Tuesday 2 May 2017

பசும்பொன் தேவர் அவர்கள் ஹரிஜன முன்னேற்றத்திற்காக ஆற்றிய பணிகள்

பசும்பொன் தேவர் அவர்கள் ஹரிஜன முன்னேற்றத்திற்காக ஆற்றிய பணிகள் பற்றி தெரிந்து கொள்ள
  10 - 3 - 1938 தினமணி நாளிதழ் வெளியிட்ட செய்தியை இணைத்துள்ளேன்.

10 - 3 - 1938 வியாழக்கிழமை

திருவாங்கூருக்கு தமிழ்நாடு ஹரிஜன கோஷ்டி

தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் ஆண்டுக் கூட்டம் நேற்று பிற்பகல் மேற்படி சங்கத் தலைவர் ஜாகையில் நடைபெற்றது. காரியதரிசியின்  ஆண்டு அறிக்கையும் கணக்கும் ஒப்புக் கொள்ளப்பட்ட பின் பல தீர்மானங்கள் நிறைவேறின. அவைகளுள் முக்கியமானவை .

ஏப்ரல் 3வது வாரத்தில் திருவாங்கூருக்கு ஹரிஜன யாத்ரிக கோஷ்டியை அழைத்துச் செல்ல வேண்டும். தமிழ்நாடு ஹரிஜன ஆலயப் பிரவேச மகாநாடு என்ற பெயருடன் மாகாண மகாநாடு ஒன்றை மே 2வது வாரத்தில் மதுரையில் கூட்ட வேண்டும்.

அதையடுத்து அதே போன்ற மகாநாடுகள் பிரதி ஜில்லா, தாலுகா தோறும் நடைபெற வேண்டும். மகாநாடு, ஹரிஜன கோஷ்டி ஆகியவை சம்பந்தமான ஏற்பாடுகளைக் கவனிக்க இன்னும் மேற்கொண்டு அங்கத்தினர்களைச் சேர்த்துக் கொள்ளும் அதிகாரத்துடன் ஸ்ரீமான்கள் ஏ.வைத்தியநாத அய்யர், என்.எம்.ஆர்.சுப்புராமன், பாலகிருஷ்ணன், குருசாமி, ஏ.வேதரத்தினம் பிள்ளை, அவினாசிலிங்கம் செட்டியார், எஸ்.சக்திவேல் கவுண்டர், யு.முத்துராமலிங்கத் தேவர், ஏ.ஆர்.ஏ.எஸ். துரைசாமி நாடார், குலசேகரதாஸ், சுவாமி சகஜானந்தம், எம்.ஸி.ராஜா ஆகியோர் அடங்கிய கமிட்டியை நியமிக்கிறது.

தேவர் ஹரிஜன விரோதியாக இருந்தால் இக்குழுவில் காங்கிரஸ் கட்சி தேவரை உறுப்பினராக நியமித்திருக்காது.

அரிசன மக்களை மற்றவர் களுக்கு சமமாக பாவிப்பதற்காக அரசே நடத்தும் சமபந்தி போஜனம் என்பது இன்று ஒரு சடங்காக நடைபெறுகிறது. ஆனால் தேவர் தன்னுடைய சொந்தச் செலவில் கமுதிக்கு அருகில் பேரையூரில் 1938 ஆம் ஆண்டு சமபந்தி போஜனத்தை வெற்றிகரமாக நடத்தினார்.

வரலாறு தெரியாமல் தேவர் மீது அவதூறு கிளப்புவது அரசியல் வக்கிரமேயன்றி உண்மையல்ல.  மீனாட்சி கோயில் நுழைவுப் போராட்டம், நாடார் வீடுகளில் சமமாக உண்பது போன்றவை இன்றைக்கு இயல்பானதாக  இருக்கலாம். 1930 களில் இவை ஒரு சமூகப் புரட்சியே.
தேவர் இதை நடைமுறைப் படுத்திக் காட்டினார்.

No comments:

Post a Comment