முதுகுளத்தூரில் நடைபெற்று வரும் ஜாதி போராட்டம் தமிழ்நாட்டிற்கு மிக ஆபத்து விளைவிக்கக் கூடியது.
காங்கிரஸ் தேர்தலில் பலமுறை அங்கு தோல்வி அடைந்து இருப்பதால், அங்கு ஜாதியக் கலவரங்களைத் தூண்டிவிட்டு, அவர்களை ஹிம்சிக்க வேண்டுமென்று காங்கிரஸ் நீண்ட காலமாக சதித்திட்டம் தீட்டிவந்தது. அதற்காகத்தான் போலிஸ் இன்ஸ்பெக்டர் "ரே' அங்கே கொண்டு போய் வைக்கப்பட்டார். அவர்தான் இந்தக் கலவரத்தைத் தூண்டி விட்டதற்கு பிரதான காரணமாகும்.
இந்த ரே ஐந்து பேர்களைக் காட்டில் கொண்டுபோய் சுட்டுக் கொன்றது தான் இவ்வளவு கலவரங்களுக்கும் காரணம். அவனுக்கு இது புதிதல்ல. அவன் மலையாளத்தில் (கேரளா) ஜெயில் கைதிகள் இரண்டுபேரைக் கொண்டுபோய் நடுக்காட்டில் சுட்டுக் கொன்றான் என்று கோர்ட்டில் கேஸ் நடந்திருக்கிறது என்பதைக் காமராஜரால் மறுக்க முடியாது.
அதேபோல்தான் பணிக்கர் என்பவரை இராமநாதபுரம் ஜில்லாவில் கலேக்டராக போட்டதும் மர்மமாகும். முதுகுளத்தூர் சம்பவங்கள் முன்கூட்டியே தீட்டப்பட்ட திட்டமாகும். இவ்வளவு சம்பவம் நடந்த பிறகும் கூட, அதிகாரப் பற்றற்ற நீதிபதியை நியமிக்காமல், ரெவின்யூ போர்டு மெம்பர் வெங்கடேஸ்வரனை நீதிபதியாக நியமனம் செய்தது விந்தையாக இருக்கிறது. இது கண்துடைப்புக்காகப் போடப்பட்ட வேலையாகும்.
காமராஜர் ஆட்சி இந்தச் சம்பவங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை. -
கம்யூனிஸ்ட் கட்சி நாளிதழ் ஜனசக்தி 27.09.1957
கம்யூனிஸ்ட் தலைவர் அனந்த நம்பியார் 21.9.1957 தஞ்சை திலகர் திடலில் நடந்த தஞ்சை மக்கள் சபை உபதேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசியது.
No comments:
Post a Comment