Saturday 22 July 2017

தேவரின் சில கருத்துக்கள்

கோணலே இல்லாத தென்னை மரத்தைப் பார்த்தாலும் பார்க்கலாம். ஆனால் இந்தியாவின் வளர்ச்சியை அன்போடு நேசிக்கும் ஆங்கிலோ- அமெரிக்கத் தலைவர்களைப் பார்க்க முடியாது.-

மதத்தை, வழிபாட்டை, தெய்வீக வாழ்க்கையை சீர்குலைப்பது தமிழுக்குப் பாடுபடுவதாகாது. தமிழர்கள் உஷாராக வாழ்ந்து 'தமிழன்' என்ற மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ தமிழன்னை அருள்புரியட்டும்.

உண்மை முஸ்லிம்கள் இந்துக்களின் சகோதரர்களாய்,  உண்மை இந்துக்கள் முஸ்லிம்களின் சகோதரர்களாய் ஒத்து வாழ வேண்டும்.

நாணயங்கெட்ட ஆட்சியாளர்களிடத்தில், நாணயம் கட்டுக்கடங்கவில்லை. இது மக்களின் வாழ்வை மாய்க்கும் ஒரு பெரு நோய்.

மக்களை விட கட்சிதான் பெரிதாகவும், முக்கியமாகவும் நினைக்கிறார்கள். எந்த பிரச்சனையையும் கட்சிக் கண் கொண்டே நோக்குகிறார்கள். பிரச்சனை எதுவாக இருந்தாலும் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும்,  அதைச் செய்தது தனது கட்சிகாரனாக இருந்தால் கவனிக்காமலே விட்டுவிடுகிறார்கள். எவனாக இருந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்கிறார்கள். என்ன நடந்தாலும் கட்சி மாத்திரம் அழியாமல் இருந்தால் போதும் என்ற நினைப்பில் இருக்கிறார்கள் ஆளும் சர்க்கார்.

அரை வட்டிக்கு மேல் வாங்கக்வோ, கொடுக்கவோ கூடாது என்கிறது சர்க்காரின் சட்டம் . ஆனால் வங்கி முக்காலுக்கும் மேல் கூடப்போட முனைகிறது

வெள்ளைக்காராட்சியில் கூட ருபாய்க்கு 6 , 7 படி அரிசி கிடைத்தது, இவர்களாட்சியில் ருபாய்க்கு 1படி கூட கிடைக்க வழியில்லை

பணம் முழுவதும் அரசுக்கு வேண்டிய வியாபாரிகளிடம் தான் குவிந்து கிடக்கிறது

ஏழையானலும் சரி, பணக்காரனாலும் சரி மனிதனுக்கு அத்தியாவசியத் தேவையான உணவு பொருட்களின் விலையை கேள்விப்பட்டு அதிர்ந்து போனேன். இட்லி விலையை தான் கூடவில்லை.ஆனால் உருவத்தை பாதியாக்கிவிட்டார்கள்.

No comments:

Post a Comment