Monday 29 January 2018

கொண்டையன்கோட்டை மறவர் கிளை

தமிழ் மறவர் பேரினம் மொத்தம் 38 பிரிவுகளைக் கொண்டது.. அதில் கொண்டையன்கோட்டை மறவரில் 18 கிளைகள் உண்டு.. மூன்று கிளைகளுக்கு ஒரு கொத்து வீதம் மொத்தம் 6 கொத்துக்களை கொண்டது..

#கொண்டையங்கோட்டை_மறவர்களின்_கிளையும்_கொத்தும்..

மிளகு கொத்து
   1.வீரமுடி தாங்கினர்(வீரன்) கிளை (அன்னை மீனாட்சி தேவி கிளை)
   2.சேதார் கிளை..
   3.சேமந்தா ( ஜெயங்கொண்டார்) கிளை

வெற்றிலை கொத்து
  1.அகஸ்தியர் (அகத்திய) கிளை
  2.மருதசா (மறுவீடு) கிளை
  3.அழகிய பாண்டியன் (அரவணன்ட) கிளை ( தெய்வீகத் திருமகனார் கிளை)

தென்னங்கொத்து
  1.வாணியன் ( வீணையன், வீனியன்) கிளை
  2.வேட்டுவர் கிளை (வெட்டுமங் கிளை)
  3.நடைவேந்தர் கிளை ( நாட்டை வென்றான் கிளை)

கமுகம் கொத்து
  1.கேல்நம்பி கிளை
  2.அன்புத்ரன் கிளை
  3.கௌதமன் கிளை

ஈச்சங்கொத்து
  1.சடச்சி கிளை
  2.சங்கரன் கிளை
  3.பிச்சிபிள்ளை கிளை

பனங்கொத்து
1.அகிலி கிளை
2.லோகமூர்த்தி கிளை
3.ஜாம்புவர் ( ஜாம்பவான்) கிளை..

காலம் மாற மாற பல்வேறு கிளைகளை புகுத்தியும் மேலும் அவனவன் மாற்றியும் திரித்தும் விட்டார்கள்..

இது தான் பண்டைய கால பாண்டியர்களான அசல் கொண்டையன்கோட்டை மறவர்களின் கிளைகளும் கொத்தும் ஆகும்..

இதை தவிர்த்து அரசமங்கிளை(அரசன் கிளை), கொடியன் கிளை (கொடையன் கிளை), சுக்காங்கிளை, நாட்டுக்கெச்ச கிளை இது போன்ற கிளைகள் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் உருவானவை ஆகும்..

கொடையன் கிளையே மருவி கொடியன் கிளை ஆனது.. அரசன் கிளையே மருவி அரசமங்கிளை ஆனது.. இரண்டும் ஏலக்கொத்து ஆகும். சகோதர உறவு ஆகும்..

5 comments:

  1. கிளைகளின் உருவாக்க வரலாறு ஏதுமிருக்கிறதா?

    ReplyDelete
    Replies
    1. ஐயா கண்டிப்பா உங்ககிட்ட சொல்லியே ஆகணுமா

      Delete
  2. சுக்காங்கிளை(சங்கரன் கிளை), நாட்டுக்கெச்ச கிளை (நாட்டு வென்றான் கிளை அ நாட்டை வென்றான் கிளை.

    ReplyDelete
  3. போர்படை குழுக்களின் குணத்திற்க்கும் பழக்கவழக்கத்திற்கும் ஏற்றவாரே கிளைகளிண் பெயர்கள் அமைந்திருக்கவேண்டும்.

    ReplyDelete