தமிழ்ச் சங்கம், முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்று இருந்த காலமும் அகஸ்த்தியர், நக்கீரர் போன்ற துறவிகளும், முருகன் சிவபெருமான் போன்ற தெய்வங்களும் அச்சங்கங்களை ஆக்குவித்தார்கள், ஊக்குவித்தார்கள். அவைகள் இன்று சீர்கெட்டுச் சிதைந்து கிடக்கின்றன. இவைகளுக்கு ஆக்ககாலம் வருகிறது.
அதற்கு அறிகுறிகத்தான் சமீப காலத்தில் தோன்றிய மகான் ஜோதி ராமலிங்க சுவாமிகள்
"கருணை யில்லா ஆட்சி கடுகு ஒழிக
அருள் நிறைந்த சன்மார்கர் ஆழ்க
தெருள் நிறைந்த நல்லோர் நினைத்த நல்பெருக
எல்லோரும் இன்புற்று வாழ்க இசைந்து"
என்று சொல்லி மறைந்திருக்கிறார்கள். சீக்கிரம் "திருவருள் செங்கோலாட்சி நடைபெரும்" என்று அருளியிருக்கிறார்கள். அந்த காலம், தமிழ்த் தன்மை பெற்று, வன்மை பெற்று, வளமுற்று இந்தியாவை ஆளும்காலம்.- பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்.
1949 பிப்ரவரி 13ல் மதுரை சௌராஷ்ரா பெண்கள் பள்ளியில் தேவர் பேசியது.
No comments:
Post a Comment