவரை தமிழகத்தில் இருந்த பிரம்மச்சாரிகளில் மிகவும் முக்கியமானவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள், பெண் வாடையே இல்லாமல் வாழ்ந்தவர் அவர்.
உடம்பின் சுக்கிலத்தை உடம்புக்குள்ளேயே வைத்திருந்து மீண்டும் இரத்தத்திலேயே கலந்துவிடுமாறு செய்யும் யோகத்தை அவர் மேற்கொண்டிருந்தார். அவரது உடம்பின் பளபளப்பிற்கு காரணம் அது தான் என்று சொல்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட நைஷ்டிக பிரம்மச்சாரிகள் நீண்ட நாட்கள் வாழ்வதில்லை.
சொன்னவர் : ( கவிஞர் கண்ணதாசன்)

10. தமிழ் சமுதாய வீர உணர்வின் மொத்த உருவமாக உள்ளும்புறமும்  திகழ்ந்தவர் தேவர் சொன்னவர்: (கலைஞர் கருணாநிதி)

11. சக்கரவர்த்தியைப்போல் வாழவேண்டியவர் தேவர், இறுதிவரை சந்நியாசியாக வாழ்ந்தவர் தேவர்.
சொன்னவர்: (ஜெயலலிதா)

12. வாழ்க்கையை தவமாக்கி அதனை தவம்போல் வாழ்ந்து காட்டியவர் தேவர். சொன்னவர்: (வைகோ)

13. நான் கண்ட மகாத்மா பசும்பொன் தேவர். சொன்னவர்:(நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியார்)

14. தேவர் சமூகத்தினர் இந்தியாவின் வேறு எந்தச் சமூகத்துக்கும் வீரத்தில் சளைத்தவர்கள் அல்லர் என்பதை மெய்ப்பித்தவர் பசும்பொன் தேவர்.
சொன்னவர்:(கவியோகி சுத்தானந்த பாரதியார்)

15. முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் உடல் தோற்றம்,கம்பீரமான வெண்கலக் குரல்,சந்தன நிறம், ஆகியவற்றோடு மேடைகளில் தோன்றி, வாய் திறந்து செந்தமிழில் முழங்கி முடிக்கிறபோது,""கோழையுமௌ வீரனாகித் திரும்புவார்கள்"".
சொன்னவர்:(தா.பாண்டியன்)

16. நடிகர் தியாகராச பாகவதர் முருகப்பெருமான் பற்றி பாடல் எழுதி அதனை தேவர் முன் படித்து விட்டு முருகனைப் பற்றி பாடல் எழுதினேன் அதை நடமாடும் முருகன் முன் படித்தேன் எனது ஜென்மம் சாபல்யம் அடைந்தது என்று கூறியிருக்கிறார்.!.
ஆம் நமது தெய்வத்தை முருகனாகவே உருவகப்படுத்தியிருக்கிறார் அவர்..!

'சீர்முத்து ராமலிங்க தேவர் பெருமைதனை
பாரும் விசும்பும் பணிந்தறியும் - ஆரும்
அவருக்கு இணையில்லை அன்பு வடிவாய்
உவகையுடன் வாழ்ந்தார் உயர்ந்து.
பசும்பொன் தேவர் குறித்து (கிருபானந்த வாரியார்)கூறியது..!!

வாழ்ந்தால் உங்களைப்போல் வாழ வேண்டும் இல்லையெனில் உன் நிழலடி இளைப்பாற வேண்டும்..!

முருகப்பெருமானை பார்த்ததில்லை யாரும் நேரில்,  ஆனால் நாங்கள் உங்களை பார்க்கிறோம்..!!
நேரில் வந்த தெய்வம் எங்கள் ஐயா தேசியத்தலைவர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் திருமகனார்....

Friday 12 May 2017

பசும்பொன் தேவர் மகிமை

மணிநாகப்பா சென்னையை சேர்ந்த சிற்பி. பசும்பொன் தேவர் மீது பக்தி கொண்ட குடும்பம். அவரின் மகளுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு  முத்துராமலிங்கம் என பெயர் வைத்தார். ஆனால் சிற்பியின் மகனுக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. மணிநாகப்பா சிற்பி தனது மகனை அழைத்து பசும்பொன் தேவர் குருபூசைக்கு சென்று தேவர் திருமகனை வணங்கி வா வேண்டுதல் நிறைவேறும் என்றார். மகனும் குருபூசைக்கு சென்று தேவரை வணங்கி வந்த பின் நினைத்த வேண்டுதல் நிறைவேறும் நிலைவந்தது.அவரது மகன் மீண்டும் அடுத்த குருபூசைக்கும் தேவரை வணங்க பசும்பொன் சென்றார். பசும்பொன்னில் இருக்கும்போதே அவருக்கு மகன் பிறந்த தகவல் போன் மூலம் வந்தது.  அந்த குழந்தைக்கு ருத்ரராமலிங்கம் எனப்பெயர் வைத்தார் அவர். தேவர் மீது மிகவும் பக்தி கொண்ட அந்த சிற்பி குடும்பத்தினர் வன்னியர் சமூதாயத்தை சார்ந்தவர்கள். இக்குடும்பத்து சிற்பிகள் செய்த சிலைகளில் கோரிப்பாளையம் தேவர் சிலை, கீழத்தூவல் தேவர் சிலை, கொல்கத்தா தேவர் சிலை, அந்தமான் தேவர் சிலை போன்றவைகளும் அடங்கும். தேவரின் சிலை முதல் முதலில் செய்தவர்களும் இவர்கள் தான்.

Thursday 11 May 2017

தீர்க்கதரிசி தேவர்

ஆசிய கண்டத்தில் இன்று நடந்துக் கொண்டிருக்கும்
அனைத்து அரசியல்,பொருளாதார சமூக பிரச்சனைகளையும்,
50 வருடங்களுக்கு முன்பே எடுத்துக்கூறிய மகா தீர்க்கதரிசி. தமிழர்களின் ஒற்றுமையையும் சமத்துவத்தையும்,
சங்கத் தமிழர்களின் சமதர்ம சமூக அமைப்பினை நடை முறைப் படுதியவர். ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசியல் அடையாளத்தை தந்தவர்,
பசும்பொன் தேவரின் அரசியல் சுதந்திர தமிழர் அரசியலின் அடையாளம். அரசியலிலும், தனிப்பட்ட தனது வாழ்க்கையிலும் பரிபூரண ஒழுக்கத்தையும் . தீரத்தையும் வாழ்ந்துக் காட்டிய மாமனிதரின் குரு பூஜையினை தமிழகமே கொண்டாட வேண்டும்.
ஒவ்வொரு நூற்றாண்டுகளில் இந்த மண்ணில் யுக புருஷர்கள் தோன்றுவார்கள். 19 ஆம் நூற்றாண்டில் சுவாமி விவேகானந்தர், இந்து மதத்தை காலத்திற்கு ஏற்ப , Brahminization என்கிற மூட சடங்குகள் இருந்து மாற்றி, கல்வி, சுகாதாரம் என்று, கிறிஸ்துவ Missionaries போன்று, இராமாகிருஷ்ணா மடங்களை உருவாக்கினார். 10 ஆம் நூற்றாண்டில் இருந்த மெல்ல, மெல்ல அழிக்கப்பட்டு வந்த, தமிழர் சமதர்ம அரசியலுக்கு, மறுபடியும்,ஒரு அடையாளத்தை ஏற்படுதியாவர் பசும்பொன் தேவர். நேருவின் பார்ப்பன அரசியல் அவரை சாதி தலைவராக முயற்சித்த போது, திராவிடக் கழகங்கள் அவரை சாதித் தலைவராக முத்திரைக் குத்தி, தமிழர் அரசியலை வளர விடாமல், தமிழினத்தை அழித்துக் கொண்டு வருகிறது. இன்று ஈழ தமிழர் அழிவும், காலங்கடந்து மக்களிடையே ஏற்பட்டு வரும் திராவிட எதிர்ப்பும், மாணவர் போராட்டமும்,அரசியல் ரீதியாக திராவிட அரசியலை யோசிக்க வைக்கிறது.
தமிழகத்தில் பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வந்த பல தடைகளை அரசியல் ரீதியாக தகர்த்தெறிந்தவர் தேவர் அய்யா அவர்கள், ஆனால் கோயபால்ஸ் பிரசாரத்தில், தமிழர்கள் வாழ்வையே திராவிடக் கூட்டங்களுக்கு தாரை வார்த்து விட்டு இன்று,செயல் படக் கூட இல்லை யோசிக்க ஆரம்பிக்கம்போதே பயப்படுகிறது திராவிட அரசியல்.தமிழ், தமிழ் என்று தமிழரின் மொழிப்பற்றை ஊதி பெரிதாக்கி, தமிழர் வாழ்வை மட்டுமல்ல தமிழர் கலாசாரம், தமிழ் நில, நீர் வளங்கள், தமிழகத்தின் வாழ்வாதாரங்கள்இவற்றையெல்லாம் அழித்துக் கொண்டு வருகிறது. ,எல்லாவற்றிக்கும் மேலாக தமிழர்களின் உழைக்கும் மனவலிமையை ,இலவசங்களை கொடுத்து, அழித்து வருகிறது இந்த திராவிட அரசியல். 5000 ரூபாய் வீட்டுச் சாமன்களைக் கொடுத்து ,500000 லட்சத்திற்கு அவனது உயர் கல்வியை வைத்து, அவனை முன்னேறவிடாமல் செய்கிறது. மருத்துவம் எட்டாக் கனிதான். வளர்ந்த நாடுகளில், கல்வியும் சுகாதாரமும்தான் இலவசமாக சாதாரண மக்களுக்கு எளிதில் கிடைக்க வழி செய்யும்.ஆனால் இந்தியா பொருளாதாரம் தலைகீழானது.
பசும்பொன் தேவர் அய்யாவைப் பற்றி தமிழர்கள் எத்தனைப் பேருக்கு தெரியும்? அவரது சொற்பொழிவுகள் எவ்வளவு கிடைத்துள்ளன? இன்றளவும் அவரது கொள்கைகள் பற்றி என்ன தெரியும்? வெள்ளக்காரனுக்கு மட்டுமல்லாது அவனது தயவை நாளும் போற்றிய நமது பின்னால் காங்கிரஸ் தேசியவாதிகளுக்கும் அவர் சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மிகப்பெரிய ஆளும் காங்கிரஸ்க்கு எதிர்க்கட்சியாக இருந்த .socialist கட்சியான ,நேதாஜியின் Forward Bloc-கின் தேசிய தலைவர் பசும்பொன் தேவர். அவர் தனக்காக பிரசாரம் செய்யாமலே தொடர்ந்து மக்களின் பேராதரவுடன் ஒரு லட்சம் வாக்கு வித்யாசதில் மிகப்பெரிய வெற்றியினை பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் பெற்ற ஒரே இந்தியா தலைவர் ஏன் உலகளவில் ஜனநாயக தேர்தல் வெற்றிகளில், கின்னஸ் ரெகார்டில் இருப்பவர் தேவர் அய்யா என்பது எத்தனை இளையவர்களுக்கு தெரியும்? பெற்றத் தாயும் சொந்த சாதிக்காரனும் ஆதரிக்காத, காமராஜருக்கு ஆட்டுக்குட்டி வாங்கிக் கொடுத்து, அதற்கு காமராஜர் பெயரில் வரி கட்டி பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெறச் செய்தவரை, பதவிக்காக தனது சாதிக்காரர்களின் கள்ள மார்க்கெட், கருப்பு பண வியாபார வளர்ச்சிக்காக, நேருவின் சதிக்கு உடன்பட்ட காமராஜரின் நன்றிகெட்ட, நம்பிக்கை துரோகம் எத்தனை பேருக்குத் தெரியும்? முதுகுளத்தூர் கலவரத்தை உருவாக்கி, தேவர் அய்யா அவர்கள் மீது அன்றைய காமராஜர் காங்கிரஸ் கொலைக் குற்றம் சாட்ட ,
அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பாகி , விடுதலையான பிறகும்
அதேப் போன்று மிகப் பெரிய வாக்கு வித்யாசதில்
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது
எத்தனை இளைஞர்களுக்கு தெரியும்?
பத்திரிக்கைகள், ஆட்சிகள்,கட்சிகள், ஊடகங்கள் போற்றிப் புகழ் பாடும் the so called தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஏன் இந்திய அளவில் வேறு எந்த தலைவர்களுக்கும் வராத மக்கள் கூட்டம் தேவர் ஜெயந்திக்கு வருகிறதே என்ற பொறாமையில் குருபூஜையை தடை செய்ய வேண்டும் என்று சமீபகாலமாக பிரசாரம் செய்யப் படுவது ஏன்? யோசியுங்கள்.
சுயநல சூத்திர சாதி அரசியலை தங்களது நாயக்க பாதுகாப்புக்கு பயன்படுத்திக்கொண்ட, இந்த திராவிட அரசியல் இன்றுவரை பசும்பொன் தேவரைப் பற்றி ஏன் இருட்டடிப்பு செய்கிறது?
டி‌வி‌எஸ், மீனாக்ஷி மில்ஸ் என்று, பிரிட்டிஷ்காரன் தயவில் தொழில் நடத்திய நமது அக்கிறஹாரம் பெரியவா, 20 மணிநேரம் வேலை வாங்கி தொழிலாளர்கள் வாடி வதக்கிய அக்கிரமத்தை தேவர் எதிர்த்து தொழிற்சங்கம் ஆரம்பித்து போராடினார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
பெரியவாளுக்கு ஆதரவாக மிகப்பெரிய பெரியவா ஆச்சாரியார் ராஜாஜி அவர்கள் இருந்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இன்றைக்கு தலித் அரசியலை மறைமுகமாக வளர்த்துவரும் பார்ப்பன இயக்கங்கள்,ஊடகங்கள் தேவரின் குருபூஜயை தடை செய்ய வேண்டும் என்று பரிதவிப்பது ஏன்?
பத்திரிக்கைகள் மூலம் தமிழர் நலம் பேசும் இவர்கள் குருபூஜையை தடை செய்வதால் சாதிக் கலவரங்கள் இருக்காது என்று கூற முடியுமா?
என்னவோ தமிழகத்தில் மட்டும்தான் சாதிகள் இருப்பது போலவும், இந்தியாவில் இல்லாது போலவும் அலட்டுகிறார்கள்?
இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும்,சாதி இன அரசியல்தான். பார்ப்பனர்கள் யுகாயுகமாக நடத்துவது என்ன அரசியல்?
பசும்பொன் தேவர் கூறிய அறிவுரைகளையும் பொன்மொழிகளையும் பெரியார் சொன்னார்,அண்ணா சொன்னார் இவர் சொன்னார் அவர் சொன்னார் என்று இன்றைய தேதி வரை ஏற்றி சொல்லும்
இந்த ஊடக பொய்யர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று
எத்தனை பேர் யோசித்திருப்போம்?
தமிழகத்தில் ஊடகங்கள் யாரிடம் இருக்கிறது?
பசும்பொன் தேவரைப் பற்றி எந்தவிதத்திலும் தமிழர்களுக்கு, உலகிற்கு தெரியக் கூடாது என்று தமிழ் பேசும் பிற சாதிகள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் ஏன் முழுவதுமாக மறைக்கின்றன?
என்பதையாவது யோசித்திருப்போமா?
இத்தனை கஷ்டப்பட்டு மறைத்தும் மக்கள் ஏன் இத்தனை வருடங்களாக தொடர்ந்து அவரது குருபூஜையை மாபெரும் திருவிழாவாக வணங்கி வருகிறார்கள். அவரது கட்சி காணமற் போய்விட்டது, அவரை சாதி வெறியராக, சாதித் தலைவராக சிறுமைப் படுத்தியும், எந்த அரசியல் அரசாங்க ஊடக ஆதரவு, இல்லாமல் மக்கள் ஏன் தேவரை கொண்டாடுகிறார்கள்?
அவரது குருபூஜை குலைப்பதற்கு என்னென்னவோ செய்து பார்த்தும் பாமரத் தமிழன் நன்றி மறவாமல் இன்றும் வருவது ஏன் யோசியுங்கள் எனது தமிழ் இளைஞர்களே.
எந்தவித சாதி வேறுபடும் இன்றி பசும்பொன்னிற்கு வந்து அவரை கும்பிட்டு, மொட்டையடித்து தெய்வமாக கும்பிடுகிறானே ஏன் ?என்று யோசியுங்கள்.
இன்று தமிழுணர்வுடன் மேலோங்கி நிற்கும் தமிழர்களுக்கு
அரசியல் மாற்றம் வேண்டும் என்று என்னும்
ஒவ்வொரு தமிழ் இளைஞர்களும் தெளிவாக
தேவரை பற்றி மட்டுமல்ல 1800 க்குப் பிறகு பாளயக்காரர்களை அழித்த பிறகு பிரிட்டிஷ் செய்த சதிகளையும், அன்றைய அரசியல் நிலைகளையும் , குற்ற பரம்பரை சட்டம் ஏன் வந்தது? என்கிற அரசியல், பொருளாதார ,சமூக மாற்றங்களை கண்டிப்பாக
தெரிந்துக் கொள்ளுங்கள்.
தென் தமிழ் நாடும் சாதாரண ஏழை விவசாயிகளும் ,தாழ்த்தப்பட்ட மக்களும், குற்ற பரம்பரம்பரை சட்டம் என்கிற பெயரில் பிரிட்டிஷ் காலனிகளுக்கு கேள்வி வரை முறையற்று ஏற்றுமதி செய்த போது அதைப் பற்றி எந்தவித கவலையுமில்லாமல், தங்களது விசுவாசத்தை விற்ற கூட்டம், மக்கள் எழுச்சிக்கு பிறகு பிரிட்டிஷ் ஆட்சி மாறியவுடன்,தங்களது விசுவாசத்தை காங்கிரசுக்கு விற்ற கூட்டம் இன்று தமிழ் சாதிகளைப் பற்றி பாவம் கவலைப்படுகிறது! பிரிட்டிஷ்காரன் காலைப் பிடித்து தங்களை 1920 சத்திரியர்கள் என்று gazatte- ல் பதிவு செய்த சாதிகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். Minto – Morley அறிக்கையின்படி இந்தியர்கள் ஆட்சியில் பங்கேற்க, பிரிட்டிஷ் பாராளுமன்ற முறையில் வந்த தேர்தலுக்கு, பார்பனர்களும், ஜஸ்டிஸ் கட்சி என்ற ராஜாக்களும் எப்படியெல்லாம் அலைந்தார்கள் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.
1900களில் இருந்து 1947வரை உயர் கல்வி என்பது, பார்பனர்களுக்கும், வட தமிழக வெள்ளாளர்களுக்கும் மதம் மாறிய சாணர்களுக்கும், ரெட்டிகளுக்கும் கம்மாவார் நெல்லூர் நாயுடுகளுக்குமே மட்டுமே வழங்கப்பட்டது என்ற உண்மையை தெரிந்துக் கொள்ளுங்கள்..
1970களுக்குப் பிறகுதான் தென் மாவட்டங்களில் உயர் கல்வி வந்தது. அதுவும் அறிஞர் அண்ணா இறந்தபிறகு நின்றுவிட்டது.
காங்கிரஸ் தங்களை ஒடுக்கப்பட்ட மக்களின் போராளிகள் என்ற பொய் பிரசாரத்தை அன்றே கூறி வந்ததை தெரிந்துக் கொள்ளுங்கள். மக்களுக்காக பாடு பாடுவேன் என்று சொன்ன காங்கிரஸ் பிரிட்டிஷ்க்கும், முதலாளிகளுக்கும் எப்படியெல்லாம் சலாம் போட்டது, காங்கிரஸ் வளர பாடுபட்ட தேவர் அவர்கள் காங்கிரஸின் காலைவாரிவிடும், மக்கள் விரோத போக்கை முறியடிக்க நேதாஜியின் ஃபார்வார்டு பிளாக் –கை மிகச் சிறந்த எதிர்க் கட்சியாக உருவாக்கினார் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
சங்க கால தமிழக சாதிய அமைப்பு, நாயக்கர்கள் காலத்தில் இருந்து ஆரம்பித்த மாற்றங்கள் பிரிட்டிஷ் காலத்தில் ஏற்பட்ட சதிகள் இவற்றை எல்லாம் தெளிவாக புரிந்துகொண்டு செயல் பட்டால்
தமிழர் அரசியல் மலரும்.சுதந்திர ஈழமும் அமையும்.
வாழ்ந்த காலம் வரை தமிழர் வாழ்வு, சிறு விவாசயிகளின் பாதுகாப்பு, கள்ள மார்க்கெட், கருப்பு பணம் இவற்றை எதிர்த்த பசும்பொன் தேவரை, கம்யூனிஸ்ட் தோழர்கள் மறந்தது ஏன்?
நேதாஜி ஃபார்வார்டு பிளாக் ஆரம்பித்து INA ஆரம்பிக்கப் போய்விட்டார்,
தேவர் தான் ஃபார்வார்டு பிளாக்கை மிகச் சிறந்த எதிர் கட்சியாக உருவாக்கி, பிரிடிஷ்க்கும் நேருவிற்கும் தமிழக திராவிடக் கட்சிக்கும்
சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
தேவரை முற்றிலுமாக தமிழக அரசியலில் இருந்து மறைக்க, இருட்டடிப்பு செய்வதன் காரணம் ஏன் என்று யோசியுங்கள்.?
இந்த தேசத்தின் சாதாரண மக்களின் வாழ்வுக்காக அவர்கள் எந்தவிதத்திலும் சுரண்டப் படக்கூடாது, அவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய பொருளாதார சுதந்திரம் மறுக்கப்படக் கூடாது, எல்லாவற்றிற்கும் மேலாக ஊழலும்,அதை வளர்க்க சுயநல சாதிய மத அரசியலையும் முழுமையாக எதிர்த்த, ஒப்பற்ற ஒழுக்க நெறிகளின் உன்னதமான தலைவர், அரசியல் முதல் ஆன்மிகம் வரை, தெளிவாக, எளிமையாக மக்களுக்கு புரியவைத்து, விளக்கிச் சொல்லிச் சென்ற அவரது சொற்பொழிவுகள் எங்கே?.
அவரை இருட்டடிப்பு செய்வது மட்டுமல்லாது அவரை அவமானப்படுத்துவதும், இந்த திராவிடர் சாதி அரசியலுக்கு
முழுநேர வேலையாக போய்விட்டது.
தமிழர் உணர்வு பொங்கும்போதெல்லாம் அவரது சிலையை சேதப்படுத்தி, சாதிக் கலவரதிற்கு வழிவகுப்பது ஏன்? என்று
சற்று யோசிப்போம்.
இவர்களது இந்த தமிழர் விரோத அரசியலுக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது 1990களில் இருந்து வளர்ந்து வரும்
தலித் அரசியல். வர்க்க ரீதியாக போராட வேண்டிய கம்யூனிஸ்ட்கள், தலித் அரசியலை மையமாக கொண்டார்கள்.
தனியாக தலித் அரசியல் வளர்ந்த பிறகு கம்யூனிஸ்ட்கள் காணாமற்போனார்கள். தேவர் சொன்னது socialism – சமதர்ம அரசியல். பாடுபடுபவன் எந்த சாதி என்று அவர் பார்ர்க்கவில்லை, ஒதுக்கப் பாடுபவன் எந்த சாதி என்று அவர் பார்க்கவில்லை, ஒடுக்கப்படுபவன் உரிமையை இழந்தவனை ,எந்த சாதி என்று பார்க்கவில்லை, மக்கள் உழைப்பை, அவர்களது வாழ்வாதாரத்தை, பொருளாதார் ரீதியாக கள்ள மார்க்கெட் ,கலப்படம், கருப்பு பணம் என்று அரசியல் செய்பவர்களை எதிர்த்தார். அதைத்தானே இன்று நாம் அனைவரும் எதிர்க்கிறோம். “குறைந்தபட்சம் உங்களின் குழந்தைகைளின் நலனுக்காக ஊழலைக் குறையுங்கள்”.என்றார். இன்று நம் குழந்தைகள் பாதுக்காப்பக இருக்கிறார்கள் என்று நம்மால் உறுதியுடன் கூற முடியுமா?
எனது முப்பாட்டனும்,பாட்டனும், தெளிவாக ,அனைத்து அடக்குமுறைகளையும் மீறி சுதந்திர தமிழர் அரசியல் செய்தார்கள். உரிமைக்காக போராடினார்கள். நன்றிக் கெட்ட, நம்பிக்கைத் துரோகத்தை இன்றுவரை ஒதுக்கிவைத்து உள்ளார்கள்.
அதுதான் இன்றைய தமிகக்க காங்கிரஸ் நிலை.ஆனால் சுதந்திரம் அடைந்தவுடன் எனது படித்த அப்பன்கள்தான் சாதி அரசியலையும், அடிமை அரசியலையும் திராவிட அரசியல் என்று கூறி அனைத்து வகையான அயோக்கிய சுயநல, தன் குழந்தைகளையே அழிக்கும் அரசியலை வளர்த்து உள்ளார்கள். இன்று எம் இனத்திற்கு நல்ல தலைமையை கூட இவர்களால் தர இயலவில்லை.
தமிழர் உணர்ச்சிகளை போஸ்டர் ஒட்டி அரசியலாக்கும் இவர்களை தமிழர்காலால் என்ன செய்ய முடிந்தது?
தேவரை இருட்டடிப்புச் செய்து இன்றுவரை தமிழகத்தில் அரசியல் செய்யும் இந்த தமிழர் ஆதரவு அரசியல் கட்சிகள் ஏன்எடுபடவில்லை? அவர்களை ஏன் மத்தியிலும் மாநிலத்திலும் மக்களும் கண்டுக்கொள்ளவில்லை?
பத்திரிக்கைகளின் பக்கம் நிரப்பவும், தங்களுக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்கிற மரியாதை தவிர எந்த விதத்திலும்
இவர்களால் அரசியல் மாற்றத்தை ஒரு இன்ச் கூட கொண்டு வர ஏன் முடியவில்லை?.
பசும்பொன் தேவரை தனிமைப் படுதியவர்கள் இன்று மக்களிடம் இருந்து தனிமைப் பட்டுக்கொண்டார்கள். ஈழத் தந்தை செல்வா தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்ட போது அமைதி காத்த ஈழ தமிழர் அரசியலைப் பார்த்து கூறியது நினைவு வருகிறது, “இன்று உமக்கு ,நாளை நமக்கு”.
உலகெங்கிலும் தங்களது உழைப்பால் அந்தந்த நாட்டு வளத்தை பெருக்கிய தமிழன் இன்றும் அடிமைத் தமிழனாக அரசியல் பொருளாதார நிலையில் மிகக் குறைந்த அளவே முன்னேறியுள்ளான். அவனுக்கு எங்கும் அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. தனிப்பட்ட சுயநலவாதிகளுக்கே அதிகாரம் தரப்பட்டு அவர்கள் மூலமே தமிழினம் அழிக்கப் படுகிறது என்பதை மிகத் தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள் ,
பசும்பொன் தேவர் அவர்களைப் பற்றி முழுவதுமாக தெரிந்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் காங்கிரஸ்,திராவிட நயவஞ்சக அரசியல் எப்படி ஒரு மாபெரும் தமிழர் வாழ்வாதாரத்தை, பொருளாதாரத்தை அரசியலை, கலாச்சாரத்தை முற்றிலுமாக அழித்தது என்று தெரிய வரும்,புரிய வரும். மகான்களின் வாழ்க்கை என்றும் மக்களுக்கு பாடமாக இருக்கும். இன்று அனைத்து விதத்திலும் நம்மை அழித்துக் கொண்டு இருக்கும் இந்த அயோக்கிய அடிமை இனத் துரோக அரசியலை அப்புறப் படுத்த நாம் பசும்பொன் தேவர் அவர்களது குருபூஜையை தமிழகமே கொண்டாட வேண்டும். அது சாதிக் கூட்டம் அல்ல தமிழர் கூட்டம் என்று புரிய வைப்போம்..
இன்று தமிழினம் அனைத்து வகையிலும் அழிக்கப்பட்டு வருகிறது. சிங்களவன் செய்வது இராணுவ அழிப்பு. இந்தியா செய்வது வாழ்வாதார அழிப்பு, மலையாள,கன்னட, தெலுங்கர்கள் செய்வது பொருளாதார அழிப்பு. இந்த திராவிடக் கட்சிகள் செய்வது சமூக ,கலாச்சார அழிப்பு. ( இதனைப் பற்றி விரிவாக பின்னர் எழுதுகிறேன்) இந்த அழிவுகளிருந்து எமது இனத்தின் எதிர்காலம் காப்பாற்ற பட வேண்டுமானால் எமது இளைஞர்கள் 10ஆம் நூற்றாண்டிலிருந்து நமது தமிழக அரசியலை அறிய வேண்டும்.. தமிழக எல்லைகள் குறுக்கியதன் காரணம் புரிய வேண்டும்.
எனது சாதாரண தமிழர்கள் அனைவருக்கும்,
தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கும் சேர்த்தே சொல்லுகிறேன்
இன்றைய பார்ப்பன ஊடகங்கள்
தேவர் குருபூஜையை தடைச் செய்ய வேண்டும் என்று
பிரசாரம் செய்வது உங்கள் நன்மைக்கோ, உரிமைக்கோ அல்ல, இருக்கும் ஒரே தமிழர்களின் அரசியல் அடையாளத்தை அழிப்பதற்கே, ஈழம் அழிந்தது, தமிழர்களின் அனைத்து அடையாளங்களும் அழிந்தன. தமிழக பரதவர் குலம் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகிறது,
150 வருடங்களாக தமிழால் இணையாத THE Hindu இன்று தமிழால் இணைகிறார்கள்.
நல்ல வேடிக்கை. நாம் தமிழால் இணைந்தது போதும்,
இனியாவது தமிழர்களாக இணைவோம்.
தலித் அரசியல் தனிப்பட்ட அரசியாலாகி விட்டது. அவர்கள் தங்களது இனத்தை விட்டு மெல்ல மெல்ல விலகி வருகிறார்கள்.
இந்த நிலை இன்று இந்தியா முழுவதும் உள்ளது.
இமானுவேல் சேகரன் பிரச்சனை கால ஓட்டதில் காணாமற் போய்விடும். இன்று தலித் அரசியலுக்கு எதிர் அரசியலும் தன்னால் உருவாகி வருகிறது.. That is Political science. every action will have a same and equal reaction இதன் விளைவுகளைக் காலம் சொல்லும். அதை பற்றி நாம் அதிகமாக அலட்டிக் கொள்ள வேண்டாம்.
அதனை அரசியல் ரீதியாக எதிர் கொள்ள வேண்டும்.
அதற்கு மாற்றி யோசிக்க வேண்டும்.
தேவர் ஜெயந்தியில் கலந்துகொண்டு திரும்பியவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, தமிழக அரசு, அனைத்து உதவிகளும் செய்து, தற்போது அரசு வேலையையும் தந்துள்ளது. நன்றி. அந்த பாவப்பட்ட மக்களுக்கு இது ஒரு ஆறுதல்.
தேவர் குரு பூஜைக்கு இந்த வருடம் தடை வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி குரு பூஜை வழக்கம் போல நடக்கும். ஏனெனில் இந்த அரசியல் ஓட்டுப் பொறுக்கிகள் தேவர் குருபூஜையை அரசியல் ஆக்குவதற்கு முன்பே பாமரத் தமிழன் தனது தன்னிகரில்லா தலைவனுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறான்..
மக்களும் தெளிவாகவும் கவனமாகவும் இருக்கவேண்டும். உண்மையான தமிழர் வாழ்வில் ,தமிழர் அரசியலில்,
விடிவு வேண்டும் என நினைக்கும் எனது எதிர்க்கால தமிழினமே,
எந்த சாதியாக இருந்தாலும் ,சரி தமிழின உணர்வுடன்,
ஒப்பற்ற தமிழின தலைவனை வணங்கி,
விலைபோகாத வீரமும் விவேகமும் நிறைந்த மகாஞானி,
மக்கள் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை வணங்க வாருங்கள். . வாருங்கள் எமது இளையதமிழகமே, தம் மக்களுக்காக தன்னையே தந்த அந்த தன்னிகரில்லா தமிழின தலைவருக்கு நமது அன்பை, மரியாதையைச் செலுத்த வாருங்கள்.
நல்லதொரு அரசியல் மாற்றம் உருவாக அவர் வழிக்கட்டுவார்.
பசும்பொன் தேவரின் குரு பூஜை ,தமிழர்களின் ஒற்றுமையை,அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நமது குழந்தைகளுக்கு பசும்பொன் தேவர் அய்யவைப் பற்றித் தெரிய வேண்டும். வரும் தேவர் குரு பூஜை அன்று ஊர் தோறும் குழந்தைகளுக்கு தேவர் படம் போட்ட சிறு கொடிகளைச் சட்டையில் செருகி ,சாக்லேட் கொடுத்து மகிழ்வோம்.
சுதந்திரம் போன்று சுதந்திர தமிழர் அரசியலை உருவாக்குவோம். இதனை இளைய தமிழினம் சாதிக்க வேண்டும். சாதிக்க முடியும். நல்ல தலைவனை போற்றினால் நன்மை விளையும்.

நேதாஜியை விமர்சிக்கும் தகுதி திராவிட கழகத்துக்குகிடையாது

நேதாஜியை விமர்சிக்கும் தகுதி திராவிட கழகத்துக்குகிடையாது

Wednesday 10 May 2017

1952- சட்டப்பேரவை கூட்டத்தில் தேவர் பேசியது

 தனி நபர் சத்தியாகிரகம் என்பது என்ன ?

மக்களை தாங்கள்
ஏதோ சுதந்திரத்திற்கு பாடுபட்டு கொண்டே இருப்பதுப்போல்
ஏமாற்றுவதற்காக நடத்தப்பட்ட அரசியல் நாடகமே தவிர
வேறு ஓன்றுமில்லை.  மதில் மேல் பூனைப்போல் அந்த பக்கமும்
இன்றி இந்த பக்கமும் இன்றி அதாவது வெள்ளையனையும்
தாக்கி பேசாமல் அரசியல் கபட நாடகம் நடித்தார்கள்.
ஒருவன் சத்தியாக்கிரகம் செய்யப் போகிறான் என்றால்.. அதை அவன்
முன்பே போலீஸ்க்கு சொல்லுவான்.
அதன்பிறகு உறவினன் ஒருவன் மாலையை வைத்துக்கொண்டு
நிற்பான்.பக்கத்தில் போலீஸ்காரன்
வாரண்டை வைத்துக்கொண்டுயிருப்பான்.
சத்தியாக்கிரகம் செய்யபவன்
எழுதி வைத்துக்கொண்டிருப்பதை படித்தவுடன்.. போலீஸ்க்காரன் "
நீங்கள் பேசியது தப்பு ! உங்கள் பேரில் வாரண்ட்
கொண்டு வந்திருக்கிறேன்.. என்னுடன் வாருங்கள் என்பான்,
உடனே அவனுடைய உறவினன் " போய் வாருங்கள் "
என்று மாலையைப் போடுவான்,
இவனோ போலீஸ் லாரியில் ஏறி உட்கார்ந்து கொள்வான்.
இப்படியாக கேலிக்கூத்தான கேலிக்கூத்து நாடகமாய் போனதே இந்த
சத்தியாகிரம்.

Sunday 7 May 2017

பசும்பொன் தேவர் வரலாறு

முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர். ஆன்மிகவாதியாகவும் சாதி எதிர்ப்புப் போராளியாகவும் சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்க்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் தேவரை வணங்குகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் வருடம்தோறும் கலந்துகொண்டு தேவரை வணங்குகின்றனர்.[1][2]

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார். இக்கட்சி நேதாஜி தேவருடன் இணைந்து துவக்கியதாகும். தேவர் மூன்று முறை இக்கட்சி சார்பாக இந்திய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்[3][4][5] .

1957 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினாரான தேவரை மதுரையில் காவல்துறை கைது செய்தது. இரு வாரங்களுக்கு பிறகு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக தேவர் சேர்க்கப்பட்டு, பின்னர் இந்த கொலைக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமா என்று சந்தேகிக்கக் கூட முடியாது என்று கூறி நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

குழந்தைப் பருவமும் குடும்ப வாழ்க்கையும்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தமிழ்நாட்டின் தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில் அக்டோபர் 30, 1908 -ல் உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் பிறந்த ஒரே மகனாவார். இவரது தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானார். இவர் தாயை இழந்தபின்பு இவரது தந்தையார் குறுகிய காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார். அந்த இரண்டாவது மனைவியாரும் இறந்த காரணத்தினால் உக்கிரபாண்டி தேவர் மீண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்டார். இதனால் முத்துராமலிங்க தேவர் இவரது உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பில் பசும்பொன்னை அடுத்துள்ள கல்லுப்பட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார்.

இளமைப் பருவத்தில் தேவரவர்கள் குழந்தைசாமிப்பிள்ளை என்கிற குடும்ப நண்பரால் கல்வி பயிற்றுவிக்கப்பட்டார். குழந்தைசாமி பிள்ளை தேவரின் பள்ளிப்படிப்பிற்கு மிகுந்த சிரத்தை எடுத்து தனிக்கல்வி பயிற்சி அமைத்துக் கொடுத்தார். பின்னர் ஆரம்பப்பள்ளி படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். பின்னர் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார்.

1924ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் அவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க இயலவில்லை. தேவரின் தந்தையார் உக்கிரபாண்டித்தேவர் 1939ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் நாள் மறைந்தார்.

தேவரின் கன்னிப் பேச்சு

1933-ம் ஆண்டு முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள சாயல்குடி என்ற கிராமத்தில் சேதுராமன் செட்டியார் என்பவர் சுவாமி விவேகானந்தர் பெயரில் ஒரு வாசகசாலை திறந்தார். அந்த விழாவில் விவேகானந்தர் படத்தை திறந்து பேச அழைக்கப்பட்டிருந்த மதுரை கிருஷ்ணசுவாமி பாரதி வரவில்லை. அப்போது தேவர் சாயல்குடி அருகேயுள்ள எஸ். இலந்தைகுளம் என்ற கிராமத்திற்கு ஒரு பஞ்சாயத்திற்காக வந்திருந்தார். இதையறிந்த சேதுராமன் செட்டியார் அங்கு சென்று தேவரை அழைத்து விழாவில் கலந்துகொண்டு பேச அழைத்தார்.

அதுவரை எந்தவொரு மேடையிலும் பேசியிராத தேவர் விவேகானந்தரின் தத்துவங்களைப் பற்றி 3 மணிநேரம் பேசினார். அவரது சொற்பொழிவு அனைவரையும் கட்டிப்போட்டது. பின்னாளில் முதல்வரான காமராஜரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேவரின் பேச்சைக் கேட்டார். தேவரைப் போல பேசக் கூடியவர்களின் சேவை காங்கிரஸ் கட்சிக்குத் தேவை என்று அவர் கருதினார்.

குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம்

தென்னக அரசியலில் தேவர் கையில் எடுத்த இந்த குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் அவர்கள் முதன் முதலாக போராடினார். தேவர் அவர்களின் அரசியல் பிரவேசத்திற்கு பின்பு தான் இந்த போராட்டம் உச்சகட்டம் எட்டியது. இந்த சட்டத்தினை எதிர்க்கும்படி விழிப்புணர்ச்சி உண்டாக்கும் வண்ணம் இவர் மேற்கண்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் நிகழ்த்தி மக்களை திரட்டினார்.

ஆப்பநாட்டின் 19 கிராம மறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை இந்த சட்டத்தின் கீழ் அப்போதைய அரசு கைது செய்தபின்பு தேவர் மிகப்பெரிய பிரச்சாரத்தினை கிராமங்கள் தோறும் நிகழ்த்தி மக்களை திரட்டி போராடினார். இந்த போராட்டத்தில் தேவருடன் இருந்த பி. வரதராஜுலு நாயுடு, பெருமாள் தேவர், சசிவர்ண தேவர், மற்றும் நவநீதகிருஷ்ண தேவர் ஆகியோர் இணைந்த சமாதான பேச்சுவார்த்தை குழு நியமிக்கப்பட்டு அப்போதைய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆகிலும் இந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வியால் இந்த சட்டம் பிரித்தானிய அரசினால் நீக்கப்படவில்லை. பின்னாளில் மீண்டும் தேவரின் தலைமையில் போராட்டம் சீற்றமடைந்து இந்த சட்டம் நீக்கப்பட்டது.

1936 மாவட்ட வாரிய தேர்தல்

குற்றபரம்பரை சட்டத்தின் காரணமாக நீதி கட்சியின் அரசின் மீது இருந்த வெறுப்பு உண்டாகியது. இதன்பின் இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் 1936ஆம் ஆண்டு பர்மாவில் இருந்து திரும்பி வந்த தேவர் தென்தமிழகத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்கு உழைத்தார். பின்னாளில் வந்த தேர்தலில் தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் நீதிக்கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். இதுவே தேவரின் முதல் தேர்தல் வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பின்னர் தேவர் மாவட்ட வாரிய தலைவரானார்.

1937 மாநில தேர்தல்

1937ஆம் ஆண்டு நடந்த மதராஸ் மாகாண தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் தேவர் அவர்கள் இளைஞர்களை காங்கிரஸ் கட்சிக்கு உழைத்திடும்படிக்கு திரட்டினார். தேவரின் இந்த செயல்கள் நீதிகட்சியினருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இதனால் அந்த அரசாங்கம் தேவரை இராமநாதபுரத்திற்கு வெளியே பயணித்து பிரசாரம் செய்ய முடியாதபடிக்கு சட்டங்களும் கட்டுபாடுகளும் விதித்தது.

1937ஆம் ஆண்டு பிப்ரவரியில் இராமநாதபுரம் தொகுதியில் தேவர் போட்டியிட்டார். இவரது அரசியல் வளர்ச்சியை கண்டு பயந்துபோன ஆங்கிலேய நீதி கட்சியரசு பலம் வாய்ந்த எதிர் வேட்பாளராக இராமநாதபுர மன்னர் அவர்களை நிறுத்தியது. ஆனாலும் முத்துராமலிங்க தேவர் அந்த தேர்தலில் மன்னரை எதிர்த்து மாபெரும் வெற்றிபெற்றார்.

பின் வந்த தேர்தல்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி மாகாணத்தினை ஆளும் கட்சியாக உருபெற்றது. இந்த காங்கிரஸ் கட்சி அரசு குற்ற பரம்பரை சட்டத்தினை விலக்கும் என்று தேவர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அப்போதைய புது அரசின் முதல்வரான ராஜகோபாலாச்சாரி அவர்கள் அந்த சட்டத்தினை நீக்கவில்லை.

தேவர் நடத்திய தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசம்

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் அரிசனங்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதய்யர் முடிவு செய்தார். ஆனால் எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு. இந்த நிலையில் ஆலயப்பிரவேச நடவடிக்கைக் குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடியது. ராஜாஜி, வைத்தியநாதஐயர், என்.எம்.ஆர். சுப்புராமன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் கலந்து கொண்டார். ஆலயபிரவேசம் அமைதியாக நடைபெற தேவரின் ஒத்துழைப்பும் உறுதி மொழியும் வேண்டும் என அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், "என் சகோதரர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் அன்னை மீனாட்சிக்கோயிலில் ஆலயபிரவேசம் செய்கையில் அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் என் மக்கள் தருவார்கள். அன்னையை வணங்கி அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்றார்". "அந்த ரவுடிக் கும்பலை எச்சரிக்கிறேன். வைத்தியநாதய்யர் அரிசனங்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடிக்கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன்" என்று ஒரு துண்டு பிரசுரம் மூலம் தேவர் அவர்களின் அறிக்கை வெளியானது. ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது. 8.7.1939-ல் காலை 10 மணிக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கக்கன், முருகானந்தம், பூவலிங்கம், சின்னையா, அரிசன தேவாலய ஊழியர் முத்து என ஐந்து அரிசன சமூகத்தினரும்,சேர்ந்து ஆறு பேர் வைத்திய நாதய்யருடன் ஆலயத்தில் நுழைந்து அம்மனை வணங்கினர்.[6][7][8][9]

தொழிலாளர்களின் தோழனாக

1930களில் தேவர் அவர்கள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தினார். பசுமலையில் மகாலெட்சுமி ஆலை தொழிலாளர் நலன் கூட்டமைப்பை உருவாக்கி தேவரே தலைமை ஏற்று நடத்தினார். மகாலெட்சுமி ஆலை தொழிலார்கள் சங்கமும் மதுரா பின்னலாடை ஆலை தொழிலாளர் சங்கமும் இணைந்து நடத்திய போராட்டத்தினை தேவர் தலைமை தங்கி நடத்தினார். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீள் பணியில் அமர்த்தும் போராட்டத்தில் தேவர் 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இந்த போராட்டங்களில் வெற்றியும் பெற்றார். பின்னர் 1945 ஆம் ஆண்டு மதுரை டிவிஎஸ் தொழிலாளர் சங்க தலைமை பொறுப்பையும் ஏற்றார்.

திரிபுரா காங்கிரஸ் மாநாடும் பார்வர்ட் பிளாக்கின் வளர்ச்சியும்

1939ஆம் ஆண்டு திரிபுரியில் நடைபெற்ற 52ஆவது வருடாந்திர காங்கிரஸ் கூட்டத்தில் தேவர் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை எதிர்த்து பட்டாபி சீதாராமையா போட்டியிட்டார். சீதாராமையா காந்தியடிகளில் ஆதரவு பெற்றவராவார். ஆனாலும் போஸ் அவர்கள் தேவரின் ஆதரவோடு காங்கிரசின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார். தேவர் தென்னிந்தியாவின் வாக்குகளை போஸ்க்கு ஆதராவ திரட்டினார்.

பின்னர் காந்தியின் தலையீட்டின் படிக்கு போஸ் அந்த பொறுப்பை விட்டு விலகி ஜூன் 22ஆம் நாள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை நிறுவினார். காங்கிரஸ் கட்சியின் மீதான கருத்து வேறுபட்டாலும் குற்றபரம்பரை சட்டத்தின் மீதான காங்கிரசின் நிலைபாட்டின் காரணத்தினாலும் தேவர் போசுடன் இணைந்தார். பின்னாளில் செப்டம்பர் 6ஆம் நாள் போஸ் மதுரைக்கு வந்திருந்த பொழுது தேவர் அவர்கள் போஸை வரவேற்கும் விதமாக மிகப்பெரிய கூட்டத்தினை கூட்டினார்.

சிறையில்

செல்வாக்கினாலும் காங்கிரஸ் விரோத போக்கினாலும் கலங்கிய அப்போதைய அரசு தேவரின் தொழிலாளருடன் இணைந்த போராட்டங்களை கரணம் காட்டி மதுரா பாதுகாப்பு என்கிற பெயரில் தேவர் மீது வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் மூலம் தேவர் மதுரையை விட்டு வெளியேற முடியாதபடிக்கு தடுக்க நினைத்தது. பின்னர் 1940 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேவர் மதுரையில் இருந்து தனது சொந்த ஊரான பசும்பொன்னிற்கு பயணித்த பொழுது திருப்புவனத்தில் அவரை கைது செய்து திருச்சிராப்பள்ளி மத்திய சிறைசாலையில் 18 மாதகாலம் அடைத்தது. இவரது கைது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சி பேரலையை ஏற்படுத்தியது. 18 மாதங்களுக்கு பின்னர் இவர் விடுதலையான பொழுது சிறை வாசலிலேயே இந்திய பாதுகாப்பு சட்டத்தினை காரணம் காட்டி மீண்டும் சிறையில் அடைத்தனர். பின்னர் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் விடுதலை ஆனார்.

சிறை வாசத்திற்கு பின்

மார்ச் மாதம் 1946 ஆம் வருடம் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தேவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார். இதன் பின்னர் குற்றபரம்பரை சட்டம் நீக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 1948இல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சி தனித்து பிரதான எதிர்க்கட்சியானது. இதில் தேவர் பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ்நாட்டின் தலைவரானார் (இந்த பதவியில் இவர் பின் வந்த வாழ்நாள் முழுவதும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).

1949 ஆம் ஆண்டு ஜனவரி 23 சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் அன்று தேவர் மீண்டும் தீவிர அரசியலில் இறங்கினார். அவர் “நேதாஜி” என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கி அவரே அதன் ஆசிரியராக இருந்து வந்தார். அன்று இரவு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் உள்ளார் என்றும் அவர் விமான விபத்தில் இறந்ததாக கூறுவது பொய் எனவும் அவரை தாமே சந்தித்தாக பகிரங்கமாக அறிவித்தார். இதன் பின்னர் தேவர் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எந்தவித அறிவிப்பும் இன்றி மறைந்திருந்தார் சென்றார். பின்னர் 1950 இல் மீண்டு போது வாழ்க்கைக்கு திரும்பினார். இப்படி மறைந்திருந்த காலங்களில் தேவர் சீனாவிற்கும் கொரியாவிற்கும் இந்தியாவிலிருந்து யாருக்கும் தெரியாமல் பயணித்து அங்கிருந்த சுபாஷ் சந்திரபோஸை சந்தித்து வந்தார். பின்னாளில் பார்வர்ட் பிளாக் கட்சியில் ஏற்பட்ட பிளவினால் 1948இல் கட்சி இரண்டாக உடைந்தது. இந்த பிரிவினையில் தேவர் சார்ந்திருந்த பிரிவு மட்டுமே இன்றும் நிலைத்திருக்கிறது.

1952 பொது தேர்தல்

1952 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் நடைபெற்றது. இதில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற முனைப்புடன் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. லோக் சபா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடந்தது. இதில் தேவர் அருப்புகோட்டை லோக்சபா தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றியும் பெற்றார். இதில் தேவர் அவர்கள் லோக்சபா பதவியை துறந்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று மதராஸ் சட்டமன்ற உறுப்பினர் குழுவில் இடம்பெற்றார். இந்த தேர்தலுக்கு பின் காங்கிரஸ் மதராஸ் சட்ட மன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்தது. மேலும் தேவர் கம்ம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து காங்கிரஸ் அல்லாத ஆட்சியை நிறுவ முனைந்தார். ஆளுநர் அவர்கள் C.ராஜகோபாலசாரியார் அவர்களை முதல்வராக நியமித்தார்.

பார்வர்ட் பிளாக் கட்சியின் பிளவு

1955 ஆம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சியில் மீண்டுமொரு பிளவு ஏற்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் சகோதரத்துவத்தை ஆதரித்தது. மோகன் சிங்க் மற்றும் சீல் பந்திரா யாகி போன்ற பார்வர்ட் ப்ளாக்கின் முக்கிய தலைவர்கள் காங்கிரசுடன் இணைய முற்பட்டனர். இந்த முடிவை கட்சியின் பிற தலைவர்கள் ஏற்க முன்வரவில்லை. பார்வர்ட் பிளாக் கட்சி தனித்தே இருக்க வேன்றுமென்று விரும்பினர். இருப்பினும் மோகன் சிங்க் - யாகி ஆகியோர் தன்னிச்சையாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த தருணத்தில் 1955 ஆம் ஆண்டு மே மாதம் 11 முதல் 15 தேதிகளில் பார்வர்ட் ப்ளாக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நாக்பூரில் நடந்தது. இதை சிங்க் - யாகி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இதில் ஹேமந்த் குமார் போஸ் அவர்கள் பார்வர்ட் ப்ளாக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஹல்டுல்கர் பொது செயலாளராகவும் தேவர் அவர்கள் துணைத் தலைவராகவும் தேர்ந்தேடுக்கபட்டனர் (இந்த பதவியில் தேவர் அவர்கள் இறக்கும் வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).

1957 பொது தேர்தல்

1955 ஆம் ஆண்டு தேவர் அவர்கள் பர்மா வாழ் தமிழ் மக்களின் அழைப்பை ஏற்று இரண்டாம் முறையாக பர்மா சென்றார். அங்கு பர்மா வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு அரசியல் மற்றும் ஆன்மீக நிகழ்சிகளில் பங்கேற்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. பின்பு 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் பொது தேர்தலை சந்திப்பதற்காக தாயகம் திரும்பினார். காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்கும் பொருட்டு பார்வர்ட் பிளாக் கட்சி உழைத்து கொண்டிருந்த வேளையில். மெட்ராஸ் மாநிலத்தில் புது பரிணாமமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. C.ராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி (CONGRESS REFORM COMMITTEE) என்கிற பிரிவில் காங்கிரஸ் உடைந்தது.

தேவர் இந்த முறை தனது முன்னாள் அரசியல் எதிரியான C.ராஜகோபாலாச்சாரி அவர்களுடன் அமைதியை பேணினார். இதன் காரணமாக பார்வர்ட் பிளாக் கட்சியும் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி கட்சியினரும் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க தேர்தலில் இணைந்து பணியாற்றினர். இந்த தேர்தலிலும் தேவர் அருப்புகோட்டை தொகுதியில் லோக்சபா உறுப்பினருக்கும் முதுகுளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருக்கும் போட்டியிட்டார். இந்த முறையும் இரு தொகுதிகளிலும் வென்றார். இந்த முறை தேவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார்.

இராமநாதபுரம் கலவரம்

தேவர் முதுகுளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த காரணத்தினால் இந்த தொகுதிக்கு 1957 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாள் அன்று இடைதேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேவரின் ஆதரவு பெற்ற பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர் சசிவர்ண தேவர் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவு அறிவிப்பு நேரங்களில் ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பதற்றம் நிலவியது. இது பின்னர் கலவரமாக வெடித்தது. பார்வர்ட் பிளாக் கட்சிக்கு அனேக ஆதரவளித்து வந்த மறவர் இனத்தவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்து வந்த தலித் இனத்தவர்களும் பெருமளவில் மோதிக்கொண்டனர். இந்த கலவரம் இராமநாதபுரத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதில் பலர் கொல்லப்பட்டனர் ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரயாக்கபட்டன.

இந்த கலவர நேரத்தில் லோக்சபா கூட்ட தொடரில் கலந்து கொள்வதற்காக சூலை 17 ஆம் நாள் டெல்லி சென்றிருந்த தேவர் அவர்கள் செப்டம்பர் 9 ஆம் நாள் திரும்பவும் தென்னகம் வந்தார். செப்டம்பர் 10 ஆம் நாள் நடந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் சசிவர்ண தேவர், மற்றும் வேலு குடும்பனுடன் (பார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த தேவேந்திரர்குல சமூகத்தினை சார்ந்த தலைவர்) முத்துராமலிங்க தேவரும் கலந்து கொண்டார். காங்கிரஸ் சார்பில் ஆறு தலித் தலைவர்களும் மேலும் பல நாடார் சமூக தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அனைத்து சமூகத்தவரும் இணக்கமாக வாழ்வதென்று முடிவு செய்யப்பட்டு கூட்டம் கலைந்தது. அப்போது தேவர், தேவேந்திரர்குலம் சார்பில் கலந்துகொண்ட இம்மானுவேல் என்பவரின் பிரதிநிதித்துவம் குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் அமைதி அறிக்கையில் அவருடன் கையொப்பம் இட முடியாது என்று தெரிவித்தார். இதனால் தனித் தனி அறிக்கைகளில் கையெழுத்துப் பெறப்பட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

மறுநாள் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்டார். இந்த அரசியல் படுகொலை நிகழ்வு சில தினங்களில் சாதி சண்டையாக உருவெடுத்து, தென் மாவட்டங்கள் சாதி கலவரத்தில் பற்றி எரிந்தன. கலவரம் காவல் துறை மூலம் கட்டுக்குள் அடக்கப்பட்டு சிறிது நாளில் (செப்டெம்பர் 28 ஆம் நாள்) தேவர் அவர்கள் பாதுகாப்பு சட்டத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இந்த பாதுகாப்பு சட்ட வழக்கு,தியாகி இம்மானுவேல் சேகரன் கொலையில் தேவர் சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பின்னர் புதுகோட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு வழக்காடபட்டது.

பார்வர்ட் பிளாக் கட்சி தேவர் மீதான இந்த வழக்கு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தேவர் மீது போடப்பட்டது என்று கண்டனம் தெரிவித்திருந்தது. பின்னர் இந்த வழக்கின் முடிவில் தேவர் குற்றமற்றவர், நிரபராதி என்று இந்த வழக்கிலிருந்து சனவரி , 1959 விடுவிக்கப்பட்டார்.

இறுதி நாட்கள்தொகு

வழக்கிலிருந்து விடுபட்ட தேவர் அவர்கள் 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை நகராட்சி தேர்தலில் மும்முரமானார். இதில் கம்யூனிஸ்டுகள், இந்திய தேசிய குடியரசு காங்கிரஸ்(INDC - முன்னாளில் காங்கிரஸ் ரீஃபார்ம் கமிட்டி) ஆகிய கட்சிகளுடன் இணைந்து பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலின் பொழுது தான் திராவிட முன்னேற்ற கழகமும் உருவானது. இதில் தேவரின் கூட்டு கட்சிகள் வெற்றி வாகை சூடின. இதுவே தமிழகத்தில் காங்கிரசின் முதல் வீழ்ச்சியாகும். தொடர்ந்து வந்த தேர்தல்களில் தேவர் அவர்கள் உழைத்ததின் காரணமாகவும் உடல்நலக்குறைவின் காரணமாகவும் பொது வாழ்க்கையில் இருந்துது சிறிது காலம் விலகி இருக்க நேர்ந்தது.

பின்னர் 1962இல் மீண்டு லோக் சபா தேர்தலுக்கு இவர் முன்னிறுத்தப்பட்டார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தேவர் ஒரேயொரு பிரச்சார மேடையில் மட்டுமே தோன்றினார். இவருடன் C.ராஜகோபாலசாரியார் அவர்களும் தேவரும் இணைந்து தோன்றிய கடைசி பிரச்சார மேடை இதுவே ஆகும். தேவர் மீண்டும் இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு உடல்நலக்குறைவின் காரணமாக அப்போது நடைபெற்ற கூட்ட தொடரில் பங்கேற்க டெல்லி செல்ல முடியவில்லை.

உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1963-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் மரணமடைந்தார். அவரது உடல் மறுநாள் அதாவது அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் வள்ளலாரின் முறைப்படி பூஜை நடத்தி அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

இவர் மறைவின் காரணமாக அருப்புகோட்டை லோக்சபா தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் பார்வர்ட் பிளாக் கட்சி போட்டியிட்டு தோற்றது. இதுவே தமிழகத்தில் இந்த கட்சியின் முதல் தோல்வியாகும், 1957 இல் தியாகி இம்மானுவேல் சேகரன் கொலையில் தேவரை வேண்டுமென்றே குற்றவாளியாக சேர்த்ததால், இவருடைய மறைவுக்கு பின் காங்கிரசு கட்சி தமிழகத்தை விட்டே அழிந்தது எனவும் கூறுவர்.

கொள்கைகள்தொகு

ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை , ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன.

தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர்
சாதி பார்ப்பவன் அரசியலுக்கு லாயக்கில்லை, சாதி பார்ப்பவன் தெய்வத்தை வணங்குவதில் அர்த்தமி்ல்லை. சாதிக்காக எதையும் செய்பவன் அரசியலில் புகுந்தால அரசியல் கெடும். சாதியும், நிறமும் அரசியலுக்குமி்ல்லை ஆன்மீகத்துக்குமி்ல்லை
வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்
வீரம் மட்டுமே உனது எதிரியையும் உன்னை மெச்சவைக்கும்
தேசியவாதிக்கு தேசமே குறி, அரசியல்வாதிக்கு தேர்தலே குறி
உண்மையான தலைவன் மாலையையும், தூக்குமேடைக் கயிற்றையும் சமமாக மதித்து ஏற்றுக் கொள்வான்
அக்கிரமச் செயல்களைக் கண்டிப்பதும், நியாயமான செயல்களைக் காணும் பொது அதனிடம் அனுதாபம் கொள்வதும் மனித ஜென்மத்திற்க்கே உரிமையான குணமாகும்.
யாவரும் வாழ்க என்று சொல்லுங்கள், ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும்? நல்லவைகள் வாழ்ந்தால் நீங்கள் நினைக்கிற கெட்டவைகள் ஒழியத்தானே செய்யும். [10]
என்பனவல்லாம் இவர் மொழிந்த வாசகங்களாகும்.

ஒரு தேசியவாதியாக தேவர் அவர்கள் திராவிடர் கழகம் மற்றும் அதன் வழி கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஆகியனவற்றை அவற்றின் பிரிவினை வாதம் மற்றும் குறுகிய நோக்கு போன்ற கொள்கைகளுக்காக வெறுத்தார். கடவுள் மறுப்புக் கருத்துக்களை அடித்து நொறுக்கும் கேள்விகளை முன் வைத்தார். அவரது கேள்விகளுக்கு கடவுள் மறுப்பு பேசியோரால் பதில் சொல்ல இயலவில்லை.

அதே நேரம் தேவர் லெனினிசம்-மார்க்சிசம் இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. சுபாஷ் சந்திர போஸ் நம்பிக்கை கொண்ட சோஷலிஸ கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். இவரது மறைவுக்கு பின் பார்வர்ட் பிளாக் கட்சியின் அடுத்த தலைவராக P.K.மூக்கையா தேவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிறந்த பேச்சாளர்

தேவர் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக இருந்தார். குறைந்தது மூன்று - நான்கு மணிநேரம் சொற்பொழிவாற்றும் நாவன்மை பெற்றிருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் சிறந்த புலமையும் பேச்சாற்றலும் கொண்டவராக இருந்தார். தேவர் ஒவ்வொரு ஆண்டும் வடலூர் தைப்பூச திருவிழாவில் கலந்துகொண்டு வள்ளலாரின் ஆன்மீக கருத்துக்களை விவரித்து பேசி வந்தார். அவரது பேச்சை ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு கேட்டு ரசித்தனர்.

ஆன்மீகத்தில் தேவர் கொண்டிருந்த ஞானமும், ஆன்மீக சொற்பொழிவுகளும் இவருக்கு தெய்வத்திருமகன் என்ற பெயரை பெற்றுத்தந்தன. இவர் தமிழ் இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தவராக இருந்தார்.இவரது சொற்பொழிவுகளில் தமிழ் பாடல்களின் மேற்கொள்கள் இடம்பெற்றும் வந்தன.

குருபூஜை

தேவரின் நினைவாகவும் அவரைப் போற்றும் வகையிலும் தமிழக அரசாலும் தேவரின் பக்தர்களாலும் தேவர் குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் பிறந்ததும் இறந்ததும் ஒரே நாளான அக்டோபர் 30 ஆகும். எனவே தேவர் ஜெயந்தியும் குருபூஜையும் ஒரே நாளில் கொண்டாடப்படுகின்றன. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், ஜோதி ஏந்திவந்து அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் தேவரை வணங்குகின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் கலந்துகொண்டு தேவரை வணங்குகின்றனர். தேவர் குருபூஜையன்று பசும்பொன்னிலுள்ள தேவர் ஆலயத்தினுள், தங்கக் கவசம் பூட்டப்பட்ட தேவரது சிலைக்கு மாலை அணிவித்தும் அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குவர். பசும்பொன் தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக தென்மாவட்டங்களான தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் முழுதும், மேலும் தலைநகர் சென்னையிலும் தேவர் குருபூஜை நாளன்று கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

தங்க கவசம்

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா 2010ம் ஆண்டு முத்துராமலிங்க தேவர் குருபூசையில் கலந்துகொண்டு தங்கக் காப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தார். இதன் அடிப்படையில் 09.02.2014 அன்று 13 கிலோ எடைகொண்ட தங்கக் காப்பு அணிவித்தார் .

பசும்பொன் தேவரின் பொன்மொழிகள்

☼ ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலையை, சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானிகளின் அறிவு அரசுக்கு பயன்படும் காலத்தில் தான் உண்மையான அரசாக ஆட்சியை வகுக்கும்.

☼ ஜீவகாருண்யம் அரசுக்கு தேவை. அதே சமயத்தில் நன்மைக்குப் புறம்பானவற்றை ஒழிப்பதில் ஆண்மையையும் ஆட்சியாளர்கள் பெற்றிருக்க வேண்டும்.

☼ தமிழகத்தில் அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை. அரசியல் வியாபாரிகளாக மாறிவிட்டார்கள்.

☼ தக்க தலைவர்கள் இல்லையென்றால் மக்களிடையே எழுச்சி உண்டாக்க முடியாது.

☼ உண்மையான தலைவன் மாலையையும், தூக்குமேடைக் கயிற்றையும் சமமாக மதித்து ஏற்றுக் கொள்வான்.

☼ ஆன்மீகத்தின் பெயரைச் சொல்லி சுயநலமிகள் கோவில் கட்டுவதும், கும்பாபிஷேகங்கள் செய்வதும், ருத்ராட்சம் அணிவதும், விபூதி காவியாடை தரிப்பதும், மொட்டையடித்து பண்டாராமாகி, பண்டாரம் மடாதிபதியாகி, சிஷ்ய பரிவாரங்களும் சூழ, மறைவில் பொன் ஆசை, பெண் ஆசை இவை போன்ற ஆசைகளால் பல தீய செயல்கள் செய்வதும் மலிந்து போய் நிற்கின்றன. ஆன்மீகத்தை வயிறு பிழைக்கும் ஒரு கருவியாகக் கொண்ட போலிகள் மலிந்துள்ள காலம் இது.

☼ பாம்பின் வாய்ப்பட்ட தேரை தன் உடலெல்லாம் விழுங்கப் பெற்று தன மரண அவஸ்தையிலிருக்கும் போதும் தன்னருகில் வரும் ஈயைக் கவ்வுவதற்கு வாயை திறப்பதை போலவே மனிதனுக்கு ஆசை அவன் ஒழியுமட்டும் இருந்து கொண்டே இருக்கிறது.

☼ ஹரிஜனங்கள் பணக்காரர்களாக இருப்பார்களானால் அவர்களோடு கைகோர்த்து கலந்து வாழவும், சம்பந்தம் செய்து கொள்ளவும் தயாராக எல்லாரும் இருக்கிறார்கள். இது யாரும் பேசும் கற்பனை அல்ல. பணம் இல்லாத போது ஏழையை யாரும் சீண்டுவதும் கிடையாது. இது நாம் பார்க்கிற உண்மை.

☼ அக்கிரமச் செயல்களைக் கண்டிப்பதும், நியாயமான செயல்களைக் காணும் பொது அதனிடம் அனுதாபம் கொள்வதும் மனித ஜென்மத்திற்க்கே உரிமையான குணமாகும்.

☼ வீரம் என்ற குணம் தான் எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை  ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது.

☼ இன்றைய தினம் நம் நாட்டு விவசாயிகள் படும் துன்பத்திற்க்கெல்லாம் அடிப்படையான காரணம் நம் நாடு பொருளாதாரப் பிடிப்பு மேலநாட்டானிடம் அகப்பட்டுக் கொண்டது தான்.

☼ நீதியை நிலை நிறுத்துவதற்கான சட்டங்கள் ஆதிகாலத்தில் உற்பத்தி பண்ணப்பட்டன. இன்றைய நீதியானது சட்டத்திற்காக கை நழுவ விடப்படுகிறது.

☼ ஹரிஜனங்களுக்கு புதிதாக நிலம் வழங்கப்படுமானால், அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் முயற்சி செய்து உழுது கொண்டு வாழ்வோர்களாகச் சர்க்கார் ஆக்குமானால் பிறருக்கு கைகட்டி வாழ்கின்ற இழிவான நிலைமையிலிருந்து மாறி நல்ல விவசாயிகளாவார்கள்.

☼ தங்களுக்குள்ளேயே ஹரிஜனங்கள் ஒன்று சேர, சாப்பிட கூசுகிற பொழுது எங்களை ஒன்றாக இருக்கச் சொல்கிறார்களே என்று உயர் ஜாதியார் எங்களை போன்ற சீர்திருத்தவாதிகளைக் கேட்க முடியாத நிலையை உண்டாக்க வேண்டும்.


☼ உண்மையாகவே ஏழை விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று சர்க்கார் கருதினால் விவசாயிகள் நவீன முறையில் விவாசாயம் செய்து கிராமங்களில் தங்கி இருப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

☼ யாவரும் வாழ்க என்று சொல்லுங்கள், ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும்...? நல்லவைகள் வாழ்க என்று சொன்னால் நீங்கள் நினைக்கிற கெட்டவைகள் ஒழியத்தானே செய்யும்.

☼ எதையும் சொல்லுகின்ற காலத்தில் ஒருவருக்கொருவர் கலந்து பேச வேண்டும் என்ற மனப்பான்மை நம்மை விட்டு போய் சில வருடங்கள் ஆகின்றன

தான் வாழ பதவி தேவை என்று கருதுபவர்களிடம் உண்மைக்கு புறம்பானவற்றை தான் எதிர்பார்க்க முடியும்.-ஸ்ரீதேவர்


நான் பேசுவது, எழுதுவது, சிந்திப்பது, சேவை செய்வது எல்லாமே தேசத்திற்காகவே , எனக்காக அல்ல.-ஸ்ரீதேவர்


நான் எவரையும் எதிரியாக கருதுபவன் அல்ல தவறுகளை கண்டிக்கின்ற என்னை யாரேனும் எதிரியாக பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.-ஸ்ரீதேவர்


சொந்த செலவிட்டு ஓட்டு போடுங்கள் அதுதான் நல்ல மக்களுக்கு அடையாளம்.-ஸ்ரீதேவர்


ஒரு மூளி இந்தியாவையும், போலி சுதந்திரத்தையும் வெள்ளைக்காரன் கொடுத்தான்,  காங்கிரஸ்காரர்கள் அதனை வாங்கிக்கொண்டார்கள்.-ஸ்ரீதேவர்


நமது நாட்டிற்கு கிடைத்திருக்கும் சுதந்திரம் "நிறத்தில் "மட்டும் தான் தங்கம் போன்றது "தரத்தில் "அல்ல-ஸ்ரீதேவர்


அதிகாரம் மக்களுடையது, அது நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருகிறது. நாம்  ஜாக்கிரதையாகப் பாதுகாக்க வேண்டும் என்ற தூய மனோபாவம் மந்திரிகளுக்கு இருக்க வேண்டும். -ஸ்ரீதேவர்


மந்திரி பதவி என்றால் அதன் பொறுப்பைச் சுமக்க "நாணயம் "வேண்டும்.  நல்ல "நெறி" வேண்டும்.-ஸ்ரீதேவர்


தான் வாழ பதவி தேவை என்று கருதுபவர்களிடம் உண்மைக்கு புறம்பானவற்றை தான் எதிர்பார்க்க முடியும்.-ஸ்ரீதேவர்


பதவியை ஒரு சேவையாக கருதுபவர்களிடம் ஆட்சி இல்லாமல் போனால்,  மக்களுக்கு  நலன் என்பது வெறும் கனவு தான் .-ஸ்ரீதேவர்


பக்குவப்பட்ட ஒருவன் இந்து கோவிலில் காட்டுகின்ற தீப வெளிச்சத்தையும், கிருத்தவ வளாகத்தில் வைக்கின்ற மெழுகுவர்த்தி ஒளியையும், முகமதியர் ஊதுபத்தியில் காணுகின்ற சுடரையும் தன் சரீரத்தின் இருட்டை போக்க எழுப்பவேண்டிய ஞானவிளக்கின் சொருபமாக காண்பான்.-ஸ்ரீதேவர்


.

       - பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர்.