Tuesday 2 May 2017

தேவா் அனைவா்க்கும் சொந்தம்தானே- வைரமுத்து

கவிப்பேரரசு வைரமுத்து அவா்கள் பசும்பொன் தேவா் பெருமகனாரைப் பற்றி எழுதிய கவிதை:

"மலையைப்போல் நிமிா்ந்த தோற்றம்
வானம்போல் விாிந்த நெற்றி
சிலையைப்போல் உயா்ந்த தேகம்
சிந்தனை தேக்கும் கண்கள்
உலையைப்போல் கொதிக்கும் நெஞ்சம் உளிபோன்ற சொற்கள் - எந்த
வலையிலும் வீழ்ந்திடாத வாலிபச் சிங்கம் தேவா்

மூவேந்தா்  வீர மெல்லாம்
மொத்தமாய்ச் சோ்ந்த உள்ளம்
நாவேந்தும் சொற்கள் எல்லாம்
நதிபோல விரைந்து செல்லும்
பாவேந்தா் உலக மெல்லாம்
பசும்பொன்னைப் பாடிச் செல்லும்
பூவேந்தி வாழ்த்துகின்றோம்
புகழ்மைந்தன் பாதம் தொட்டு

தான்பெற்ற ஞானமெல்லாம்
தம்மக்கள் வாழத் தந்தாா்
ஊன்பெற்ற சக்தியெல்லாம்
ஊா்மக்கள் வாழத் தந்தாா்
வான்பெற்ற மேகமெல்லாம்
மண்ணுக்கே பொழிதல் போல
தான்பெற்ற நிலங்கள் எல்லாம்
தமிழா்க்கே பகிா்ந்து தந்தாா்

எக்குலமும் எதிா்த்த போதும்
எமன்வந்து தடுத்த போதும்
சிக்கலில் இருந்த போதும்
சிறையிலே கிடந்த போதும்
வக்கிரப் பகைவா் வந்து
வாசலை மறித்த போதும்
முக்குலம் வாழ வைத்த
மூலவா் எங்கள் தேவா்

கைரேகைச் சட்டமென்று
கயவா்கள் இட்டு வைத்த
பொய்ரேகைச் சட்டம் தன்னைப்
புரட்சியால் உடைத் தெறிந்தாா்
கைரேகை மாற்றி எம்மைக்
கையெழுத்தாக்கி வைக்க
மெய்ரேகை யாக வந்த
மேதையே பசும்பொன் தேவா்

சாதிக்கப் பிறந்த எங்கள்
தங்கத்தை முக்குலத்தின்
சாதிக்கே உாிமை யாக்கித்
தனிமையே படுத்த வேண்டாம்
போதிக்கப் பிறந்து - ஊாின்
புத்தியைத் திறந்து - தீய
ஆதிக்கம் ஒழித்த தேவா்
அனைவா்க்கும் சொந்தம்தானே!"

No comments:

Post a Comment