Thursday 18 April 2024

ஓட்டுக்கு பணம் கொடுப்பவன் பாவி - வாங்குபவன் தேச துரோகி

"முளைக்கட்டு வருது சொன்னா வீட்டுல இருந்து ஆளுக்கு ஒரு ரூபா, ரெண்டு ரூபாய் எடுத்துட்டு போறான் ஒருத்தன், 

ஜல்லிக்கட்டு வருதுனா ஒரு ரூபா, ரெண்டு ரூபாய் எடுத்துட்டு போறான்,

சினிமா வருதுனா ஒரு ரூபா, ரெண்டு ரூபாய் எடுத்துட்டு போறான்,

ஒயில், கரகாட்டம், டான்ஸ் நடைபெறுதுனு சொன்னா ஒரு ரூபா, ரெண்டு ரூபாய் எடுத்துட்டு போறான் ஒருத்தன் யாரையும் கேக்ரான் இல்லை 

தேர்தல் வருதுனு சொன்னா அந்த ஒரு ரூபா, ரெண்டு ரூபாய எடுத்துட்டு போய் ஓட்டை போட்றபிடாதா!  -உன் 
சொந்த வாழ்வு இல்லையா அது, 

இந்த வேடிக்கை பார்க்கிறதுக்கு ஒரு ரூபா, ரெண்டு ரூபாய் எடுத்துட்டு போறியே , 

தேர்தல் வருதுனா என்ன கொடுப்பாங்கப்பா?

இதுக்கு மட்டும் என்ன கொடுப்பாங்கனு சொல்றியே  உன் வாயில மண்ண போடுற மாதிரி தான கொடுப்பான்." -#பசும்பொன்_தேவர்

பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் மேடை பேச்சு பதிவு செய்யப்பட்ட ஆடிவோவிலிருந்து தேவர் பேசிய ஆடியோவை கேட்டு அப்பிடியே மேலே எழுதி உள்ளேன். 

Sadaiyandi Puregold Sms

Thursday 4 April 2024

REGUNARHA GAUVERY BRIDGE - ரெகுநாத காவிரி பாலம்

REGUNARHA GAUVERY BRIDGE - ரெகுநாத காவிரி பாலம். 
உலகில் சிறந்த நீர் மேலாண்மை கொண்ட மாவட்டம் இராமநாதபுரம் தான். வைகை ஆற்றை அடைத்து ரெகுநாத சமுத்திரத்தை உண்டாக்கினார்கள். 
குண்டாற்றை திசை மாற்றி ரெகுநாத காவிரியை உண்டாக்கினார்கள். 
முல்லை பெரியாறு திட்டத்தை வழிவகுத்தவர்கள் சேதுபதி மன்னர்கள்.  
சேதுபதி மன்னர் ஆட்சி காத்தில் நெற்களஞ்சியமாக விளங்கிய பூமி இது. உலகின் மிகப்பெரிய நெற்களஞ்சிய தொட்டி இராமநாதபுரம் அரண்மனையில் தான் உள்ளது. 
 சேதுபதி மன்னர் ஆட்சி காலத்தில் செழிப்பாக இருந்த இராமநாதபுரம் - சுதந்திர இந்தியாவில் ஜனநாயக ஆட்சியில் தண்ணியில்லா காடு என அழைக்கப்படும் நிலை. 
படம்: மன்னர் ரெகுநாத சேதுபதி ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ரெகுநாத காவிரி கால்வாயின் குறுக்கே 1941ல் ஆங்கிலேய ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் தான் இது.

Wednesday 13 March 2024

ஃபார்வர்டு பிளாக் மொக்கையன் MLA

தேவர் புகழ் பாடகர், ,குறுவிவசாயி, ஃபார்வர்டுபிளாக் தோழர்,
கட்டபொம்மன் நாடகத்தில் கட்டபொம்மனாகத் தோன்றி நடிப்பார்.
நாடக நடிகர்கள் திரையினுள் இருந்த மேடைக்கு வரும்போது இறைவணக்கம் பாடி வருவது வழக்கம்.

   தோழர் மொக்கையன்
"காரிருள் தான் சூரியனை மறைப்பதுண்டோ 
கறைச்சேற்றால் தாமரையின்
வாசம்போமோ 
முறையற்றார் தம்பேச்சால் 
நேதாஜி,தேவர் புகழ் போமோ "
       என்று பாடி வருவார்.
நாடக சரித்திரப்பாடல் பாடி முடிந்ததும்,
" அதிவீராமபாண்டிய அரசகுலமணியே 
  அதிசயமானமரபுதந்த அறிவுச்சுடர்மணியே 
செம்பிய சோழர்குல செழும்பொன்மணியே
விசும்பூண் பாண்டிய வெற்றிக்குலமணியே 
பசும்பொன் நகர்தந்த 
முத்துராமலிங்கமணியே
    என்ற தொகையறாவுடன் 
தித்திக்கும் தமிழ் தத்துவமெல்லாம் 
கற்றுத் தெளிந்த தங்கம் 
சித்தியுடன் நறுமுத்தியளித்திடும் 
செந்தமிழ்முருகா என்கும் 
தேவர் எங்கே முருகா
பழனிமுருகா திருமுருகா 
           என்று தொடங்கும் பாடலைப்பாடுவது வழக்கம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேவர் திறக்கக்கோரிப் பாடிய பாடலும் இது தான்.
       " இருள் அற இந்தியா
        ஒளிபெற தீபமாய்
         திருமகன் நேதாஜிபாபு வந்திடுவார்"
          " கொடிபாரம்மா கொடிபாரு
            பார்வர்ட்பிளாக்கு கொடிபாரு"
"கைக்கூலி கைக்கூலி
காங்கிரஸுக்காரனெல்லாம் கைக்கூலி"
 "ரெட்டமாட்டுக்காரா ஓன்
குட்டுவெளுத்துப் போச்சுதடா "
 போன்ற  பாடல்கள்  திரும்பத் திரும்ப பாடச்சொல்லிக்  கேட்கும் பாடலாகும்.
       1957செப்டம்பர் 28 தமுக்கத்தில் நடந்த காமராஜ் எதிர்ப்பாளர்களின்
காங்கிரஸ் சீர்திருத்தக்கட்சி மாநாட்டில்
தேவரவர்கள் தனது உரையைத் தொடங்குவதற்கு முன்பாக
" அற்பர்களின் ஆட்சியினாலே
  அவதிப்படுகிறோம் 
  தமிழ்நாட்டிலே
  சூழ்ச்சியாகவே 
  பலதிட்டங்கள் தீட்டி
  சுட்டுக் கொல்கிறார் உயிர்களை"
      என்ற பாடல் அன்றைய ஆட்சியாளர்கள் மீது அறம்பாடியதாகவே அமைந்திருக்கும்.
        மொக்கையன் உசிலம்பட்டி தொகுதியில் செல்லம்பட்டி ஒன்றியத்தில் நாட்டாமங்கலம் ஐயம்பட்டியைச் சேர்ந்தவர்.
அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்.
1962ல் ஆண்டிபட்டி தொகுதியில்ஃபார்வர்டுபிளாக் வேட்பாளராக போட்டியிட்டார்.
1980ல் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
     மே.வங்க புருலியாவில்  நடைபெற்ற அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பும் போது ரயில் மேல்பெர்த்தில் இருந்து கீழே விழுந்ததில் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றி இறந்தார்.
     மிகச் சிறந்த பேச்சாளர்
      போராளி
        காமராஜ் ஆட்சியின் அடக்குமுறை உள்ளானவர். குழந்தைகளுக்கெல்லாம்
சிங்கம், பசும்பொன், என்று பெயர் வைத்திருப்பார். அவரது வாரிசுகள் எல்லாம் உள்ளனர்.
        சித்திரசேனன்  அவரது வாரிசுகளின் ஒருவர்  வீதிநாடகக் கலைஞர்
   தற்போது வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும்  திரைப்படம் ஒன்றில் நடித்திருக்கிறார் ,என அறிகிறேன்.
அந்தப்படம் பார்க்கவேண்டும்
தோழர் மொக்கையன் சித்திரசேனனுக்காக. 
     தோழர் மொக்கையன் புகழ் வாழ்க.

பதிவு : வரலாற்று பெட்டகம் ஐயா நவமணி அவர்கள்...

Monday 26 February 2024

அரசியலும் மதமும் நகமும் சதையும் போன்றது - தேவர்

நமக்குச் சரித்திரமும் முக்கியம்; சாஸ்திரமும் முக்கியம்.
 சரித்திரம், என்பது என்ன? தற்காலத்தில் நடை பெற்றது சரித்திரம். சாஸ்திரம் என்பது நீண்ட காலத்துக்கு முன்பே, மூன்றாவது கண் படைத்தவர்கள் கண்ட ஒன்று. 

முகக்கண் கொண்டு எழுதியது சரித்திரம்,  முக்கண் கொண்டு எழுதியது சாஸ்திரம். அரசியலும் மதமும் நகமும் சதையும் போன்றது. - #பசும்பொன்_தேவர்.

21.2.1957 ல் காஞ்சிபுரம் தேவர் சொற்பொழிவு.

பாரதியார் பற்றி பசும்பொன் தேவர்

புலவர்கள் என்பவர்களில் பலசாரார் உண்டு. சாதாரணமான நிலைமையில் வயிற்றுப் பிழைப்புக்காக, புலவர் தன்மையை மேற்கொண்டவர்களும், அதற்கு மேல் புகழை விரும்புகிற புலவர்களும் உண்டு. 

அதற்குமேல் தனக்கே புலவர் தன்மையில்லாமல், அடுத்தவன் எழுதிய புத்தகங்களை மொழி பெயர்த்து, அதிலுள்ள விஷயங்களை வேறு வாசகத்தில் எழுதி, தானும் புலவன் என்று சொல்பவர்களும் உண்டு. 

இந்த முறைகளில் எல்லாம் தன்னுடைய வாழ்வை அமைத்துக் கொண்டவர் அல்ல சுப்ரமணிய பாரதி. அவர் கடாட்சவாசி. அது எப்படி வருகிறது என்றால்? தெய்வத்தின் கிருபையால் ஏற்படுகிறது. - #பசும்பொன்_தேவர் 

21.2.1957ல் தேவர் காஞ்சிபுரம் பேச்சு

காலமோ மிகவும் கெட்டுபோய் இருக்கிறது.

காலமோ மிகவும் கெட்டுபோய் இருக்கிறது. ஒருகாலத்தில் ஒழுக்கமும் பெருந்தன்மையும் பதவியை கொடுத்தது மக்களுக்கு! அதற்கு பிறகு திறமை போதும் ஒழுக்கமோ, குணமோ தேவையில்லை என்ற முறையில் அரசியல் பதவி வந்தது.
அதற்குப் பிறகு ஒன்றும் தேவையில்லை, சந்தர்ப்பமே எவருக்கும் பதவியை கொடுக்கும் என்ற நிலைமையில் ஜனநாயகமானது சீரழிந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலைமையில் போகிறது இன்றைய உலக அரசியல்.
 ஜனநாயகத்தின் பேரால்! இது என்ன பலனைக் கொடுக்கும்? என்ன நன்மையைக் கொடுக்கும்? என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. - #பசும்பொன்_தேவர் 

5.8.1955 ல் அன்றைய சென்னை மாகாண சட்டசபையில் தேவர் பேசியது.