Wednesday 10 December 2014

எருமைகுளம் அனைத்து சமூக ஒற்றுமை ஆலயம்

அனைத்து சமுக ஒற்றுமை ஆலயம் 

பசும்பொன் தேவருக்கு கோவில் ஒன்று கட்டினாலும் குறை சொல்ல ஆளில்லை. திரு. வி.கண்ணதாசன்.  


கமுதி சாயல்குடி சாலையில் பெருநாழி விலக்கு ல் உள்ள கிராமம் எருமைகுளம் தான் எனது ஊர். அவ்வூரில் பெரும்பான்மையாகதேவரும் அதற்கு சற்று நிகராக நாயக்கரும் 25 பள்ளர் குடும்பமும் சில சக்கிலியர் இனகுடும்பமும் வாழும் ஊர். கடந்த 2005ம் ஆண்டு கிராம கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அனைத்து சமுதாயத்தின் சார்பாக கிராம நிதியில் இருந்து நமதுஊரில் தெய்வீகத்திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவர் திருக்கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டு வேலை ஆரம்பிக்கப்பட்டது. ஒருபக்கம் ஆலயம் வேலையும் மறுபக்கம் அதற்கான அனுமதி பெறவும் மும்மரமாக பணி நடந்தது.அனுமதி வேண்டி சக்கிலியர் இனத்தவரும், ஊராட்சிமன்ற தலைவருமான மாரி அவர்கள் மாவட்ட கலேக்டரிடம் ராமநாட்டில் மனு கொடுத்தார். கோவில் பாதி எழும்பிய நிலையில் காவல்துறையின் கதாநாயகன் அப்போதைய கமுதி DSPமதிப்புமிகு திரு.செந்தில்வேலவன் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டு காரணங்களை கூறாமல் 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர்.அந்த ஐந்து பேரில் மூவர் தேவர் ஒருவர் சக்கிலியர், நாயக்கர் ஒருவரும் அடங்குவர்.பின்பு கிராமத்தின் சார்பாக வழக்கு கவனிக்கவும் தனி கமிட்டி அமைக்கப்பட்டது.அப்போது ஆதரவு அளித்த அரசியல் தலைவர் வல்லரசு பிரிவு பார்வர்ட் பிளாக்தலைவரும், மாவட்ட கவுன்சிலருமான புலிக்கொடி வேந்தன் கமுதி S.ராஜபாண்டியன் அவர்கள் மட்டுமே. பின்பு கோவில்பணி கிடப்பில் போடப்பட்டது. பின் 2008 ம் ஆண்டு நான் என் நண்பர் ரஞ்சித்குமார்,வழிவிட்டான், முத்து மற்றும் வடிவேல் உதவியுடன் தேர்தல் புறக்கணிப்பு நோட்டிஸ் ஒட்டினோம். ஏனென்றால் அந்த சமயத்தில் புலிக்கொடி வேந்தர் கமுதிராஜபாண்டியன் விபத்தில் இறந்ததால் இடைத்தேர்தல் நடைபெற்றது.தேர்தல் விதிமுறை மீறிய குற்றம் சாட்டப்பட்டு கோவிலாங்குளம் காவல்நிலையத்தில் விசாரனையில் படிப்பாதால் அறிவுரை கூறி எங்களை அனுப்பிவைத்தார்கள் கண்ணியமிகு காவலர்கள். அதன்பின் 2011 ம் ஆண்டு அக்டோபர் 21ல் தடையை மீறி பாதியில் நின்ற ஆலயத்தில் தெய்வம் தேவரின் சிலைவைக்கப்பட்டது. தற்போது நீண்ட. இடைவேளைக்கு பின்பு இப்போதுதான்கோவில் வேளை முழுமையாக முடிக்க வேளை நடைபெறுகிறது.நமது தெய்வம் தேசியத்தின் வீரத்திருமகன் ஆலயம் சிலை வைக்க கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டு போராடவேண்டிய நிலை உள்ளது. இதில் எங்கள் கிராமத்தின் அனைத்துசமூக மக்களின் பங்களிப்பும் கிராம பெரியவர்களின் தியாகமும் பாராட்டகூடியது.நன்றி எனது கிராம பெரியோர்களுக்கு. 

 சிலை வைக்கப்பட்டபோதுஉள்ள போட்டோ மற்றும்

2008 ம்ஆண்டு பிப்ரவரி 14 ல் நான் அடித்து ஒட்டிய நோட்டிஸ் இது ( மாதிரி)இது நோட்டிஸ் செய்தியாக அன்று மலைமலர் செய்தித்தாளிலும் வந்ததுகுறிப்பிடதக்கது. 

No comments:

Post a Comment