Monday, 29 January 2018

பகதூர் வெள்ளையத்தேவன் புகழ்

#பகதூர்_வெள்ளையத்தேவன்_பற்றி_தெய்வீகத்_திருமகனார்_கூறியது..

ஆங்கிலேயரான கவர்னர் கட்டபொம்மனையும், வெள்ளையத் தேவனையும் அழைத்துக் கொண்டு ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு வருகிறார்.

அங்கே மிக உயரமான பஞ்சாப் குதிரைகள் ஐந்து நிற்கிறது. குதிரைகள் ஐந்துக்கும் கடிவாளம் கட்டவில்லை. அப்போது கவர்னர் கட்டபொம்மனைப் பார்த்து கட்டபொம்மன் அவர்களே உங்களைப் பெரிய வீரர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். கடிவாளம் இல்லாத இந்தக் குதிரை மீதேரி நீங்கள் சவாரி செய்ய வேண்டும் என்று கூறினார்.

கட்டபொம்மன் மிகவும் அலட்சியமாக இந்தச் சிறு வேலையை நான் செய்ய வேண்டியதில்லை. என்னுடைய தளபதி வெள்ளையத்தேவன் செய்வார் அவரால் முடியாவிட்டால் அப்புறம் நான் செய்கிறேன் என்கிறார்.

முன்னங்கால் இரண்டையும் உயரத் தூக்கி வெள்ளையத் தேவனைத் தாக்க வரும் குதிரையின் நீளமான பிடரி மயிரைப் பிடித்து தாவி ஏறி உட்கார்ந்து சிறிது தூரம் சென்றதும் தனது காலால் வர்ம அடி அடிக்கவும் குதிரை சடாரென கீழே விழுந்து புஸ் என நுரை தள்ளித் துடிக்கிறது. அதுபோல நான்கு குதிரைகளையும் வெள்ளையத் தேவன் வர்ம அடியால் வீழ்த்தி நுரை தள்ளித் துடிக்க வைக்கிறார்.

தளபதியே இவ்வளவு வீரனாக இருத்தால் ராஜா இதைவிடப் பெரிய வீரனாகத்தான் இருப்பார் என்று கவர்னர் கருதி ஐந்தாவது குதிரையை வெள்ளையத் தேவனுக்குப் பரிசாகக் கொடுத்து பகதூர் வெள்ளையத் தேவன் பட்டத்தையும் கொடுத்தார். அன்று முதல் வெள்ளையத் தேவன் பகதூர் வெள்ளையத்தேவனாக மாறினார்.

#வாழ்க_பகதூர்_வெள்ளையத்தேவன்_புகழ்..

1 comment: