Thursday 20 July 2017

தேவரைய்யா தான் நம்மை கௌரவமாக வாழ வைப்பவர்-திரு.சோலை குடும்பன்

சாதியவாத தலித்களுக்கு திரு.சோலை குடும்பன் பேசியதை 
அப்படியே தருகிறோம்...

"எங்கள் சிட்டவண்ணாங்குளம் கிராமத்தில் 200 ஏக்கர் நிலத்தை 
60 பள்ளரின குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்தார் பசும்பொன் தேவர்.

இன்றுவரை வயிறார உணவழித்து வருபவர் எங்கள் எஜமான் பசும்பொன் தேவர் அவரது ஜெயந்தி விழாவை எங்கள் வீடுகள் தோறும் பொங்கல்வைத்து எங்கள் ஊரிலுள்ள தேவர்சிலை முன்பாக படையலிட்டு வீட்டுக்கொரு மாலையை பெரிதாக கட்டி தேவரய்யாவிற்கு செலுத்துவோம்...

நீங்கள் முடிந்தால் வருகிற 30ம் தேதி பள்ளர்களான நாங்கள் கொண்டாடும் தேவர் ஜெயந்தி விழாவிற்கு வாருங்கள். சென்னை வீரத்தந்தை நேதாஜி பவுண்டேசன் தேவர் ஜெயந்தி விழாவில் இவ்வாறு எங்கள் பெரியவர் சோலை குடும்பன் கூறினார்
**************************-***************
#பசும்பொன்_சித்தர்
குளத்தில் குளிக்க சென்றால் 50பேருக்கும் மேல் கரையில் நிற்பார்களாம் ஏன் அய்யாவுக்கு பாதுகாப்பாவான்னு கேட்டேன் அவருக்கு பாதுகாப்பா??? அவர் தானப்பா எங்க ஜில்லாவுக்கே பாதுகாப்பு அவர் ஒரு இடத்தில் மூழ்கினால் அரைமணி நேரம் கழித்து கரையின் அடுத்த முனையில் எழுந்திரிப்பாராம் அந்த அழகை வேடிக்கை பார்க்க வருவார்களாம்

தகவல்.திரு #சோலைக்குடும்பன் சிட்டவண்ணான்குளம்.
       ★★★★★★★★★★★★★★★★★

சில நாட்களுக்கு முன் அருப்புக்கோட்டையில் பி.காம் படிக்கும் ஒரு உறவுக்கார இளைஞன் எங்கள் வீட்டுக்கு வந்தான்.எங்களோடு பேசிக்கொண்டிருந்தவன் திடீரென என்ன இது பசும்பொன் தேவர் படத்தை நம் வீட்டில் வைத்துள்ளீர்கள் அவர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக செயல்பட்டவர்,பிரம்மாண்டமான தேவர் சிலையும் ஊரில் இருக்கிறது,இது பள்ளர் கிராமம் தானே? எனக்கேட்டான்.தேவருக்கும் எங்களுக்குமான உறவுகளையும்,இந்த கிராமத்திற்குமான சம்பவங்களையும் விபரமாக சொன்னேன்.அதைக்கேட்ட அவன் போகும்போது தேவர் சிலையை மனதார இரு கை கூப்பி வணங்கிசென்றான்.தேவரை தெய்வமாக வணங்குகிறோம்.அதனால் அவர் போட்டாவை நம் வீட்டில் வைத்துள்ளோம்.தேவர் எழுதிக் கொடுத்த சொத்தில் தான் இந்த ஊரே பிழைத்துக்கொண்டிருக்கிறது.தேவரும்,தேவருடைய சொத்தும் தான் இன்று நம்மை கௌரவமாக வாழவைத்துக் கொண்டிருக்கிறது.அவர் நினைத்திருந்தால் அவருடைய சொத்துக்களை அவருக்கு விருப்பப்பட்டவர்களுக்கு எழுதிக் கொடுத்திருக்கலாம்.எங்கள் ஊர் பிள்ளைகளுக்கு தேவரைப் பற்றி மிக தெளிவாக சொல்லிக்கொடுத்துள்ளோம்.தேவர் இறந்த பிறகு எங்களுக்கு அவர் உறவினர்களால் சில பிரச்சனைகள் வந்தது.தேவரின் சொத்தை நாங்கள் எல்லோரும் அவர்களுக்கு திருப்பி கொடுத்துவிட வேண்டுமென சொன்னார்கள்.தேவர் எங்களுக்கு கொடுத்ததை நாங்கள் யாருக்கும் தரமாட்டோம் என உறுதியாக இருந்தோம்.அதன்பின் நீதிமன்றம் சென்று வழக்கும் தொடர்ந்து தேவரின் ஆசியோடு 1989 ல் எங்களுக்கு சாதகமாய் முடிந்தது.முதல் வேலையாக கிராமத்திலுள்ள அனைவரும் சேர்ந்து அந்த வருட விவசாயத்தில் வந்த வருமானத்தை வைத்து தேவருக்கு 1991 ல் சிலை வைத்தோம்.அதன்பின் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.வருடாவருடம் விவசாயம் லாபத்தை தரும்.தேவருக்கு நான் இறப்பதற்குள் இந்த கிராமத்தில் வெண்கலசிலை வைக்கவேண்டும் என்பது ஆசை.அவர் சொத்தில் வரும் வருமானத்தில் தான் அவருக்கு சிலை வைக்கிறோம்,இதற்காக யாரிடமும் நாங்கள் பணம் கேட்கமாட்டோம்-சோலைக் குடும்பன் அவர்கள்.

இந்த தகவலை நேரடியாக ஐயா சோலைகுடும்பன் அவர்களிடம் கேட்டபவர்கள்
முத்தையா செந்தூர்
தூத்துக்குடி விக்னேஷ்
*****************************************

பொதிகை தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் ஐயா. சோலை குடும்பன் பேசிய வீடியோ காண்க
https://youtu.be/jZv2_HNGsow

No comments:

Post a Comment