Friday, 19 January 2018

ஒன்றுபட்ட இந்தியா

பாகிஸ்தான் பிரிவினையை ஏற்காத ஒரு இயக்கம் அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் இயக்கம். பாகிஸ்தான் பிரிவினையை தலைவர் பசும்பொன் தேவர் அவர்கள் கடுமையாக எதிர்த்தார்.பாகிஸ்தானை கேட்டவனும் முட்டாள், அதனை கொடுத்தவனும் முட்டாள் என்றார் தலைவர் தேவர் அவர்கள். மாணவர் அணி ,இளைஞர் அணி போன்ற துணைநிலை அமைப்புகளை போன்று ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தின் துணைநிலை அமைப்புகளில் ஒன்று BANGALDESH BHARAT PAKISTAN PEOPLES FORUM என்ற அமைப்பாகும்.இந்த அமைப்பின் நோக்கம் பங்களாதேஷ்,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள நேதாஜி தொண்டர்களை ஒன்றிணைப்பதும்,இந்த நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு இணக்க போக்கை ஏற்படுத்துவதும் ஆகும்.அதனை முன்னிறுத்தி இந்த அமைப்பு செயல்பட்டு கொண்டிருக்கிறது.இந்த அமைப்பின் தேசிய செயலாளர் பங்களாதேஷ் நாட்டின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்பட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தை சேர்ந்தவர்.ஜெய்ஹிந்த்!!!

No comments:

Post a Comment