Friday 7 July 2017

தலித் ஆலயப்பிரவேசம் ஜீலை 8 -1939

"""""""""""""""""""""#வரலாற்றில்_இன்று"""""""""""

1939 ஜீலை 8 -ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிசன ஆலயப் பிரவேசம் நடைபெற்றது.அப்போது மதுரை மாவட்ட ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக தியாகி.வைத்தியநாத ஐயர் இருந்தார்.இராமநாதபுரம் மாவட்ட ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக பசும்பொன் தேவர் இருந்தார்.காங்கிரஸில் வலதுசாரி,இடதுசாரி என பலப்பரிட்சை நடந்துகொண்டிருந்த நேரம் அது! காந்தியை ஆதரித்த ராஜாஜி தமிழ்நாட்டில் வலதுசாரிகளின் தலைவர்.நேதாஜியை ஆதரித்த தேவர் தமிழ்நாட்டில் இடதுசாரிகளின் தலைவர்.வைத்தியநாத ஐயர் ராஜாஜியின் சீடர்.எனவே வைத்தியநாத ஐயரின் தலைமையில் மீனாட்சி அம்மன் கோவில் ஆலயப்பிரவேசம் என தெரிந்தவுடன்,அதை முறியடிக்க சனாதனி இந்துக்கள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டனர்.எனவே ஆலயப் பிரவேசத்தை சுமூகமாக நடத்திட விரும்பிய வைத்தியநாத ஐயர் மதுரை எட்வர்டு ஹாலில் ஒரு ஆலோசனை மாநாடு நடத்தினார்.அதில் ராஜாஜி,தேவர்,ராமன் உட்பட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.மாநாட்டில் ராஜாஜி,அரிஜனங்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டிய பொறுப்பை ஏற்கவேண்டிய தேவர் தான்.எனவே அவரை பேச அழைக்கின்றேன் என்றார்.தேவர் பேசும்போது,ஆலயப்பிரவேசம் செய்யும் என் அரிஜன சகோதரர்கள் அனைவரின் பாதுகாப்புக்கும் நான் உத்திரவாதம் அளிக்கிறேன் என உறுதி கூறினார்.அவர் உறுதி கூறியசெய்தி காட்டுத்தீபோல் பரவியது.மதுரையை சுற்றியுள்ள இளைஞர்கள்,உசிலம்பட்டி,முதுகுளத்தூர்,கமுதி போன்ற ஊர்களிலுள்ள இளைஞர்களெல்லாம் ஆயிரக்கணக்கில் மதுரையில் வந்து குவிந்தனர்.ஆலயப்பிரவேசம் ஆரம்பிக்கும் இடத்திலிருந்து கோவில் வாசல் வரை பத்து அடிக்கு ஒருவரென ராணுவ வீரர்கள் போல் இருபுறமும் வரிசையாக நின்றனர்.நாட்டுத்தலைசிகள் எனப்படும் கிராமத்தலைவர்கள் ஊர்வலமாக வந்தவர்களோடு சேர்ந்துவந்தார்கள்.ஆலயப்பிரவேசம் வெற்றிகரமாக நிறைவேறியது.ஆலயப்பிரவேசம் செய்திட்ட அனைவரும் பத்திரமாக வீடுகளுக்கு போய்சேர்ந்தனர் என்ற தகவல் கிடைத்தபின்புதான் அந்த இளைஞர்கள் அனைவரும் ஊர் திரும்பினர்.

No comments:

Post a Comment