Thursday 20 July 2017

தேவர் கல்லூரி உருவான விதம்

இருபது வருடங்களுக்கு மேல் தன்னுடனேயே இருந்து,தனது நம்பிக்கைக்குரியவர்களாக திகழ்ந்த நபர்களுக்கு தனது சொத்துக்களைப் பிரித்து அவர்களுக்கு இனாம் சாசனம் எழுதி வைத்து அவர்களது வாழ்விற்கு ஒரு வழி செய்ய வேண்டும் என்று தேவர் கருதினார்.தனது சொத்தின் ஒரு பகுதியை 17 பாகங்களாகப் பிரித்து,ஒரு பாகத்தை தனக்கு வைத்துக் கொண்டு,மீதி 16 பாகங்களை 16 பேர்களுக்கு எழுதி திருச்சுழி சப்ரிஜிஸ்தாரை படிகட்டி புளிச்சிகுளத்திற்கு வரவழைத்து,அந்த பத்திரங்களை தானே இருந்து ரிஜிஸ்தர் செய்து,இனாம் ஏற்பாட்டை முடித்தார் தேவர்.தேவரால் இனாம் சாசனம் எழுதி வைக்கப்பட்ட 16 பேர்கள்:1)அருப்புக்கோட்டை ஏ.ஆர்.பெருமாள் அவர்கள்,2)தூரி ராமசாமித்தேவர் அவர்கள்,3)அருப்புக்கோட்டை வி.ஏ.சிவன் அவர்கள்,4)பாரக்குளம் செல்லமுத்துத்தேவர் அவர்கள்,5)பசும்பொன் நல்லகுட்டித்தேவர் அவர்கள்,6)பசும்பொன் சின்னத்தம்பித்தேவர் அவர்கள்,7)பசும்பொன் நாகநாதன் அவர்கள்,8)கல்லுப்பட்டி வெள்ளைச்சாமித்தேவர் அவர்கள்,9)பசும்பொன் ராமச்சந்திரத்தேவர் அவர்கள்,10)மதுரை அட்டெண்டர் முத்துச்செல்வம் அவர்கள்,11)திருச்சுழி குருசாமி பிள்ளை அவர்கள்,12)சிவகங்கை கல்லூரணி முத்துராசு பிள்ளை அவர்கள்,13)வடிவேலம்மாள் அவர்கள்,14)ஜானகி அம்மாள் அவர்கள்,15)பசும்பொன் வீரன் அவர்கள்,16)பசும்பொன் சந்நியாசி அவர்கள்.மேலே கண்ட 16 பேரில் வடிவேலம்மாள்,ஜானகி அம்மாள்,ராமச்சந்திரத்தேவர்,அட்டெண்டர் முத்துச்செல்வம் ஆகிய 4 பேர் தவிர,மீதமுள்ள 12 பேர் கூடி தேவர் மறைந்ததும்,அவரது பெயரால் தங்களுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்துக்களை இனாம் சாசனமாக எழுதி வைத்து தேவர் பெயரால் தர்ம ஸ்தாபனத்தை நிறுவ எண்ணினார்கள்.தேவர் சொத்து தேவருக்கே என்று முடிவு செய்தனர்.அப்படி முடிவு செய்த 12 பேரும் பெரும் பணக்காரர்கள் இல்லை.மிக மிக சாதாரணமானவர்கள்.தலைவர் தேவர் மீதுள்ள பக்தியின் காரணமாக ஒரு பைசாக் கூட வாங்காமல் ஒரு செண்ட் நிலத்தைக் கூட எடுத்துக் கொள்ளாமல்,அனைத்து சொத்துக்களையும் இனாம் சாசனமாக எழுதி வைக்க முன் வந்த அந்த தியாகிகளை தேவரை பின்பற்றும் தொண்டர்கள் என்றைக்கும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.அந்த 12 பேர் செய்த முடிவின்படி பசும்பொன் 'திரு.உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவு தரும பரிபால நிறுவனம்' என்று ஒரு தரும ஸ்தாபனம் நிறுவி,அதற்குத் தலைவராக வள்ளியூர் வி.எஸ்.சுப்பிரமணிய பாண்டியனைத் தேர்ந்தெடுத்து மற்றும் நிர்வாக குழுவும் அமைத்து,பைலாக்களையும் உருவாக்கி ரிஜிஸ்தர் செய்யப்பட்டது.ஏ.ஆர்.பெருமாள் அவர்கள்,பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள்,வழக்கறிஞர் ரகுபதித்தேவரும் அயராது பாடுபட்டு மேற்படி தரும ஸ்தாபனத்தை உருவாக்கினார்கள்.அந்த தரும ஸ்தான என்டோமென்டாக காட்டித்தான் கமுதி தேவர் கல்லூரிக்குரிய இடங்கள் பசும்பொன் கிராமத்தாரால் இனமாக வழங்கப்பட்டது.பெரும்பகுதியான இடங்கள் ஏ.ஆர்.பெருமாள் அவர்கள் மற்றும் வள்ளியூர் வி.எஸ்.சுப்பிரமணியப்பாண்டியன் அவர்களது பெயரிலும் வாங்கப்பட்டன.கமுதி தேவர் கல்லூரியை உருவாக்க ஃபார்வர்டுபிளாக் காரியாபட்டி எம்எல்ஏ ஏ.ஆர்.பெருமாள் அவர்களும்,ஃபார்வர்டுபிளாக் முதுகுளத்தூர் எம்எல்ஏ குண்டுகுளம் இரத்தினத்தேவரும்,கமுதி யூனியன் சேர்மன் கே.எல்.எம்.ராமமூர்த்தி ஆகியோர் மேற்கொண்ட பெரும் முயற்சிக்கு இடையே பசும்பொன்னில் கிராமசபை கூட்டம் 3 நாட்கள் தொடர்ந்து கூட்டப்பட்டு அதில் எடுக்கப்பட்ட முடிவுப்படி கல்லூரி அமைக்கும் வேலை தொடங்கப்பட்டது.அதன் பிறகுதான் பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் தலையிட்டு அதனை தேவர் தரும ஸ்தாபனத்தின் பெயராலேயே செய்வோம் என்று கூறினார்.அதை அனைவரும் ஏற்றுக்கொண்டு கமுதி தேவர் கல்லூரி உருவாக்கப்பட்டது.அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்கள் தேவர் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.பி.கே.மூக்கையாத்தேவர் அவர்கள் அவ்விழாவிற்கு தலைமை தாங்கினார்.10 பவுனில் முழுக்க தங்கத்தால் ஆன வரவேற்பு இதழை முதல்வருக்கு ஏ.ஆர்.பெருமாள் அவர்கள் வாசித்தளித்தார்.இப்படி சிறப்பு மிக்க வரலாற்று நிகழ்வுகளுடன் தொடங்கப்பட்டது தான் கமுதி தேவர் கல்லூரி.ஜெய்ஹிந்த்!!!

No comments:

Post a Comment