Tuesday 18 July 2017

வடலூர் வள்ளலார் -பசும்பொன் தேவர்

வடலூர் வள்ளலார் -பசும்பொன் தேவர்
இருவரின் வாழ்க்கை முறைகளை இன்றைய தமிழராகிய நாம் தெரிந்திருக்க வேண்டுமென இந்த சிறிய பதிவு.

அக்டோபர் மாதம் இருவரும் பிறந்துள்ளனர்.
வள்ளலார் பெயர் இராமலிங்கம் ,தேவர் பெயர் முத்துராமலிங்கம்.
தேவருடைய தாய் ஆறு மாதக் குழந்தையாக விட்டு பிரிந்தார் ,வள்ளலாருடைய தந்தை ஏழ மாதக் குழந்தையாய் விட்டு பிரிந்தார்.
சிறு வயதில் வள்ளலார் திருவெற்றியூருக்கு நடந்து தினமும் தெய்வத்தை வணங்குவது வழக்கம் அந்த வழியில் நிர்வாணச் சாமியார் வழியில் செல்பவர்களை நாய் போகிறது ,கழதை போகிறது ,பன்றி போகிறது என்று சொல்வார் .
ஒருமுறை வள்ளலாரை கண்ட அந்த சாமியார் மனிதன் வருகிறான் என்றார் .
வள்ளலார் அவரிடம் என்னை உணர்ந்து மற்றவர்களை சொல்வது போல சொல்லாமல் மனிதர் என்ற நீங்கள் மாதர்கள் நடமாடும் வீதியில் நிர்வாணமாக இருப்பது அழகல்ல என்றார் அந்த நிமிடத்தில் இருந்து சாமியார் அந்த இடத்தை விட்டு அகன்றார்.
அதை மாதிரி சிறு வயதில் தேவர் திருப்பரங்குன்றத்திற்கு நடந்து சென்ற போது சாலையின் ஓரமாக மக்களிடையே மதச் பிரசங்கி ஒருவர் ஒரு கல்லில் ஏறி நின்று நான் நிற்பதும் கல்தான் நீங்கள் வணங்குவதும் கல்தான் அங்கே குவிந்து கிடப்பதும் கல்தான் என பிரச்சாரம் செய்தார் .
இதை பார்த்த தேவர் ஐயா உங்களுக்கு தாய் உண்டா என்றார் ஆமாம் என்றார் உங்களுக்கு தாரம் உண்டா என்றார் ஆமாம் என்றார் தங்கையும் உண்டு என்றார் உடனே பசும்பொன் தேவர் உங்கள் தாரத்திடம் இருப்பது போல தாயிடமும்,தங்கையிடமும் இருக்க முடியுமா என்றார் .
வாயடைத்த அந்த மத பிரசங்கி அந்த இடத்தை விட்டு அகன்றார்.
வள்ளலார் அண்ணன் தினமும் ஒரு செட்டியார் வீட்டில் பெரிய புராணம் பற்றி சொற்பொழிவு நடத்துவது வழக்கம் ,வள்ளலாரும் கூட போவார்.
ஒருமுறை அண்ணனுக்கு உடல்நிலை சரியில்லாததால் வள்ளலாரை அனுப்பி சில பாடல்களை பாடிவரும்படி சொன்னார் .
யாரும் எதிர்பாரா வகையில் இரண்டு மணி நேரம் பெரிய புராணத்தில் புதைந்துள்ள கருத்துக்களை முழங்கினார்.
இதுதான் வள்ளலாரின் முதல் மேடை முழக்கம் .
இதுபோல சாயல்குடி என்ற ஊரில் செட்டியார் ஒருவர் சுவாமி விவேகானந்தர் பெயரில் ஓர் வாசகசாலை நடத்தினார் .முதலாம் ஆண்டு விழாவில் விவேகானந்தர் படத்தைத் திறந்து வைத்துப் பேச மதுரை கிருஷ்ணசாமி பாரதியை அழைத்து இருந்தார் .
விழாவிற்கு அவரால் வரமுடியாததால் பசும்பொன் தேவரை அழைத்து விவேகானந்தர் படத்தை திறந்து மூன்று மணி நேரம் விவேகானந்தரை பற்றி விளக்கி முழங்கினார் .
இதுதான் தேவரின் முதல் மேடை பேச்சு.
சங்கராச்சாரியர் ஒருமுறை வள்ளலாரிடம் இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி சமஸ்கிருதம் என்கிறார் .
வள்ளலார் உடனே அப்படியானால் தமிழ் தந்தை மொழி என்கிறார் .
தமிழ் என்பது த-அம்-இ-ழ் என்னும் ஐந்து அழகு நிலை உடையது என்று வாதிட்டு தமிழின் சிறப்பை வள்ளலார் நிலை நாட்டினார்.
அதை மாதிரி திருக்குறள் பற்றி பள்ளியில் மேடையில் பேசும்போது தேவர் எழுத்துகளை வகைப்படுத்தி,எப்படி எல்லாம் பிரிந்தது மொழி வாரியாக எடுத்துக்காட்டாக பேசிவிட்டு
எல்லா வகையான மாறுதல்களையும் பெற்ற ஆதிமொழி தமிழ் என நிலை நாட்டினார் தேவர்.
வள்ளலார் வெள்ளை நிற துணியால் காலிலிருந்து மேனி முழுதாக மறைத்து தலை முடி,மீசை நீக்கி ஓர் ஒழுங்கான வாழ்க்கை வாழ்ந்தவர்.
தேவரும் வசதிகள் இருந்தும் தன் நாட்டின் மீது பற்றால் இருதிவரை வெள்ளை நிற ஆடையில் ஒழக்கமான வாழ்க்கை வாழ்ந்தவர்.
முருகன் மீது பற்று கொண்ட அந்த வள்ளலார் பெருமகன் வாழ்க்கையின் தாக்கம் தான் பசும்பொன் தேவரை நடையிலும்,உடையிலும் ,தோற்றத்திலும் உணவுப் பழக்கத்திலும் ஓர் புதிய அணுகுமுறையை ஏற்படுத்தியது.
தேவர் திருமகன் மீசையை எடுத்ததும்,மாமிச உணவை தவிர்த்ததும் வள்ளலார் வழியில் பசும்பொன் தேவர் கவனம் பதித்த பின்தான் .
வள்ளலார் புகழை சகித்துக் கொள்ள முடியாத சிலர் அவர் எழதிய அருட்பாவை விமர்சித்து வழக்கும் கொடுத்தார்கள்.
விசாரணை அன்று வள்ளலார் நீதிமன்றத்திற்குள் நுழைந்த வள்ளலாரை அனைவரும் எழந்து நின்று வணங்கினர் .
அதில் வழக்கு தொடுத்தவரும் ஒருவர் .
அதை நிலைதான் பசும்பொன் தேவருக்கும் காங்கிரஷ் மாநாட்டை திறந்து காங்கிரஷின் தந்தரத்தை மக்களிடம் முழங்கிவிட்டு வந்தவரை அவசர அவசரமாக இரவு கைது செய்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் விசாரணை என்றானது .
தேவர் விசாரணை கைதியாக நீதிமன்றத்தில் நிற்பதை ஏற்க முடியாமல் அரசு வழக்குரைஞர்கள் தேவருக்கு நாற்காலி வாங்கி தந்த அதிசயமும் நடந்தது .

ஆனால் ,
வள்ளலார் மீதும் தேவர் மீதும் சூழ்ச்சி பின்னியவர்களை வரலாறு புறந்தள்ளிவிட்டு ,இருவரும் மக்கள் மனதில் இன்றும் வாழம் அப்பழுக்கற்ற அவர்களது வாழ்க்கையே சான்று.

S.கிரந்தை ர.தினேஷ்

No comments:

Post a Comment