Thursday 30 November 2017

பெரியார் vs தேவர்

பெரியார் கடைசிவரை... பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த'
முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!

( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)...

நட்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.
சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.
இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.
எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.
உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்
சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..?முடியாது !
அதற்காக ஒருவன் அவசரப்பட்டு ...
என் கையை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கை' உண்டு.
என் காலை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கால்' உண்டு.
நான் என் கண்ணை பார்க்க நினைக்கிறேன் அது தெரியவில்லை, ஆகையால் எனக்கு கண்ணில்லை என்று பேசலாமா..? அது தவறு !
கண்ணாடியில் பார்த்தால் கண்களின் பிம்பம் தெரியும்...! அதைப்போல் விக்ரஹங்கள் கடவுளின் பிம்பமாக இருக்கிறது.
இதோ இங்கு ரோஜாப்பூ மாலை இருக்கிறது..
இது என்ன பூ எனக்கேட்டால்
அதன் பெயரை சொல்லலாம்..!
நிறத்தை கேட்டால் நிறத்தையும் சொல்லலாம்
இது எந்த இடத்தில் கிடைக்கும் என்வும் சொல்லிவிடலாம்..ஆனால்..
அதன் வாசம் எப்படியிருக்கும் எனக்கேட்டால் "முகர்ந்து" பார் என்றுதான் சொல்லமுடியும்!
கடவுள் எப்படியிருப்பார் என்று கேட்டால்..உணர்ந்துப்பார் என்றுதான் சொல்லமுடியும்...

மண்ணாங்கட்டியும் காமராஜரும்

மண்ணாங்கட்டியும் காமராஜரும்

நவமணி ஐயா 

Wednesday 29 November 2017

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

தன் காலில் நிற்க ஒருவனுக்கு எது உதவுமோ அதுவே உண்மையான கல்வி. - #சுவாமி_விவேகானந்தர்

பிறருக்காக வாழ்பவரே வாழ்பவர். மற்றவர்கள் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தாலும் பிணங்களே ஆவர்.-#சுவாமி_விவேகானந்தர்

சுயநலம் இன்மை அதிக லாபகரமானது. மக்களுக்குத் தான் அதனைக் கடைபிடிக்கும் பொறுமை இல்லை. #சுவாமி_விவேகானந்தர்

ஆன்மீக ஞானம் ஒன்றே நம் துன்பங்கள் அனைத்தையும் நிரந்தரமாக அழிக்க வல்லது.- #சுவாமி_விவேகானந்தர்

Saturday 25 November 2017

சுவாமி மலை கோவில் தரிசனம்

கவலைகளை மறக்க அல்லது குறைக்க செய்யும் ஒரே மருந்து #ஆன்மீகம்.
********************************************
     சுவாமி மலை கோவில் தரிசனம்

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கிமீ தொலைவில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும். இக்கோயிலில் சுந்தரேஸ்வரர் உள்ளதால் இக்கோயிலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர்.

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்


முருகப்பெருமான் இக்கோயிலில் 'தகப்பன்சுவாமி' எனப் புகழ் பெற்று காணப்படுகிறார். குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால் சுவாமிமலை என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது.

முருகனின் அறுபடைவீடுகளில் இதுவும் ஒன்றாகும். தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த அருணகிரிநாதர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழில் 4ம் திருமுறையில் உள்ளன. கட்டுமலையாக அமைந்துள்ள குன்றின்மீது இக்கோயில் அமைந்துள்ளது. ஐந்து நிலையுடன் கூடிய ராஜகோபுரம் தெற்கு நோக்கியுள்ளது. இத்தலத்தின் தல மரம் நெல்லி மரமாகும். முருகன் சன்னதிக்குச் செல்ல தமிழ் ஆண்டுகள் அறுபதைக் குறிக்கும் 60 படிகளில் ஏறிச்செல்ல வேண்டும். மகாமண்டபத்தில் கொடி மரத்தின் அருகே கண்கொடுத்த விநாயகரான நேத்திர விநாயகர் உள்ளார். உள் சுற்றில் தல விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சரஸ்வதி, நாரதர், வீரபாகு, அகத்தியர், அருணகிரிநாதர் ஆகியோர் சிலைகள் உள்ளன. சுவாமிநாதசுவாமியின் சன்னதிக்கு எதிராக மயிலுக்குப் பதிலாக யானை வாகனம் உள்ளது. இது இந்திரன் அளித்ததாகும். கருவறையில் முருகன் வலது கரத்தில் தண்டம் ஏந்தியபடி ஊறு முத்திரையில் நின்ற நிலையில் அருள் பாலிக்கின்றார்.

திருவண்ணாமலை கோயில்

ஓம் நமச்சிவாய !!!

"நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையானே"


எண்ணிய இடத்தில் புண்ணியத்தைத் தரும், நினைத்த இடத்தில் முக்தியைத் தரும் ஆலயம் திருவண்ணாமலை. ஆயிரம் நாவுகள் கொண்ட ஆதிசேஷனே சொல்ல முடியாத பெருமைகள் பல கொண்ட அக்கினித் தலம்.  ஈசனே நெருப்பின் வடிவெடுத்து திருமால், பிரம்மாவின் ஆணவத்தை அடக்கிய தலமிது. சைவ நெறியையே ஏற்று வாழும் அன்பர்களுக்கு எல்லாம் இந்தத் திருவண்ணாமலையே தபோவனம். பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், அடிக்கொரு லிங்கம் உள்ள திருத்தலமாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது. இங்கு மலையே

சிவனாக வணங்கப்படுகிறது.

கிரி என்று அழைக்கப்படும் மலையை சுற்றி வலம்வருவதால் கிரிவலம் என்ற பெயர் வந்தது. ஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14 கி.மீ நடக்கவேண்டும். இதை மேற்கொள்ளும் அனைத்து பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் மன அமைதிபெற்று உடல் முழு உற்சாகமும் பெரும் என்பதில் பக்தர்களிடையே உள்ள முழு நம்பிக்கை. தற்பொழுது அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை பல்வேறு காலங்களில் பலவிதமான உருவத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த மலை கிருதாயுகத்தில் அக்னியாகவும், தீர்த்தயுகத்தில் மாணிக்க கல்லாகவும், துவாபரயுகத்தில் தங்கமாகவும், தற்பொழுது இக்கலியுகத்தில் வெறும் கல்லால் உருவெடுத்த மலையாகவும் விளங்குகிறது என நம்பபடுகிறது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அஸ்டலிங்கம் என எட்டு வித லிங்கங்கள் உள்ளன. இவைகள் ஓவ்வொன்றும் ஓவ்வொரு திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு திசைகளை குறிக்கின்றது. இவ்வெட்டு லிங்கங்களின் பெயர்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம், என்று அழைக்கப்படுகிறது.இவையனைத்து லிங்கங்களும் மனிதனுடைய ஓவ்வொரு காலகட்டத்தை குறிக்கின்றது. அத்துடன் பக்தர்களின் நன்மைக்காக பல நன்மைகளால் அருள்புரிந்து சிறப்பான வாழ்கை அமைய வழி செய்கிறது. இவ்வெட்டு லிங்கங்களும் எட்டு நவகிரகங்களை குறிக்கிறது. இவை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு பல நன்மைகள் பயக்கும் என்பதில் உண்மையுண்டு என்று நம்புகிறார்கள்.

திருவண்ணாமலை கோயில்
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது. இச்சிவாலயம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். பிரம்மாவும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டையிட்டுக் கொண்டபோது, சிவபெருமான் அக்னி தூணாக நின்றார். அவருடைய அடியைத் தேடி திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமியைக் குடைந்துச் சென்றார். பிரம்மா சிவபெருமானின் முடியைத் தேடி அன்ன வாகனத்தில் பறந்து சென்றார். இவர்கள் இருவராலும் சிவபெருமானின் அடிமுடியைக் காண முடியவில்லை என்பது இத்தலத்தின் தலப் புராணமாகும்.

திருவண்ணாமலை சிவாலயத்தில் ஆண்டுக்கு நான்கு முறை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இவற்றுள் கார்த்திகை மாதத்தில் கொண்டாப்படுகின்ற பிரம்மோற்சவம் சிறப்பானதாகும். இந்தப் பிரம்மோற்சவ விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் பத்தாம் நாள் கார்த்திகை தீப திருநாளாகும். இச்சிவாலயத்தில் கார்த்தை தீப நாளான்று மகா தீபம் ஏற்றப்படுகிறது. அந்நாளில் சிவாலயத்திற்கு வந்து, திருவண்ணாமலையை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். மலையின் உச்சியில் இந்தத் தீபம் ஏற்றப்படுகிறது. இதனை maga தீபம் என்று அழைக்கின்றனர்.

சைவ சமயத்தில் நினைத்தாலே முக்தி தரக் கூடியத் தலமாக திருவண்ணாலை உள்ளது.

கிரிவலம் தொகு
கார்த்திகை தீப திருநாளன்றும், முழுநிலவு நாட்களிலும் சிவ பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருகிறார்கள். இதனை மலைவலம் என்று அழைக்கின்றனர். பக்தர்கள் வலம் வருகின்ற கிரிவலப் பாதை இரண்டு உள்ளது.

சித்தர்கள்
திருவண்ணாமலையில் மலைவலம் வருகின்ற பாதையில் எண்ணற்ற சித்தர்களின் ஜீவசமாதிகள் அமைந்துள்ளன. இடைக்காடர், குகை நமச்சிவாயர், இரமண மகரிஷி ஆசிரமம், சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம், விசிறி சாமியார் ஆசிரமம் போன்றவை உள்ளன.

Wednesday 22 November 2017

ஓநாய் துரத்தினால்

நான்கு குதிரைகள் பூட்டிய வண்டியில் வரும்போது ஓநாய் ஒன்று துரத்தினால், வண்டியை நிறுத்தி ஓநாயுடன் சண்டை போடாமல், நான்கு குதிரைகளில் ஒன்றைக் கழற்றி ஓநாய்க்கு ஆகாரமாய்க் கொடுத்துச் சிறிது தூரமும், மறுபடியும் ஓநாய் துரத்தினால் மற்றொரு குதிரையையும் இரையாக கொடுத்தும், கடைசியில் ஒரு குதிரையோடவது குறிப்பிட்ட இடத்தை வந்தடைவது தான் வெள்ளையர்களின் தந்திரங்களில் ஒன்று . -#ஸ்ரீதேவர்


Tuesday 21 November 2017

இனி தக்க பதிலடி கொடுக்கப்படும்

நவரச நாயகன் கார்த்திக் அகில இந்திய பார்வர்ட் பிளாக் தமிழக தலைவராக பொருப்பேற்ற காலத்திலிருந்து நான் இந்த இயக்கத்தில் இருக்கிறேன். அதன்பிறகு தலைமைகள் மாறினாலும் அடியேன் கட்சியை விட்டு மாறவில்லை. நான் தேவர் நேதாஜி எனும் இருபெரும் தலைவர்களின் அ.இ.பார்வர்ட் பிளாக் கட்சியின் தொண்டனே தவிர வேறு எவரையும் கட்சியாக நினைக்கவில்லை. அவ்வபோது எந்த தலைமை உள்ளதோ அவர்களுக்கு உண்மையாக உள்ளேன்.  இப்போது சிலர் கட்சி தலைமையை விமர்சனம் செய்வதும் , வேறு நபர்களை முன்னிருத்து கருத்து தெரிவிப்பதும் கண்டனத்திற்கு உரியது. நான் கட்சியில் சேர்ந்தது முதல் பலரையும் பார்த்துவிட்டேன். எதையாவது சொல்லி நல்லது செய்வதாக நினைத்து இயக்கத்திற்கு கேடுதல் விளைவிப்பவர்களே! எதுவாக இருந்தாலும் என்னிடம் கேளுங்கள் ஒவ்வொருவரை பற்றியும் புட்டு புட்டு வைக்கிறேன்.   கெடுதல் செய்யனும்னு நினைத்தால் நாட்டுக்கு தியாகமே பன்னாத திராவிட கட்சிக்குள் உங்க வேலைய காட்டுங்க. அதைவிட்டு விட்டு தேவர் நேதாஜி எனும் தியாக தலைவர்களின் இயக்கத்திற்கு கெடுதல் செய்யாதீர். இனி பார்வர்ட் பிளாக் கட்சியை பற்றியோ எங்கள் பொதுச்செயளாலர் P.V.கதிரவன் அவர்களை பற்றியோ அவதூறு செய்யாதீர்.  மீறி தொடர்ந்தால்?  வேணாம் நிறுத்திக்கொள்.

முடிந்தால் நீங்கள் கட்சியில் சேர்ந்து செயல்படுங்கள். தலைமை முடிவு சரியில்லை என்றால் 10ஆயிரம் தொண்டர்கள்  சேர்ந்து தலைமையிடம் கேள்வி கேட்போம். ஆயிரக்கணங்கான தொண்டர்கள் தொடர்ந்து கேள்விகேட்டால் எந்த தலைமையும் கவனமாக கட்சி பணி செய்வார்கள். அந்த நிலையை கொண்டு வாருங்கள். ஆனால் கட்சியிலும் சேராமல்,  வேறு கட்சியிலும் , சாதி இயக்கங்களிலும் இருந்துகொண்டு எங்கள் தலைமையை  இனி தக்க பதிலடி கொடுக்கப்படும்.

ஜெய்ஹிந்த்

பூவலிங்கம் மாரி
நாம் இருப்போம் நம் கட்சியில்
அகில இந்திய பார்வர்ட் பிளாக்

ராஜபாளையத்தில் தேவர்

அரசியல்வாதியாகவும் ஆன்மீகவாதியாகவும் தேசவிடுதலைப் போராட்ட வீரராகவும்மு பன்கமுகத்தன்மையுடன் விளங்கிய தலைவர் பசும்பொன் தேவர். அவர் ஆன்மீகவாதி என்பதால் குருபூஜை விழா நடத்தப்படுகிறது அரசு விழாவாகவும் நடத்தப்படுகிறது

வெள்ளையாரை எதிர்த்து காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக களம் இறங்கினார் ஆனாலும் விடுதலைக்கு முன்பே காங்கிரஸ்கட்சியோடு முரண்பட்டே நின்றார்
1938 ம் ஆண்டு இராஜபாளையத்தில் சென்னை ராஜதானியின் காங்கிரஸ் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது அதில் தேவர் கலந்து கொண்டார் அதில் கம்யூனிஸ்ட்கட்சியின் தலைவர்கள் என.ஜி.ரங்கா இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் ஏ.கே.கோபலன் பி.ராமமூர்த்தி ப.ஜீவானந்தம் பி.சீனிவாசராவ் ஆகியோரும் கலந்து கொண்டனர் (அந்த காலத்தில் கமயூனிஸ்ட்கள் சோசலிஷ்ட் காங்கிரஸ் என்ற பெயரில் காங்கிரஸ்கட்சிக்குள் இருந்து செயல்பட்டனர்)
அந்த மாநாட்டில் தேவரும் கம்யூனிஸ்ட் தலைவர்களும் விவாயிகளை அடிமைத்தளையிலருந்து மீட்க ஜமீன்தாரிமுறை ஒழிக்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்ற போராடினார்கள் ஆனால் காங்கிரஸ் தலைமை மறுத்துவிட்டது
இவர்கள் அனைவரும் மாநாட்டை புறக்கணித்து வெளியேறினார்கள் அவர்கள் பின்னால் ஆயிரக்கானக்கான விவசாயிகள் அணிவகுத்து வெளியேறினார்கள்
உடனே பசும்பொன்தேவர் தலையில் தனியாக விவசாயிகள் மாநாடு நடை பெற்றது ஒரேநாளில் இராஜபாளையத்தில் இரண்டுமாநாடுகள் மாநாட்டில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பேசினார்கள் இறுதியாக தமிழகத்தில்
ஜமீன்தாரி முறை ஒழிக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை தேவர் முன்மொழிந்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது இதுவே பின்னாட்களில் விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்திற்கு வித்திட்டது
சென்னை ராஜதானியின் பிரதமராக இருந்த இராஜபாளையத்தை சேர்ந்த பி.எஸ் குமாரசாமிராஜா இந்த பதவிக்கு வருவதற்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார் இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக  ராமநாதபுரம் ராஜா அனைத்து ஜமீன்தார்கள் செட்டிநாட்டுராஜா விருது நகர் பெரும் வணிகர்கள் களம் இறங்கினார்கள் காங்கிரஸ் தேவர் தலைமையில் பணியாற்றி குமாராசாமிராஜா வெற்றிபெற்றார்
அதன் பின்பு தேவர் காங்கிரஸிலருந்து விலகி நேத்தாஜியுடன் இணைந்து கொண்டார்
நாடு விடுதலைக்குப்பிறகு பார்வாட்பிளாக் கம்யூனிஸ்ட்கட்சி காங்கிரஸின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து போராடினார் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது
1952 முதல் பொதுத்தேர்தல் ராஜபாளையத்தில் அன்று சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்த பி.எஸ்.குமாரசாமிராஜா காங்கிரஸ் வேட்பளராக போட்டியிட்டார் தனிப்பட்டமுறையில் நாணயமானவர் விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுத்தவர்தான் இவர் தேவருக்கும் கம்யூனிஸ்ட்கட்சி தலைவர்களும் மிகவும் நெருக்கமானவர்தான்
ஆனாலும் அரசியல் கொள்கை என்ற அடிபபடையில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் கம்யூஸ்ட்கட்சியின் தலைவர்கள் ஜீவா பி.ராமமூர்த்தி தி.க சார்பில் பெரியார் மற்றும் தேவர் ஆகியோர் இங்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டி.கே.ராஜாவிற்கு ஆதராவக பிரச்சாரத்தில் இறங்கினார்கள் தேவர் அவர்களின் தீவிரமான பிரச்சாரம் முதலமைச்சரான பி.எஸ்.குமாரசாமிராஜா அவர்கள் வெற்றி பெற இயலாமல் போனதற்கு முக்கிய பாங்காற்றியது என்பது வரலாற்று உண்மை.

Ravi.Ra

Monday 20 November 2017

போதும்பா ஆண்ட குல பெருமை பீத்தி பேச்சு

அகில இந்திய பார்வர்ட் பிளாக் தேசிய கட்சினு தமிழ்நாட்டுல சொல்வதற்கு பதிலா, #கள்ளர்_மறவர்_அகமுடையோர் களுக்கு பாத்தியப்பட்ட கட்சி கிடையாது என்பதை தெளிவுபடுத்த வேண்டிய நிலை தான் உள்ளது. வங்காளி , குஜராத்தி, மராத்தி, மலையாளி,  கன்னடன், தமிழன்  என சாதி மதம் கடந்த பலதரப்பட்ட மக்கள் தொண்டர்களாக கொண்ட இயக்கம் இது. இந்த கட்சியின் நிருவனர் #நேதாஜி_சுபாஷ்_சந்திர_போஸ் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நேதாஜி இல்லாத நிலையில் நேதாஜியால் தென்னாட்டு போஸ் என பட்டம் சூட்டப்பட்ட பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் தான் இந்த இயங்கத்தை தன்னை இழந்து காத்தார். ஆனால் நாம் அவரின் பெயரில் உள்ள #தேவர் என்பதை எடுத்துக்கொண்டு முக்குலத்து சிங்கமாக மாற்றி சாதி தலைவராக்கியதே மகாபாவம். அதுலயும் அந்த புனித இயக்கத்திற்கு #கள்ளர் சமுதாய கட்சி என்ற நிலையை ஏற்படுத்தியது மன்னிக்க முடியாத மகா கொடிய பாவம். தேவரை மறவர் சாதியாக்கி நேதாஜியை தேவர் சமுதாயமாக்கி இப்போ, இவர்களின் படத்தை பயன்படுத்தினாலே வழக்கு போடுரானுக மானங்கெட்ட சில காவல்துறை,  எங்களுக்கு தான் படித்தும் அறிவில்லைனா! படிச்சு #தேர்வு எழுதி போலிஸ் ஆன காவல்துறையினருக்கு தெரியவில்லை தேவர் நேதாஜி எனும் புனியத் தியாகிககளை.

போதும்பா சாமி!  போதும்பா ஆண்ட குல பெருமை பீத்தி பேச்சு.

தேவர் ,நேதாஜி ,பார்வர்ட் பிளாக் என சாதி வட்டத்துக்குள் கொண்டுவந்தது தான் நம்ம பெருமைனா? அப்படிபட்ட பெருமையே தேவையில்ல!

*********************************
நேதாஜி தேவர் பற்றாளர்களாக
நாம் இருப்போம் நம் கட்சியில்
#அகில_இந்திய_பார்வர்ட்_பிளாக்

அம்மா சரஸ்வதி ராஜமணி

18 நவம்பர் 2017,

ஒரு இந்திய பெண் உலக அழகியாக பட்டம் பெற்ற நாளில் நான் இவருடன் பயணத்தில் இருந்தேன். சரஸ்வதி ராஜமணி. குழந்தை வயதில் காந்தியுடன் அஹிம்சை பற்றி விவாதம் செய்தவர். இளம் வயதில் INA உளவாளியாக பணியாற்றியவர். அதிகம் பேசப்படாதா பெண் சாதனையாளர்.

சரஸ்வதி ராஜமணி பர்மாவில் வசித்த பெரும் செல்வந்தரின் தமிழ்மகள். தன் 16 வயதில் நேதாஜியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தன்னிடமிருந்த தங்கத்தையும், வைரத்தையும் நிதியாக நேதாஜி கட்டமைத்த இந்திய தேசிய ராணுவத்திற்கு கொடுக்கிறார்.

இதை கேள்விப்பட்ட நேதாஜி அந்த நகைகளுடன் அவர் வீட்டிற்கு வந்து தந்தையிடம் "விவரம் தெரியாத இளம் பெண் ஆர்வத்தில் நகையை கொடுத்துள்ளார், இதை திரும்ப வாங்கி கொள்ளுங்கள்" என்று கொடுக்கிறார். "இல்லை அது என் நகை, திரும்ப வாங்க முடியாது" ராஜமணி பதில் அளிக்கிறார்.

அவரது ஆர்வத்தை கண்ட நேதாஜி அவரை INAவின் உளவு பிரிவில் இணைத்து கொள்கிறார். இளம் வயதில் உளவாளியாகிறார். மணி என்ற பெயரில் ஆணாக உளவு பார்த்து ஒருமுறை ஆங்கிலேயர்களிடம் சிக்கி காலில் துப்பாக்கி தோட்டாவுடன் தப்பிக்கிறார்.

அதன் பின் நேதாஜியின் பெண்கள் படையணியில் முக்கியமானவராக அறியப்பட்டவர். சுதந்திரத்திற்கு பின்னும் நேதாஜி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு இன்றும் போராடுகிறார். டெல்லியில் அது சமந்தமான பேரணி என்றதும் உற்சாகமாக எங்களுடன் கிளம்பி வந்தார்.

90 வயதாகிறது. உடலில் முன்பிருந்த வலு இல்லை. குடும்ப உறவுகள் அதிகம் இல்லை. மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்படவுமில்லை. அரசாங்கத்தின் பென்சனில் வாழ்கிறார். சென்னையில் சுனாமி வந்த போது சேர்த்து வைத்த பென்சன் தொகையும் நிவாரணத்திற்கு கொடுத்துள்ளார்.

காலை முதல் மாலை வரை எங்களுடன் போராட்டத்தில் நிற்கிறார். கிடைக்கும் உணவை சாப்பிடுகிறார். அவரை சந்திக்கும் அனைவரையும் நினைவில் வைத்திருக்கிறார். இந்தி, ஆங்கிலம் சரளமாக பேசுகிறார். கையெழுத்து கேட்பவர்களுக்கு தமிழில் கவியெழுதி கையெழுத்திடுகிறார்.

முதுமை, வறுமை, தனிமை, வெறுமை எதுவும் அவரை கலங்க வைக்கவில்லை. ஆனால் நேதாஜி பற்றியும் அவர்களது விடுதலை போராட்டம் பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது அழுகிறார். ஆம் ஒரு உண்மையான போராளிக்கு அது தானே செல்வம், அது தானே இழப்பு.

இந்தியா தன் புதிய உலக அழகியை கொண்டாடிக்கொண்டிருந்தது. எனக்கு அம்மா சரஸ்வதி ராஜமணி அழகியாக தெரிந்தார்..!  வாழ்க அவரது தொண்டு.. வளர்க நேதாஜி புகழ்..!
**************************************
பூபதி முருகேஷ் அவர்களின் பதிவு

Sunday 19 November 2017

காக்கும் கடவுள் பசும்பொன் தேவரைய்யா

.''''''''''''காக்கும் கடவுள் பசும்பொன்'''''''''''''' ''''''''''''''''''''''''''''#தேவரைய்யா ''''''''''''''''''''''''''''

இன்றைக்கு நினைத்தாலும் மெய் சிலிர்க்கும் நினைவுகள்... பசும்பொன் தேவர் வரலாறு என்ற பெயரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகானின் வாழ்க்கையில் முக்கிய இடம் பெற்ற சைதன்ய சுவாமிகள் ஜீவ சமாதி இடத்தில் காட்சிகளை பதிவு செய்ய புறப்பட்டோம்.
ஆடுதுறைக்கு நாங்கள் போய் சேரும் போது இரவு 8 மணியை தாண்டி விட்டது.
காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது என்று சிலரிடம் வழி கேட்டோம்.  அதில் அவர்கள் சொன்னதை வைத்து ஒரு இடத்தை அடைந்தோம்... ஓங்கி வளர்ந்த பெரிய வேப்பமரம்... அதன் அடியில் சிதலமடைந்த நிலையில் ஒரு மேடை... அதில் ஒரு விநாயகர் சிலை சின்னதாய்... சுற்றிலும் கும் இருட்டு... புதர்கள்... அமானுஷய சூழல்... பயம் கண்டிப்பாக தோன்றும்... ஆனால் எங்கள் குழுவில் இருந்த யாருக்கும் அப்படி எந்த உணர்வும் இல்லை... எங்கள் நோக்கம் இரவுக்குள் சுவாமிகளின் நினைவிடத்தில் காட்சிகளை எடுத்து விட்டு விடிவதற்குள் மதுரை செல்ல வேண்டும் என்பதுதான்...
எந்த பய உணர்ச்சி இல்லாமல் ஓங்கி வளர்ந்த புதர்களை கைகளிளேயே விலக்கி நாங்கள் பயணம் செய்த காரின் முன் விளக்குகளின் வெளிச்சத்தை அந்த இடத்தில் செலுத்தி படமாக்க முயன்ற போது... தூரத்தில் யாரோ ஒருவர்.... "யாருப்பா அது.... இடுகாட்டில் ராத்திரி நேரத்தில்... மொதல்ல அங்க இருந்து வெளிய வாங்க" என சத்தம் வர.... அப்போது தான் எங்களுக்கு தெரிந்தது நாங்கள் நிற்கும் இடம் இடுகாடு என்று...
அப்போது நேரம் இரவு 9ஐ தாண்டியது...
சத்தம் போட்டு அழைத்தவரிடம் போய் சுவாமிகள் நினைவிடம் கேட்டதும் நாங்கள் தேடிய இடத்திற்கு எதிர் திசையில் சுற்றிலும் தடுப்பு அதற்குள் ஜீவசமாதி இருந்தது...
அதற்குள் அந்த இடத்தை பராமரிப்பவர் அங்கு வந்து சேர்ந்தார்.
அப்போது தான் எங்களை அங்கு அழைத்து வந்தவர் ஒரு விஷயத்தை சொல்ல.... அதைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியில் ரத்தம் உறைந்தோம்...
ஜீவ சமாதி இடத்தை தேடி முதலில் நாங்கள் போன இடம் ஒரு இடுகாடு... அதோடு அந்த இடத்தில் மாலை 5 மணியை தாண்டி விட்டாலே மனித நடமாட்டம் இருக்காதாம்... காரணம் அந்த இடத்தில் நிறைந்து காணப்படும் புதர்களில் ஆளுயர விஷப் பாம்புகள் அதிகம் இருக்கிறதாம்...
தீண்டினாலே அடுத்த நொடி மரணத்தை தரும் விஷ ஜந்துக்கள் அதிகம் இருக்கும் அந்த இடத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் வெறும் கால்களிலும், கைகளில் புதர்களை விலக்கியும் எங்கள் பணியை செய்து கொண்டிருந்தோம்.

ஆனால்.... உள்ளூர் மக்கள் மதிய நேரங்களில் மாலை நேரங்களில் கூட செல்ல அச்சப்படும் இடத்தில் விஷ ஜந்துக்கள் மத்தியில் என்னையும் எனது குழுவினரையும் எங்களின் ஆலோசகர் மரியாதைக்குரிய நவமணி ஐயா அவர்களையும் காத்து... விஷ ஜந்துக்கள் வாய்களை கட்டி... அங்கிருந்து நாங்கள் பத்திரமாக திரும்பவும், ஜீவசமாதி அமைந்துள்ள இடத்தில் நள்ளிரவில் பத்திரமாக படப்பிடிப்பு நடத்தி மதுரை வந்து சேர்ந்தோம். அதுவரை எங்கள் குழுவை பாதுகாத்தது பசும்பொன் தேவர் திருமகானின் ஆசி என்றால் அது மிகையாகாது.

வரலாறுகள் எப்போதும் நெஞ்சில் நிலைத்து நிற்கும். இப்படி ஒரு அனுபவம்... கோடான கோடிபேரின் தெய்வமாக திகழும் தேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாற்றில் என்னையும் இணைத்த என் மதிப்பு மிகு நவமணி ஐயா அவர்களுக்கு வாழ்க்கை முழுதும் நன்றிகள் சொல்ல கடமை பட்டிருக்கிறேன் - ஆபிரகாம் லிங்கன்
ஆவணப்பட இயக்குனர்
பசும்பொன் தேவர் வரலாறு.

ஸ்ரீசைதன்ய சுவாமி சித்தர் ஜீவசமாதி படம்(சடையாண்டி)

Saturday 18 November 2017

சைதன்ய சித்தர் ஜீவசமாதி

பசும்பொன் தேவரின் குடும்ப குருநாதர் சைதன்ய சுவாமிகளின் ஜீவசமாதி!

தேவர் மீதான கொலை வழக்கு விசாரணை புதுக்கோட்டையில் சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்புச் சொல்லும் நாள் 1959 ஜனவரி 7 ம் தேதி வந்து விட்டது. நீதிபதி அனந்த நாராயணன், சரியாக 2 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்து அமர்ந்தார். 50 பக்கங்கள் கொண்ட தனது தீர்ப்பைப் படித்தார்.

"தேவர் மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இமானுவேல் கொலைக்கும் தேவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று யூகிப்பதற்குக் கூட சாட்சியம் இல்லை. எனவே தேவரை விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கிறேன்" என்று நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களான குருசாமித் தேவர், காட்டுச்சாமித் தேவர், முனியசாமித் தேவர், சடையாண்டித் தேவர், பெரியசாமித் தேவர் ஆகியோரை சந்தேகத்தின் பலனை அளித்து விடுதலை செய்தார் நீதிபதி. இதர மூன்று பேர்களான அங்குசாமித் தேவர், பேயன் முனியாண்டித் தேவர், தவசித் தேவர் ஆகியோர் கொலைக் குற்றவாளிகளே என்று தீர்மானித்து, ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி.

தேவர் விடுதலை அடைந்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்து, மக்களுக்குக் காட்சி தந்ததும், மக்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, ஆரவாரம் செய்து, கோஷங்கள் எழுப்பிக் கரவொலி செய்தனர். தேவருக்கு பலர் பெரும்பெரும் மாலைகளை அணிவிக்க வந்தனர். ஆனால், தேவரோ, "முழு வெற்றிக்குப் பிறகே மகிழ்ச்சி கொள்ள வேண்டும். மாலைகள் எதுவும் அணிவிக்க வேண்டாம். எல்லாம் இறைவன் திருவருள்படி நடக்கும். எனவே மாலைகளை ஆண்டவனுக்கு அணியுங்கள். என் பொருட்டு இத்தனை ஆர்வத்தோடு கூடிய அனைவருக்கும் நன்றி. அமைதியாகக் கலைந்து செல்க" என்று கேட்டுக்கொண்டார்.

விடுதலை ஆனதும் தேவர் முக்கிய தலைவர்களுடன் புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவில், பிரஹதாம்பாள் கோயில், ஐயனார் கோவில் முதலிய ஆலயங்களில் வழிபட்ட பிறகு, அன்று இரவு 8 மணிக்கு ஆடுதுறைக்குப் புறப்பட்டார். அங்கு தேவரின் குடும்ப குருநாதரான ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள் சமாதியில் அஞ்சலி செலுத்தி வணங்கினார். ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள், தேவர் விடுதலை ஆவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை சிறைக்கு வந்து தேவரைப் பார்த்தார். அப்போது தேவர் சுவாமிகளைப் பார்த்து, "சுவாமி உங்களைப் போன்ற மகான்களின் பாதம் சிறையிலே படலாமா?" என்று கேட்டார். அதற்கு சுவாமிகள், "உங்களைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். நீங்கள் விடுதலை ஆவீர்கள். ஆனால், அப்போது நான் இருக்க மாட்டேன். அதனால் தான் இப்போது வந்தேன்" என்று கூறினார். பிறகு, சுவாமிகள் முன்னரே தான் குறிப்பிட்ட தேதியில் ஆடுதுறைக்கு அருகிலுள்ள காவிரி ஆற்றங்கரைக்கு மேற்கே ஓரிடத்தை தேர்வு செய்து, அந்த இடத்தை தன் பக்தரான செட்டியார் ஒருவரிடம் சொல்லி அதை வாங்க சொன்னார். பிறகு சொன்னது போலவே குறிப்பிட்ட தேதியில் அங்கே சுவாமிகள் ஜீவசமாதி ஆனார். அதனால்தான் விடுதலை ஆனதும் ஆடுதுறைக்குப் போய் சுவாமிகளின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார் தேவர்.

  

செல்லும் வழி:

தஞ்சை மாவட்டம் ஆடுதுறையிலிருந்து சூரியனார்கோவில் செல்லும் சாலையில் அரை மைல் தொலைவில் காவிரியாற்றின் மேம்பாலம் ஒன்றுள்ளது. அதற்கு முன்பாகவே இடபக்கமுள்ள அம்மன் கோவிலின் பின்புறமுள்ள தோப்பில் சைதன்ய விநாயகர் கோவில் உள்ளது. அந்த கோவிலிலுள்ள விநாயகர் சிலைக்கு கீழாகவே ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகளின் ஜீவசமாதி துடிப்புடன் இருந்து வருகின்றது.

*****************************************

இடம் ; ஆடுதுறையில் இருந்து 1கிமீ
ஆடுதுறை திருமங்கலகுடி (சூரியனார்கோவில்)
காவரி ஆற்றின் தென்கரையில் இவ்விடம் உள்ளது!

தேவர் மீது பற்றுள்ள அனைவரும், நேரமிருந்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.


***********************************


பசும்பொன் தேவர் பொய் வழக்கில் (இமானுவேல் கொலை) கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது அவரை நேரில் சந்தித்து 'இந்த வழக்கில் இருந்து நீ விரைவில் விடுதலையாவாய். அப்படி நீ விடுதலையாகி வரும்போது நான் இறைவன் திருவடி சேர்ந்திருப்பேன்' என கூறி தேவருக்கு ஆசி வழங்கிய சைதன்ய சித்தர் ஜீவசமாதி. தேவரைய்யா சிறையில் இருந்து வெளி வந்ததும் தேவர் இங்கு வந்து சென்றது குறிப்பிடதக்கது!
இடம் ; ஆடுதுரையில் இருந்து 1கிமீ
ஆடுதுரை-திருமங்கலகுடி(சூரியனார்கோவில்)
காவரி ஆற்றின் தென்கரையில் இவ்விடம் உள்ளது!

Friday 17 November 2017

மதுரை மாவட்ட சுதந்திரப் போராட்டம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் - சசிவர்ணத் தேவர் அவர்களைப் பற்றி - தியாகி ந.சோமயாஜுலு அவர்களின் மதுரை மாவட்ட சுதந்திரப் போராட்டம் என்ற நூலில் 1980.

தகவல் தந்தவர் MA.சர்தார் MA

எனது பிள்ளையவர்கள் எங்கே?

வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களைப் பற்றி தெய்வீகத் திருமகனார் ஸ்ரீ பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்கள்
கூறியது இன்று அப்படியே பழித்துள்ளது.
இதை எண்ணும் போது “ஸ்ரீ தேவர் திருமகனார் சத்தியமாக தெய்வமே என்று எண்ணத் தோன்றுகிறது.

பிள்ளை அவர்களைப் பற்றி தேவர்:

தேசியவாதியும் இன்றைய மகரிஷியுமான அரவிந்தகோஷ் அவர்களால் " எனது பிள்ளையவர்கள் எங்கே?" என்று காங்கிரஸ் பந்தலில் கேட்ட காலத்தில், பக்கத்திலிருந்த வட இந்திய முக்கிஸ்தர்கள் " யாரை தேடுகிறீர்கள்?" என்று வினவினார்கள்.அப்பொழுது அவர், "தென்னிந்தியாவின் சிறந்த தேசியவாதியாகிய வ.உ.சிதம்பரம் பிள்ளையைத் தெரியாதா?" என்று பதிலளித்தார்.அந்த தமிழன், அன்று கண்ட கப்பலோட்டும் தொழில் இன்று அவர் பந்து இனத்தை சேர்ந்த மற்றொருவரால் நடத்தப்பட்டு, சர்க்காரின் கவர்னர் - ஜெனரலால் ஒட்டுவிக்கப்பட்டிருக்கிறது. இது நினைவுகாலம்.
வருங்காலமோ சர்க்காராலேயே அக்கம்பெனி நடத்தப்பட்டு, கடற்கரையின் தீபஸ்தம்பத்தில் சிதம்பரம் பிள்ளையவர்களின் சிலை மின்சாரத் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டு, செய்கைக் காலமாக மாறும்!
அந்நாள் சமீபத்தில் நன்னாளாக வரும்!
வாழக சிதம்பரம் பிள்ளை நாமம்!
- பசும்பொன் தேவர்,
20.2.1949ல் 'கண்ணகி' இதழில் எழுதியது
இன்றைய நிலையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் என பெயரிடப்பட்டு பிள்ளையவர்கள் சிலையும் மின் தீபங்களால் ஓளிர்கிறது.தேவரின் தீர்க்கதரிசனம்!