Saturday 6 May 2017

குருபூசை யாருக்கு

குருபூசை என்பதே இந்து மத ஆன்மீகத் துறவிகளுக்கு தான் . குருபூசை செய்யப்படும் துறவிகளை இறந்த பின் அதற்குறிய ஆகம விதிப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும். இந்த விதிகளுக்கு உட்பட்டே பசும்பொன் தேவருக்கு குருபூசை நடத்தப்படுகிறது. தேவர் மறைந்தது 29/10/1963ல் அடக்கம் செய்தது அவர் பிறந்த நாளான மறுநாள் 30 அன்று. முதல் முதலாக அவர் குருபூசை அவருக்கு மண்டலபூசை
சேர்த்து டிசம்பர் 5தேதி 1963ல் கொண்டாடப்பட்டது 1964ல் இருந்து அக்டோபர் 28,29,30 ஆகிய மூன்று நாட்களும் அரசியல் விழா  ஆன்மீக விழா , குருபூசை &ஜெயந்தி விழா என முறையே நடைபெறுகிறது.தேவரை ஆகமவிதிப்படி அடக்கம் செய்தவர் வல்லநாட்டு சித்தர் சாது சிதம்பரசுவாமிகள் என்பவர். எம்ஜிஆர் ஆட்சியின் போது அரசே விழா நடத்தி அரசு பதிவேட்டில் குருபூசை ஜெயந்தி விழா என பதிவேற்றியது. ஆனால் பின்னர் நடந்த அரசியல் காரணமாக அவ்விழா சாதி விழாவாக ஆக்கினார்கள்.ஆனாலும் இன்றுவரை அனைத்து சமூக மக்களும் கலந்துகொள்ளும் விழாவாகவே உள்ளது. பல சித்தர் துறவிகளுக்கு ஆண்டு முழுவதும் குருபூசை நடந்தாலும் அதிகமான
பத்தர்கள் கலந்துகொள்ளும் குருபூசை தேவர் குருபூசையே.

படம்: பசும்பொன் தேவருக்கு சித்தர் முறைபடி சமாதிநிலை அமைத்தவர்.

No comments:

Post a Comment