Thursday 30 November 2017

பெரியார் vs தேவர்

பெரியார் கடைசிவரை... பதில் சொல்லாமல் 'பேந்த பேந்த'
முழித்த கேள்வி! - கேட்டவர் தேவர்!

( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)...

நட்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.
சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.
இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.
எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.
உதாரணாமாக உங்களுடைய சரீரத்தையே... நீங்கள் பார்த்துக் கொள்வீர்களானால்
சரீரத்தில் இருக்கின்ற கால்,கை முதலியவை எல்லாம் நீங்கள் பார்க்க முடியும், அதே நேரத்தில் கண்களை நீங்களே பார்க்க வேண்டும் என விரும்பினால் பார்க்க முடியுமா..?முடியாது !
அதற்காக ஒருவன் அவசரப்பட்டு ...
என் கையை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கை' உண்டு.
என் காலை பார்த்தேன் இதோ இருக்கிறது,
ஆகையால் எனக்கு 'கால்' உண்டு.
நான் என் கண்ணை பார்க்க நினைக்கிறேன் அது தெரியவில்லை, ஆகையால் எனக்கு கண்ணில்லை என்று பேசலாமா..? அது தவறு !
கண்ணாடியில் பார்த்தால் கண்களின் பிம்பம் தெரியும்...! அதைப்போல் விக்ரஹங்கள் கடவுளின் பிம்பமாக இருக்கிறது.
இதோ இங்கு ரோஜாப்பூ மாலை இருக்கிறது..
இது என்ன பூ எனக்கேட்டால்
அதன் பெயரை சொல்லலாம்..!
நிறத்தை கேட்டால் நிறத்தையும் சொல்லலாம்
இது எந்த இடத்தில் கிடைக்கும் என்வும் சொல்லிவிடலாம்..ஆனால்..
அதன் வாசம் எப்படியிருக்கும் எனக்கேட்டால் "முகர்ந்து" பார் என்றுதான் சொல்லமுடியும்!
கடவுள் எப்படியிருப்பார் என்று கேட்டால்..உணர்ந்துப்பார் என்றுதான் சொல்லமுடியும்...

2 comments:

  1. கடவுள் எப்படியிருப்பார் என்று கேட்டதுக்கான இது சரியான பதிலா ? இல்லை. இந்தக் கேள்வியை முத்துராமலிங்கத் தேவர் கேட்டாரா என்பது இன்னொரு கேள்வி.

    விக்ரஹங்கள் கடவுளின் பிம்பமாக இருக்கிறது என்றால், கடவுளின் உருவத்தை யாரும் பார்த்து வடித்தார்களா ?

    கடவுள் உருவத்தை ஒருவன் பார்த்திருந்தால் மற்ற யாருமே பார்க்க முடியாமல் போன விந்தை என்ன ?

    பூவின் வாசம் என்பது எப்படியிருக்கும். அது அத்தகைய வாசனையை தர உதவும் மூலக்கூறுகள் எவை. அதே போன்ற வாசனையை செயற்கையாக உருவாக்குவது எப்படி என்று ஆராய்ந்து விதம் விதமான சென்ட் வகைகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள் இன்று.

    ரோஜாவின் வாசம் இப்படித்தான் இருக்கும் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாசம் தான். ஆளுக்கு ஆள் மாறுபடுவதில்லை. ரோஜாப்பூ வாசம் கொண்ட வாசனைத் திரவியங்கள் செயற்கையாக செய்தாகிவிட்டது.

    ஆனால் கடவுளை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றால் எல்லோரும் ஒரே மாதிரியாக உணர முடியுமா ? முடியாது. ஒவ்வொருவருக்கும் கடவுள் உணர்வு வேறு வேறு மாதிரி புலப்படும். அப்படி புலப்பட்டால் அந்தப் பொருள் நிஜமாக இல்லை. மனத்தால் கற்பிக்கப்படும் ஒரு கற்பனை என்பதாலேயே ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.

    ஒரு பொருள் இருக்கிறது என்றால் அது கண்ணுக்கு தெரியாவிட்டாலும் அதை உணரத்தான் முடியும் என்றாலும் அதை உணரும் கருவிகள் மூலம் பார்க்கும் எல்லோருக்கும் அந்தப் பொருள் ஒரே மாதிரி தான் தென்படும்.

    உதாரணமாக, செல்போன் கதிர்கள் இருக்கிறது. அந்த மைக்ரோ வேவ் அலைகளின் மூலமாகத் தான் டவரிலிருந்து நமது போனுக்கு சிக்னல் வந்து நாம் பேசுகிறோம் என்பது உண்மை. அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் யாரும் பார்த்ததில்லை. உணர்ந்ததில்லை. அதற்கென தனியாக உள்ள கதிர் உணரும் கருவிகளின் மூலம் செல்போனிலிருந்து டவருக்கு போகும் கதிர்களை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். எல்லோருக்கும் அது ஒரே மாதிரி தான் தெரியும். இது அறிவியல் உண்மை.

    இந்த செல்போன் கதிர் போலத் தான் கடவுளும். கண்ணுக்கு தெரியவில்லை. புலனால் உணர முடியாது. ஆனால் மனத்தால் மட்டுமே உணர முடியும். மனம் செய்கிற கற்பனையால் மட்டுமே. எனவே தான் கடவுள் இல்லை என்கிறோம் நாம்.

    கடவுள் அப்படி இருந்திருந்தால் எல்லோர் மனதிலும் ஒரே மாதிரி தானே தெரிய வேண்டும் ? எனவே உணர்ந்து பார் என்பது பகுத்து ஆராயும் அறிவின் வழியான விளக்கமல்ல. இது மூடத்தனமான விளக்கம்.


    ReplyDelete
    Replies
    1. தாங்கள் டைனோசர் பார்த்தது உண்டா? தங்களுக்கு உண்மையான பகுத்தறிவு இருந்தால் இந்த கேள்விக்கு தேவர் சொன்ன பதிலுக்கு அர்த்தம் புரியும்

      Delete