Tuesday, 9 January 2018

தேவர் ஒரு தேசிய இடதுசாரித் தலைவர்

இராஜாஜியை பார்ப்பனத் தலைவர் என்பதோ, பெரியாரை நாயக்கர் தலைவர் என்பதோ, திரு.வி.க.வை முதலியார் தலைவர் என்பதோ எவ்விதம் பொருந்தாதோ, அதுபோல் தேவரவர்களை தேவர் சமூகத் தலைவர் என்பதும் பொருந்தாது. தேவர் ஒரு தேசிய இடதுசாரித் தலைவர். அப்போதைய இடது சாரித் தலைவர்களெல்லாம் தேவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர்.
ஏ.கே.கோபாலன், பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், சீனிவாசராவ் போன்றவர்களெல்லாம் தேவரின் சக நண்பர்கள்.தேவர் எதையும் வெளிப்படையாக பேசுவார். ஒளிவுமறைவு அவரிடம் இருக்காது. துணிச்சல் அவர் உடன்பிறந்தது என்று சொல்லலாம். கே.டி.கே.தங்கமணி
******************************************

தியாக செம்மல் கேடி.கே.தங்கமணிநாடார் அவர்கள் புகழ்பெற்ற இந்திய பெருந்தலைவர்கள் பலருடன் பழகியவர். பல பெருந்தலைவர்களின் கல்லூரித் தோழராக இருந்தவர். விடுதலைப் போராட்ட வீரர். பிளவுபடாத பொதுவுடமை இயக்கத்தின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக பணியாற்றியவர். சீன அதிபர் தோழர் மாசேதுங் உள்பட பல உலகப் பெருந்தலைவர்களிடம் எல்லாம் பழகியுள்ளவர். கோடிஸ்வர குடும்பத்தில்,  செல்வச் செழிப்போடு வாழ வேண்டிய இப்பெருந்தகை,  எளிமையின் மறு உருவமாக வாழ்ந்தார்.

No comments:

Post a Comment