Tuesday 21 November 2017

ராஜபாளையத்தில் தேவர்

அரசியல்வாதியாகவும் ஆன்மீகவாதியாகவும் தேசவிடுதலைப் போராட்ட வீரராகவும்மு பன்கமுகத்தன்மையுடன் விளங்கிய தலைவர் பசும்பொன் தேவர். அவர் ஆன்மீகவாதி என்பதால் குருபூஜை விழா நடத்தப்படுகிறது அரசு விழாவாகவும் நடத்தப்படுகிறது

வெள்ளையாரை எதிர்த்து காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக களம் இறங்கினார் ஆனாலும் விடுதலைக்கு முன்பே காங்கிரஸ்கட்சியோடு முரண்பட்டே நின்றார்
1938 ம் ஆண்டு இராஜபாளையத்தில் சென்னை ராஜதானியின் காங்கிரஸ் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது அதில் தேவர் கலந்து கொண்டார் அதில் கம்யூனிஸ்ட்கட்சியின் தலைவர்கள் என.ஜி.ரங்கா இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் ஏ.கே.கோபலன் பி.ராமமூர்த்தி ப.ஜீவானந்தம் பி.சீனிவாசராவ் ஆகியோரும் கலந்து கொண்டனர் (அந்த காலத்தில் கமயூனிஸ்ட்கள் சோசலிஷ்ட் காங்கிரஸ் என்ற பெயரில் காங்கிரஸ்கட்சிக்குள் இருந்து செயல்பட்டனர்)
அந்த மாநாட்டில் தேவரும் கம்யூனிஸ்ட் தலைவர்களும் விவாயிகளை அடிமைத்தளையிலருந்து மீட்க ஜமீன்தாரிமுறை ஒழிக்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்ற போராடினார்கள் ஆனால் காங்கிரஸ் தலைமை மறுத்துவிட்டது
இவர்கள் அனைவரும் மாநாட்டை புறக்கணித்து வெளியேறினார்கள் அவர்கள் பின்னால் ஆயிரக்கானக்கான விவசாயிகள் அணிவகுத்து வெளியேறினார்கள்
உடனே பசும்பொன்தேவர் தலையில் தனியாக விவசாயிகள் மாநாடு நடை பெற்றது ஒரேநாளில் இராஜபாளையத்தில் இரண்டுமாநாடுகள் மாநாட்டில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பேசினார்கள் இறுதியாக தமிழகத்தில்
ஜமீன்தாரி முறை ஒழிக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை தேவர் முன்மொழிந்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது இதுவே பின்னாட்களில் விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்திற்கு வித்திட்டது
சென்னை ராஜதானியின் பிரதமராக இருந்த இராஜபாளையத்தை சேர்ந்த பி.எஸ் குமாரசாமிராஜா இந்த பதவிக்கு வருவதற்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார் இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக  ராமநாதபுரம் ராஜா அனைத்து ஜமீன்தார்கள் செட்டிநாட்டுராஜா விருது நகர் பெரும் வணிகர்கள் களம் இறங்கினார்கள் காங்கிரஸ் தேவர் தலைமையில் பணியாற்றி குமாராசாமிராஜா வெற்றிபெற்றார்
அதன் பின்பு தேவர் காங்கிரஸிலருந்து விலகி நேத்தாஜியுடன் இணைந்து கொண்டார்
நாடு விடுதலைக்குப்பிறகு பார்வாட்பிளாக் கம்யூனிஸ்ட்கட்சி காங்கிரஸின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து போராடினார் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது
1952 முதல் பொதுத்தேர்தல் ராஜபாளையத்தில் அன்று சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்த பி.எஸ்.குமாரசாமிராஜா காங்கிரஸ் வேட்பளராக போட்டியிட்டார் தனிப்பட்டமுறையில் நாணயமானவர் விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுத்தவர்தான் இவர் தேவருக்கும் கம்யூனிஸ்ட்கட்சி தலைவர்களும் மிகவும் நெருக்கமானவர்தான்
ஆனாலும் அரசியல் கொள்கை என்ற அடிபபடையில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் கம்யூஸ்ட்கட்சியின் தலைவர்கள் ஜீவா பி.ராமமூர்த்தி தி.க சார்பில் பெரியார் மற்றும் தேவர் ஆகியோர் இங்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டி.கே.ராஜாவிற்கு ஆதராவக பிரச்சாரத்தில் இறங்கினார்கள் தேவர் அவர்களின் தீவிரமான பிரச்சாரம் முதலமைச்சரான பி.எஸ்.குமாரசாமிராஜா அவர்கள் வெற்றி பெற இயலாமல் போனதற்கு முக்கிய பாங்காற்றியது என்பது வரலாற்று உண்மை.

Ravi.Ra

No comments:

Post a Comment