Tuesday 18 July 2017

தேவரின் கன்னிப்பேச்சு - சர்தார்

           தேவரின் முதல் மேடைப்பேச்சு
             தெரிந்ததும் தெரியாததும்

சேதுராமன்செட்டியார் என்பவர் சாயல்குடி எனும் ஊரில் 1933ம் ஆண்டு ஜுன் 23ம் தேதி விவேகானந்தர் வாசகசாலையின் முதலாம் ஆண்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டம் திருமங்கலம் நித்தியானந்தம் தலைமையின் கீழ் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு T.L.சசிவர்ணத்தேவரின் அழைப்பின் பேரில் தியாகராஜசிவம், ரா.சுந்தரராஜையங்கார், காமராஜர், ரா.ஸ்ரீநிவாசயங்கர், தாயம்மாள்,  முத்துச்சாமி ஆசாரி மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.
இக்கூட்டத்திற்கு சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்த L.கிருஷ்ணசாமி பாரதி அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் வர இயலவில்லை. அதே நேரத்தில் சாயல்குடி அருகே உள்ள இலந்தைகுளம் கிராமத்தில் நிலச்சுவான்தர் சின்ன உடையார்த்தேவர் வீட்டிலிருந்த பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரை அழைத்து வந்து சுவாமி விவேகானந்தர் பெருமை என்ற தலைப்பில் பேச சேதுராமன் செட்டியார் கேட்டுக்கொண்டார். 
பசும்பொன் தேவரும் அழைப்பை ஏற்று உணர்ச்சி ததும்ப மிகவும் ஆர்வத்துடன் சுமார் இரண்டு மணிநேரம் தங்குதடையின்றி விவேகானந்தரின் பெருமைகளை தெளிவாகப் பேசி , வந்திருந்த அனைவர்களின் உள்ளத்தையும் வெற்றிகொண்டார். இந்த பேச்சுதான் தேவருக்கு கன்னிப் பேச்சாகும். இதற்கு பின்பு பட்டி தொட்டியெங்கும் தொடர்ந்தது. இந்த முதல் வாய்ப்பை ஏற்படுத்தி தந்த சேதுராமன் செட்டியாரை பின்நாளில் தேர்தலில் தன்கட்சி சார்பாக நிறுத்தி வெற்றிபெற செய்தார் என்பதும் குறிப்பிடக்தக்கது.-

   சுதந்திர போராட்ட தியாகி மௌலானா சாகிப் அவர்களின் குடும்ப உறுப்பினரும் எழுத்தாளருமான ஐயாM.A.சர்தார் MA அவர்கள்.

No comments:

Post a Comment