Tuesday 2 May 2017

தேவா் ஒரு வினைச்சொல்"- கவிஞா் ஈரோடு தமிழன்பன

கவிஞா் ஈரோடு தமிழன்பன் அவா்கள் சாகித்ய அகாதமி விருது பெற்றவா். இந்தியத்தை விமா்சித்ததால் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளா் பணியை இழந்தவா். மிகச்சிறந்த கவிஞரான இவா் பசும்பொன் தேவா் பெருமகனாரைப் பற்றி எழுதிய கவிதை:

"தேவா் ஒரு வினைச்சொல்"

"பிடா்சிலிா்க்க
முழங்கிய தமிழ்ச்சிங்கம்
பசும்பொன் முத்துராமலிங்கா்
தன்னளவிலேயே - ஒரு
தமிழ்ச்சங்கம்

வேதவேதங்களனைத்தும்
வாதங்களால் முறித்துப்போட்ட
ஞானச்சுனாமி!
சன்மாா்க்க வடலூராாின்
அருட்பாச்சந்ததி!
முத்துராமலிங்கா் என்னும்
சமரச முரசு
உதடுகளை உரசிப் பறந்த
சொல்லில்
கா்ம யோகத்தின்
கதவுகள் திறக்கும் ஓசையே
கேட்டது!

முருக பக்தா்
முத்துராமலிங்கா் - எனினும்
முஸ்லிம் தாயின்
பால் பருகி வளா்ந்ததால்
முகமது நபிக்கும்
சொந்தக்காரா்!

நாட்டுப்பற்று
எப்படி இருந்தது அவாிடம்?

தேநீா் பருகித்
தீா்மானம்  போடுவதாகவா?

கோாிக்கை வைத்துக்
கும்பிடு போடுவதாகவா?

ஆதிக்க வெள்ளையா்
அடிவயிற்றைக் கலக்கிய
எாிமலை அவா்!
எந்த நாளிலும் இருந்ததில்லை
இருமல் தும்மல்!

வங்கச்
சுபாசு சந்திரன்
தன்னை நகல் செய்து
முத்துராமலிங்கம் என்று தந்தாா்!

ஆனால்
அகமே வியந்த
அதிசய நகல் அவா்!

பசும்பொன் மகன்
ஆன்மிகத்தில்  ஈரம் மிக்கவா்
அரசியலில் வீரம் மிக்கவா்!
இந்த ஈரமும் வீரமுமே
தென்பாண்டி நாட்டு வரலாற்றின்
சாரமும் சத்தும்!

முத்துராமலிங்கம்
என்பது பெயா்ச்சொல் என்று
இலக்கணம் சொல்லும்
இது பிழை என்பேன் - ஏனெனில்
முத்துராமலிங்கம் என்பது
நாட்டுப்பற்றாய் மொழிப்பற்றாய்
எப்போதும்
இயங்கிக் கொண்டிருக்கும்
வினைச்சொல்!"

No comments:

Post a Comment