1968ம் ஆண்டே கோரிப்பாளையம் சிலை வைக்க முயற்சி ஆரம்பித்திருந்தாலும் சிலை திறக்கப்பட்ட நாள் 05-01-1974 அன்று தான். அந்த இடத்தில் தேவருக்கு பதிலாக அண்ணாத்துரைமுதலியார் சிலை வைக்க முயன்ற வரலாறும் உண்டு.
பார்த்தீர்களா! அப்போது பல MLAக்களை கொண்ட கட்சியாக பார்வர்ட் பிளாக் இருந்தும், அவ்வளவு அரசியல் பலம் இருந்தும் ஏதோ ஒரு காரணத்தால் கோரிப்பாளையத்தில் தேவர் சிலை வைக்க 6வருடம் தாமதமாகி உள்ளது. அதே நிலை தான் இன்றும். ஆனால் இன்று மூக்கையாத்தேவர் போன்ற தலைவர் நமக்கு இல்லாத காரணத்தால் 10 வருடமாக பட்டா இடத்தில் சிலை வைக்க அனுமதி கிடைக்காமல் கிராம மக்கள் போராடும் நிலை. சட்டத்தை மீறி வைக்க தூண்டுவது இங்கு ஆட்சியாளர்கள் தான். மக்கள் தேவர் மீது கொண்ட பக்திக்கு முன் சட்ட மீறலும், அதனால் வரும் வழக்கு சிறையையும் பொருப்படுத்துவதில்லை.
R.சோடனேந்தல் கிராமத்தின் நிலைமட்டுமல்ல இது. 7 வருடங்களுக்கு முன் இதே கமுதி பகுதியில் எருமகுளம் எனும் கிராமத்தில் தேவர் சிலை வைக்க முயன்ற வழக்கில் அந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் முதல்கொண்டு பலர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் 7 வருடங்கள் கிடப்பில் போடப்பட்டு இரவோடு இரவாகத்தான் தேவர் சிலை வைக்க முடிந்தது. சட்டப்படி அனுமதிக்காக காத்திருந்தால் இன்று அந்த ஆலயம் பாழடைந்த கட்டிடமாகி போயிருக்கும்.
தேவர் குருபூஜைக்கு கூட மக்கள் கூடாதவாறு 144 தடை போட்டு தடுக்கும் அரசாங்கத்திடம், மத்திய அரசு மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் வைக்க தயாராக இருந்தும், தொடர்ந்து மறுத்து வரும் தமிழக அரசிடம் தேவர் ஆலயம் அமைக்க மக்கள் அனுமதி கேட்பது என்பது திருட்டு, கொலை, கொள்ளைக்காரனிடம் கருணையை எதிர்பார்ப்பது போலாகும்.
குறிப்பு: தற்போது இராமநாதபுரத்தில் திருமண நிகழ்வில் கூட தேவர் பிளக்ஸ் படம் பயன்படுத்த தடை உள்ளது. வீட்டு வாசல்ல கூட வைக்க முடியாது.
படம்: எருமகுளம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகம், நாயக்கர் சமூகம் உள்பட அனைத்து சமூக மக்களும் ஒன்றாக இணைந்து கட்டிய ஆலயம். 7வருடங்களாக அனுமதி கேட்டு போராடியதில் சிறைத் தண்டனை கிடைத்தது தான் பாக்கி என வெறுத்து, இரவோடு இரவாக 21-10-2012 அன்று வைக்கப்பட்ட காலத்தில் ஆலயம் இருந்த நிலையும் , தற்போதைய தேவர் ஆலய நிலையும்.
No comments:
Post a Comment