1952- சட்டப்பேரவை கூட்டத்தில் தேவர் பேசியது.
தனி நபர் சத்தியாகிரகம் என்பது என்ன?
மக்களை தாங்கள்
ஏதோ சுதந்திரத்திற்கு பாடுபட்டு கொண்டே இருப்பதுப்போல்
ஏமாற்றுவதற்காக நடத்த்ப்பட்ட அரசியல் நாடகமே தவிர
வேறு ஓன்றுமில்லை. மதில் மேல் பூனைப்போல் அந்த பக்கமும்
இன்றி இந்த பக்கமும் இன்றி அதாவது வெள்ளையனையும்
தாக்கி பேசாமல் அரசியல் கபட நாடகம் நடித்தார்கள்.
ஒருவன் சத்தியாக்கிரகம் செய்யப் போகிறான் என்றால்.. அதை அவன்
முன்பே போலீஸ்க்கு சொல்லுவான்.
அதன்பிறகு உறவினன் ஒருவன் மாலையை வைத்துக்கொண்டு
நிற்பான்.பக்கத்தில் போலீஸ்காரன்
வாரண்டை வைத்துக்கொண்டுயிருப்பான்.
சத்தியாக்கிரகம் செய்யபவன்
எழுதி வைத்துக்கொண்டிருப்பதை படித்தவுடன்.. போலீஸ்க்காரன் "
நீங்கள் பேசியது தப்பு ! உங்கள் பேரில் வாரண்ட்
கொண்டு வந்திருக்கிறேன்.. என்னுடன் வாருங்கள் என்பான்,
உடனே அவனுடைய உறவினன் " போய் வாருங்கள் "
என்று மாலையைப் போடுவான்,
இவனோ போலீஸ் லாரியில் ஏறி உட்கார்ந்து கொள்வான்.
இப்படியாக கேலிக்கூத்தான கேலிக்கூத்து நாடகமாய் போனதே இந்த
சத்தியாகிரம்.- பசும்பொன் தேவர்
No comments:
Post a Comment