Tuesday 11 July 2017

ஆண்டித்தேவர் சட்டமன்ற உரை.

தற்காலத்தில் தன்தொகுதி பற்றியே பேசாத MLAகள் இருக்கிறார்கள் . ஆனால் உசிலம்பட்டி MLA ஆண்டித்தேவர் இராமநாதபுரம் மாவட்ட தொகுதியை தன்தொகுதியாக நினைத்து பிரச்சனைகளை சட்டமன்றத்தில் பேசியுள்ளதை படியுங்கள்.

கடலாடியில் ஒருவருக்குப் பாம்பு கடித்து 75 மைல் தூரம் உள்ள மதுரைக்கு வந்துதான் சிகிச்சை பெற வேண்டுமென்று சொன்னால் கிராமங்களிலுள்ள வயல்களில் வேலை செய்கிறவர்கள் இறந்து விடுகிற நிலைதான் ஏற்படும். ஆகவே தலைமை மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலுள்ள மருத்துவமனைகளிலும் உரிய மருந்துகள் கிடைக்கச் செய்ய வழிவகை செய்ய வேண்டும். கமுதியிலுள்ள மருத்துவமனையில் பெண் டாக்டர்கள் இரண்டு ஆண்டு காலமாக இல்லை.அப்படிப்பட்ட நிலை எங்கள் பகுதியில் மட்டுமல்லாது பல இடங்களிலும் இருக்கக்கூடும். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அப்படிப்பட்ட நிலைமைகளை எல்லாம் மாற்றும் வகையில் ஆவணம் செய்ய வேண்டுமென்று கேட்டு என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன்.

1980 ஜூலை 18 ல் ஆண்டித்தேவர் சட்டமன்ற உரை.

#இந்த_நூலை_எனக்கு_வழங்கிய_ஐயா_நவமணி_அவர்களுக்கு_மிக்க_நன்றி. 

No comments:

Post a Comment