Saturday 31 January 2015

கிட்டி புல்

‘கிட்டிப்புள்’ எனப்படும்
விளையாட்டு சிறுவர்களின்
தனித்துவமான விளையாட்டு.
எல்லோர் கையிலும் பம்பரமும்
சாட்டையும் இருந்த
நிலை திடீரென மாறி, எங்கும்
கிட்டி எனப்படும்
குச்சி இருக்கும். 15 இஞ்ச்
நீளமுள்ள மூன்று விரல்
பருமனான குச்சியும், 4 இஞ்ச்
நீளமுள்ள சிறிய குச்சியும்தான்
விளையாட்டுப் பொருட்கள்.
சிறிய
குச்சியானது ‘கிட்டிப்புள்’
எனப்பட்டது. அதன்
இரு முனைகளும்
செதுக்கப்பட்டு கூராக இருந்தன.
பெரிய
குச்சியானது கிட்டி எனப்பட்டது.
கிட்டிப்புள் ஆட்டத்தில்
இருவகையான ஆட்டங்கள்
பெரிதும் ஆடப்பெற்றன. தரையில்
குச்சியினால் நீளவாக்கில்
சிறிய பள்ளம் தோண்டி,
அதன்மீது புள்ளை வைத்துக்
குச்சியினால் வேகமாகத்
தள்ளிவிடும்போது, புள்
காற்றில்போய்த் தள்ளிவிழும்.
எதிரே விளையாடுகிறவர்
ஓடிப்போய் புள்ளை எடுத்துக்
குழியை நோக்கி வீசுவார்.
குழியிலிருந்து ஓரடிக்குள்
புள் விழுந்தால்,
விளையாடுகிறவர் தோற்றவர்
ஆவர். ஆனால் அவர்
குழிக்கு முன்னே வந்து,
எதிராளியை வீசப்பட்ட புள்ளைத்
தனது கையில் வைத்திருக்கும்
குச்சியினால் ஓங்கி அடிப்பார்.
புள் மீண்டும் காற்றில் பறக்கும்.
இவ்வாறு பாய்ந்து வரும்
புள்ளை எதிராளி பிடித்துவிட்டால்
விளையாடுகிறவரின் ஆட்டம்
முடிந்துவிடும். இல்லாவிடில்
புள் விழுந்த இடத்திலிருந்து,
குழிவரை கிட்டியினால்
அளந்து புள்ளிகளைச் சேர்த்துக்
கொள்வார்கள். முதல்
அடியின்போது அளந்தால்
கிட்டிக்கு ஐந்து புள்ளிகள்
எனில், மறுபடியும் வீசப்பட்ட
புள்ளை
அடித்துவிட்டு அளந்தால் பத்துப்
புள்ளிகள் ஆகிவிடும்.
இவ்வாறு அடிப்பதற்கு ‘அடி’
ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர்
உண்டு. பாய்ந்து வரும்
புள்ளினைப் பிடிக்கிறேன்
என்று மண்டையில்
அடிபட்டு ரத்தம் சிந்தியவர்களும்
உண்டு.L