Friday 14 July 2017

தேவர் நடமாடும் முருகக்கடவுள்- தியாகராஜ பாகவதர்

1957-ம் ஆண்டு கேரளாவின் நொச்சியூரில் சுவாமி சித்தானந்தர் ஆசிரமத்தில் ஆன்மீக விழா நடந்தது.  பித்துக்குளி முருகதாஸ், பாபநாசம் சிவன், எம்.கே. தியாகராஜ பாகவதர் போன்றோர் கலந்துகொண்டனர். விழா மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. ஆன்மீகச் சொற்பொழிவாற்ற பசும்பொன் தேவரும் அழைக்கப்பட்டார். ஸ்ரீதேவர் அவர்கள் 3மணிநேரம் பராசக்தி என்ற பொருளில் சொற்பொழிவாற்றினார். அவ்விழா முடிந்ததும் ஸ்ரீதேவர் தெய்வத்தை சந்தித்தார் தமிழ் திரை உலகின் மன்னர் (முதல் சூப்பர் ஸ்டார்) தியாகராஜ பாகவதர். 
பாகவதருக்கு அப்போது கண் பார்வை இல்லை. அதனால் தேவரைய்யா அருகில் வந்து ஐயாவை தொட்டுப் பார்த்தார்.  தேவரை நேரில்  நான் காணவேண்டும் என்று  பலமுறை எண்ணியதுண்டு. ஆனால் அது முடியவில்லை. எனக்குப் பார்வை இல்லாவிட்டாலும் தங்கைளைத் தொட்டுப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததே என் பாக்கியம்தான் என்றவர்,  ஐயா, நான் முருகக்கடவுள் மீது ஒரு பாட்டுப் பாடுகிறேன். தாங்கள் அவசியம் எனது பாட்டைக் கேட்க வேண்டும்'' என்றார்.
''தேவரோ, நான் ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். பயண அவசரத்தில் தங்களது பாட்டை கேட்க முடியாத நிலையில் இருக்கிறேன். வருத்தப்பட வேண்டாம். இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்தால் பார்த்துக் கொள்வோம்'' என்றார். பாகவதர் மிகவும் வருத்தப்பட்டார்.

''பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் என்னைப் பாடச் சொல்லிக் கேட்டு, நான் மறுத்த காலம் உண்டு. இப்போது நானே தங்களிடம் பாடுகிறேன் என்று வலியக் கேட்டுத் தாங்கள் மறுக்கிறீர்கள். இதுவும் என் காலக் கிரகம்தான்'' என்றார்.
தேவரின் மனம் மாறியது. ''ஊருக்குத் தாமதமாகப் போனாலும் பரவாயில்லை. நீங்கள் பாடுங்கள்'' என்றார் பசும்பொன் தேவரைய்யா.

உடனே முருகா என பாடத் தொடங்கினார். தேவரும் பாகவதரின் பாட்டைக் கேட்டு ரசித்தார். பாகவதரும் பத்துப் பாடல்களைப் பாடினார். ரயில் நேரம் எல்லாம் தவறிவிட்டது. தேவரும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

பாகவதரோ ''முருகன் மீது பாடினேன். அதுவும் நடமாடும் முருகக்கடவுள் முன்னாலேயே பாடினேன். என் ஜென்மம் சாபல்யம் அடைந்தது'' என்றார்.

No comments:

Post a Comment