Wednesday 3 May 2017

எம்எல்ஏ. டி.எஸ். ஆதிமூலம் சட்டசபை விவாத பேச்சு.

முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் தேர்தலுக்கு நின்றால் இரண்டு தொகுதியில் நிற்கிறார். சட்டசபைக்கும், பாராளுமன்றத்திற்கும் , அப்படி நிற்ப்பதோடு மட்டும் இல்லாமல் அங்கே சென்று பிரச்சாரம் செய்கிறார ? என்றால் அதுவும் இல்லை. அங்கு சென்று தனக்கு ஓட்டுப் போட வேண்டுமென்று அவர் கேட்பதில்லை. சட்டசபை ஆனாலும் சரி, பாராளுமன்றம் ஆனாலும் சரி இரண்டுக்கும் நிற்கிறார், முருகனை பற்றி பேசுகிறார், மதராசுக்குப் போய் கூட்டம் போடுகிறார், காங்கிரஸ் சீர்ந்திருத்தக் கட்சிக்கு வேண்டி பேசுகிறார், தன் நண்பர்களுக்கு வேண்டி எங்கெங்கெல்லாமோ போய்ப் பேசுகிறார். ஆனால் தனக்கு ஓட்டு போடவேண்டுமேன்று கேட்பதில்லை.ஆனால் எப்படியோ ஜெயித்து விடுகிறார்.
உலகத்தில் எவருக்கெல்லாத அற்புதமாக, தனது தொகுதிக்குள் நுழையாமல் ஒருவர் ஜெயித்தார் என்றால் அவர் முத்துராமலிங்கத்தேவர் ஒருவர் தான். பின்னர் பாருங்கள் ஒரு வேடிக்கையை ஹரிசனம் மக்கள் அவருக்கு ஓட்டு போடவில்லையா? அதை நாம் நன்கு யோசிக்க வேண்டும்.
ஆகவே தேவர் அவர்களை மடக்க வேண்டும். அவருக்கு தேர்தலில் செல்வாக்கு இருக்க கூடாது, ஆகவே அவரை ஒரு ரவுடி என்று பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றால், அதற்கு ஒரே ஆயுதம் தான் இருக்கிறது. அது இந்த தேசத்தில் உள்ள ஹரிசனங்களை தேவருக்கு எதிராக கிளப்பி விடுவதுதான். அப்படிப்பட்ட சதித் திட்டம் வகுத்து, அந்தத் திட்டத்தை காங்கிரஸ்க்காரர்கள் வெற்றிகரமாக நடத்தியும் விட்டார்கள்.
########$#$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$########

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்ப்பட்ட கலவர சூழ்நிலையையும், பசும்பொன் தேவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டதையும் கண்டித்து, தமிழக சட்டப்பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம்.கல்யாணசுந்தரம் அப்போதைய காங்கிரஸ் காமராஜ் ஆட்சி மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் பற்றி 1957 அக்டோபர் 28 அன்று விவாதத்தில் அப்போதைய எம்எல்ஏ. டி.எஸ். ஆதிமூலம் சட்டசபை விவாத பேச்சு.

No comments:

Post a Comment