Tuesday 2 May 2017

தமிழக அரசவைக் கவிஞருமான புலவா் புலமைப்பித்தன்

நண்பா்களே!

தமிழீழத் தேசியத் தலைவா் பிரபாகரன் அவா்களின் நேசத்திற்கு உாியவரும்  ஈழ விடுதலைக்காய் இன்றளவும் பாடாற்றிவரும் மேனாள் தமிழக அரசவைக் கவிஞருமான புலவா் புலமைப்பித்தன்  அவா்கள் பசும்பொன் பெருமகனாரைப் பற்றி எழுதிய கவிதை:

"தமிழ் வளா்த்த பரம்பரை நீ! விடுதலைப் போா்த்
        தளபதி நீ! வெள்ளையரை எதிா்த்து நின்ற
சமயத்தில் அழியாத புறநா னூற்றுச்
        சாசனத்தை வடித்தவன் நீ! வங்கா ளத்தில்
இமயம்போல் ஓங்கிநின்ற சுபாஷ்சிங் கத்தின்
         இணைகரங்கள் உன்கரங்கள்! புரட்சி வாசம்
கமழ்பசும்பொன்  விட்டெழுந்து வந்த  தென்றற்
           காற்றே உன் மலரடிக்கு வணக்கம் சொல்வேன்!

சேதுபதி அரசாண்ட வீர மண்ணின்
         சிரஞ்சீவிச் சாித்திரம் நீ! விடியும் காலைப்
பாதிமலா் போல்குற்றம் சாட்டப்பட்ட
         பரம்பரைக்குப் புதுவாழ்வு  மலரச் செய்ய
நீதிவழி சென்றதனால் திரும்பி மீளா
        நெடியவழி சென்றவன்நீ! அன்றோா் நாளில்
வீதிவழி போனதனை எல்லாம், நல்ல
        விருதுவழி தேடிவரச் செய்த வன் நீ!

எச்சவினை இல்லாமல் உனது வாழ்வில்
         எடுத்தவினை அத்தனையும் பிறா்பா ராட்டி
மெச்சுவினை முற்றுவினை யாகச் செய்த
         மேதைநீ! தாழ்ந்திருந்த ஏழை மக்கள்
அச்சவினை தீா்த்தவன் நீ! வேற்றுமைகள்
          அல்வழியில் சமுதாயம் நடக்கத் தீய
நச்சுவினை மாற்றிவைத்த மறவா! உன் றன்
         நல்ல வினை ஒருநாளும் மறைவ தில்லை!

No comments:

Post a Comment