Wednesday 3 May 2017

தியாகி திரு.மாயான்டி பாரதி தேவரை பற்றி

இன்று நம்மைவிட்டு மறைந்த சுதந்திர போராட்ட தியாகியும் கம்யூனிஸ்ட்காரருமான திரு.மாயான்டி பாரதி அவர்கள் எழுதியிருந்த விசயம் இது!

தமிழ்நாடு அரிசன சேவா சங்கத்தின் சார்பில் அதன் ஆண்டுக் கூட்டம் மதுரையில் மார்ச் 7ம் தேதி 1938-ல் நடந்தது. அதில் அரிசன ஆலய நுழைவு போராட்டதை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த நடவடிக்கை குழுவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் உறுப்பினராக இருந்தார்

மதுரை எட்வர்ட் ஹாலில் போராட்டதிற்கான கூட்டம் நடந்தது தேவர் அதில் கலந்துக்கொண்டு ஆலயபிரவேசம் சிறப்பாக நடக்கும் அதற்கு நான் உறுதுனையாகவும் பாதுகாப்பு அழிப்பதாகவும் உறுதியளித்தார்.

அதனடிப்படையில் தேவர் துண்டு அறிக்கை வெளியிட்டு ஆலய நுழைவு போராட்டம் ஏற்பாடானது

"மீனாட்சிக் கோவிலுக்குள் நுழைந்தால் என்ன நடக்கும் பார் என்று வைதீகச் சண்டியர்கள் நோட்டீஸ் வெளியிட்டாங்க. அதற்கு பசும்பொன்முத்துராமலிங்கத் தேவர், " நாங்களும் வருவோம். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்" என எதிர்சவால் விட்டார்."

ஆலயப் பிரவேசத்தன்றைக்கு வைத்தியநாதய்யர் தனது வீட்டிலிருந்து பூஜை சாமான்களுடன் தனது காரில் கக்கன் உள்ளிட்டோருடன் மீனாட்சி கோயில் தெற்கு வாசலுக்கு வந்தார். கோயில் வாசலில் தேவரின் ஆட்கள் குவிந்திருந்தாங்க. எதிர்பாளர்களைக் காணவில்லை.

முருகானந்தம், மதிச்சியம் சின்னையா, விராட்டிபத்து பூவலிங்கம், முத்து ஆகிய ஐவரும் தலித்துகள். ஆறாவது
நபர் விருதுநகர் சண்முகநாடார். 

தேவரின் உறுதுனையால் அன்று மீனாட்சியம்மன் கோவில் ஆலய பிரவேசம் அமைதியாக முடிந்தது.

"சாதிய வெறி கொண்டோர் அரசியலுக்கும் ஆன்மீகத்துக்கும் லாயக்கற்றவர்" என்பார் தேவர்.

இப்படிப்பட்டவரைதான் அவர் சார்ந்த சமூகம் அவர் மறைந்தபின்பு சாதியவாதியாக ஆக்கிவிட்டது.

இவ்வாறு உண்மைக்கு சாட்சியாக இருந்த தியாகி மாயாண்டிபாரதி தனது 98 வதில் நம்மை விட்டு பிரிந்துவிட்டார் :-(

No comments:

Post a Comment