Friday 26 January 2018

இரண்டு சுதந்திர தினம் ஏன்?

இந்தியாவுக்கு எதற்கு இரண்டு சுதந்திர தினம்? - பசும்பொன் தேவர்

விடுதலை பெற்றது ஒரு நாள், குடியரசு அமைத்தது ஒரு நாள் என்று இரண்டு தினத்தை கொண்டாடுவது உலகிலேயே நாம்தான். விடுதலை கிடைத்து இரண்டரை ஆண்டுகள் கழித்து அரசியல் சட்டமைப்பை உருவாக்கும் அளவுக்கு நம் தியாகிகள் சோம்பேறிகள். அந்த இரண்டு வருடத்திற்குள் 3 ஊழல்க‌ள் செய்திருக்கிறது நேரு தலைமையிலான காங்கிரஸ்.

1930ம் ஆண்டு, ஜனவரி 26ஆம் தேதி மக்கள் அனைவரும் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என காந்தியடிகள் வேண்டுகோள் விடுத்தார். அந்த நாளைதான் குடியரசு தினமாக கொண்டாடுகிறார்கள். ஆனால் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23ஆம் நாளை இதே தியாகிகள் அனுசரிக்க‌ மறுக்கிறார்கள். இந்த சூது நிறைந்த தினத்தை பார்வர்ட் பிளாக் கட்சி ஒருபோதும் கொண்டாடாது.

1949ல், தேவர் நடத்திய நேதாஜி என்ற பத்திரிக்கையில் எழுதிய கட்டுரை.

No comments:

Post a Comment