Monday 26 February 2024

அரசியலும் மதமும் நகமும் சதையும் போன்றது - தேவர்

நமக்குச் சரித்திரமும் முக்கியம்; சாஸ்திரமும் முக்கியம்.
 சரித்திரம், என்பது என்ன? தற்காலத்தில் நடை பெற்றது சரித்திரம். சாஸ்திரம் என்பது நீண்ட காலத்துக்கு முன்பே, மூன்றாவது கண் படைத்தவர்கள் கண்ட ஒன்று. 

முகக்கண் கொண்டு எழுதியது சரித்திரம்,  முக்கண் கொண்டு எழுதியது சாஸ்திரம். அரசியலும் மதமும் நகமும் சதையும் போன்றது. - #பசும்பொன்_தேவர்.

21.2.1957 ல் காஞ்சிபுரம் தேவர் சொற்பொழிவு.

பாரதியார் பற்றி பசும்பொன் தேவர்

புலவர்கள் என்பவர்களில் பலசாரார் உண்டு. சாதாரணமான நிலைமையில் வயிற்றுப் பிழைப்புக்காக, புலவர் தன்மையை மேற்கொண்டவர்களும், அதற்கு மேல் புகழை விரும்புகிற புலவர்களும் உண்டு. 

அதற்குமேல் தனக்கே புலவர் தன்மையில்லாமல், அடுத்தவன் எழுதிய புத்தகங்களை மொழி பெயர்த்து, அதிலுள்ள விஷயங்களை வேறு வாசகத்தில் எழுதி, தானும் புலவன் என்று சொல்பவர்களும் உண்டு. 

இந்த முறைகளில் எல்லாம் தன்னுடைய வாழ்வை அமைத்துக் கொண்டவர் அல்ல சுப்ரமணிய பாரதி. அவர் கடாட்சவாசி. அது எப்படி வருகிறது என்றால்? தெய்வத்தின் கிருபையால் ஏற்படுகிறது. - #பசும்பொன்_தேவர் 

21.2.1957ல் தேவர் காஞ்சிபுரம் பேச்சு

காலமோ மிகவும் கெட்டுபோய் இருக்கிறது.

காலமோ மிகவும் கெட்டுபோய் இருக்கிறது. ஒருகாலத்தில் ஒழுக்கமும் பெருந்தன்மையும் பதவியை கொடுத்தது மக்களுக்கு! அதற்கு பிறகு திறமை போதும் ஒழுக்கமோ, குணமோ தேவையில்லை என்ற முறையில் அரசியல் பதவி வந்தது.
அதற்குப் பிறகு ஒன்றும் தேவையில்லை, சந்தர்ப்பமே எவருக்கும் பதவியை கொடுக்கும் என்ற நிலைமையில் ஜனநாயகமானது சீரழிந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலைமையில் போகிறது இன்றைய உலக அரசியல்.
 ஜனநாயகத்தின் பேரால்! இது என்ன பலனைக் கொடுக்கும்? என்ன நன்மையைக் கொடுக்கும்? என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. - #பசும்பொன்_தேவர் 

5.8.1955 ல் அன்றைய சென்னை மாகாண சட்டசபையில் தேவர் பேசியது.