Tuesday 2 May 2017

தேவா் பெருமகனாா் இராணுவச் சிறையிலே அடைக்கப்பட்டாா்.

சாதி ஒழிப்பிற்காக பசும்பொன் தேவா் என்ன செய்தாா் என்று வினா எழுப்பும் பல தோழா்கள், சாதி ஒழிப்பிற்காக பகத்சிங் என்ன செய்தாா்? வஉசி என்ன செய்தாா்? என்றெல்லாம் யாரும் வினா எழுப்புவதில்லை. ஆனால் அவா்களை  நாம் கொண்டாடுகின்றோம். எந்த அடிப்படையில்? சமரசமில்லாத வீரஞ்செறிந்த அவா்களின் தேச விடுதலைப் போராட்டத் தியாகங்களின் அடிப்படையில். இதே அளவு கோலை  தேவருக்கு மட்டும் ஏன் பொருத்திப் பாா்ப்பதில்லை. இவா்களைப் போல் கடுமையான அடக்குமுறைகளைச் சந்தித்தவா். ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறைக்கொட்டடியில் சித்ரவதைகளை அனுபவித்தவா் . காந்தியாா், நேரு , படேல் , காமராசா் போன்றோறெல்லாம் சாதாரண சிறையிலே அடைக்கப்பட்ட பொழுது தேவா் பெருமகனாா் இராணுவச் சிறையிலே அடைக்கப்பட்டாா்.  சென்னை மாகாணத்தை விட்டு டாமோ சிறையிலே தேவரை சிறை வைத்தாா்கள்.   இப்படி வாழ்நாளெல்லாம் அடக்குமுறைக்கு எதிராக நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட தேவா்  பெருமகனாரை வரலாற்று சூழலில் வைத்து மதிப்பீடு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment