தெய்வத்தை அவமதித்தால் பசும்பொன் தேவரின் கோபம் - ஆனந்தவிகடன்
அறுபத்து மூன்று நாயன்மார்களிலே எரிபத்த நாயனார் என்று ஒருவர் கரூரில் வாழ்ந்து வந்தார். சிவகாமி ஆண்டார் எனும் ஒரு பக்தர், பசுபதீஸ்வரர்க்கு அர்ச்சனை செய்த நறுமலர் கொய்து , அதை கைகோலின் நுனியில் கட்டி, தோளில் புஷ்ப பூக்கூடையை சுமந்து வரும் போது, புகழ் சோழனின் பட்டத்து யாணை அந்த பூக்கூடையை பறித்ததாம், மலர்களை காலால் மிதித்ததாம் . இதைக் கண்ட எரிபத்த நாயனார் ஆத்திரம் கொண்டார். இடையில் இருந்த மழுவை உருவினார். சிவ அபச்சாரம் செய்த அந்த யாணையின் துதிக்கையை தன் கையிலிருந்த மழுவால் ஒரே வெட்டு வெட்டி எறிந்தார். யாணைப் பாகனயும் கொன்றார். இது பெரிய புராணத்தில் ஒரு கதை.
தெய்வ நிந்தனை செய்பவர்களை கண்டவுடன் அக்காலத்தில் எரிபத்த நாயருக்கு வந்த கோபத்தையும், துடித்த துடிப்பையும் ஒருங்கே பெற்றவர் நம் காலத்தில் வாழ்ந்த தேசபக்தர் பசும்பொன் உ.முத்துமலிங்கத்தேவர். தெய்வ நிந்தனை செய்பவர்களைக் கண்டால் ஓட ஓட விரட்டுவார். அரசியல் வாழ்விலே ஆன்ம ஞானத்திற்கு முதலிடம் உண்டு என கருதி தேவர் அவர்கள் கடைசி வரை வாழ்ந்து வந்தார். தேவர் மறையும் வரை அவர் உடலில் திருநீர் அழிந்ததில்லை.
"ஐயா இறந்தாரோ, "தேவர் மறைந்தாரோ" என்று மதுரை முதல் இராமேஸ்வரம் வாழும் மக்கள் கதறி அழும் சோகக்குரல் , நாடெங்கும் கேக்கிறது. அவரோடு கருத்து வேறுபாடு கொண்ட அரசியல் தலைவர்கள் கூட அவரை போற்றுகிறார்கள். மாசு மறுவற்று விளங்கிய மறவர் குல மாணிக்கம் மறைந்ததிற்கு, விகடன் தன் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறான். - ஆனந்தவிகடன் 1963
No comments:
Post a Comment