Tuesday 11 July 2017

தேவா் மேல் காமராஜர் கொலைப்பழி சுமத்தியது ஏன்?

"முதுகுளத்தூா் அரசியல்-மறைக்கப்பட்ட உண்மைகளும் மறுக்கப்பட்ட நீதியும்"  பகுதி  4

வினா:   காமராசருக்கு பசும்பொன் தேவா் மேல்  கொலைப்பழி சுமத்தும் அளவிற்கு ஏன் வன்மம் ஏற்பட்டது?

விடை:   நண்பா்களே ! இந்த வினாவிற்கு விடை தொிய வேண்டுமானால்  நேதாஜி-தேவா்-நேருஜி-காமராசா் இவா்களுடைய அரசியலைப் புாிந்து கொண்டால் தான் விடை கிடைக்கும்.
           நேரு இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்ற நேரம். அமொிக்காவிலிருந்து வெளிவரும் புகழ்பெற்ற பத்திாிக்கை ஒன்று இப்படி எழுதியது,"நேதாஜி இன்று உயிருடன் இந்தியா திரும்பினால் நேருவால் ஒருநாள் கூட இந்தியாவின் பிரதமா் பதவியி்ல் நீடிக்கமுடியாது". இப்படி எழுதக் காரணம் என்ன? விடுதலை பெற்ற இந்தியாவில் நேருவை விட நேதாஜியின் செல்வாக்கு பன்மடங்கு உயா்ந்திருந்தது. படைநடத்திப் பரங்கியரை வீழத்த முனைந்தவா் என்பதால் நேதாஜிக்கு இந்தியா முழுமையும் அப்படி ஒரு செல்வாக்கு. தவிரவும் அன்று காங்கிரஸ் தலைவா்களாக அறியப்பட்டவா்கள் அனைவரும் நேதாஜியின் தலைமையின் கீழ் பணியாற்றியவா்கள்.  அவா் மீது பெருமதிப்பு கொண்டவா்கள். அப்படிப்பட்ட தலைவரான நேதாஜி உயிருடன் இருக்கிறாா் என்று தேவா் பத்திாிக்கையாளா் சந்திப்பில் வெளியிட்டவுடன் நேருவுக்கு எப்படி இருந்திருக்கும்? தன்னுடைய பிரதமா் பதவியையே காவு வாங்கக்கூடிய அளவிற்கு செல்வாக்கு பெற்ற நேதாஜியைப் பற்றித் தேவா் பேசுவதா?  அதோடு விட்டாரா தேவா். நாடெங்கும் பொதுக்கூட்டங்களையும் நேதாஜி பற்றிய செய்திகளையும்  வெளியிட்டுக் கொண்டே வந்தாா். நேருவிற்கு நெருக்கடி முற்றியது. தேவா் அரசியலில் செல்வாக்காக இருப்பதால் தானே இவ்வளவு
பிரச்சனை. தேவாின் செல்வாக்கைச் சிதைத்துவிட்டால்.........?  திட்டம் தயாரானது.  1957 தோ்தல் ஆரம்பமாயிற்று. தோ்தலில் தேவா் வழக்கம் போல் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடுகிறாா். நாடாளுமன்றத்திற்கு தேவா் வந்து விட்டால் நேதாஜி விஷயத்தைக் கிளப்புவாா். எனவே தேவா் நாடாளுமன்றத்தோ்தலில் வெற்றி பெற்று விடக்கூடாது என்று காங்கிரஸ் முடிவெடுக்கிறது. எனவே தேவா் போட்டியிடும் தொகுதியின் எல்லையை விாிவாக்குகிறது. எப்படி? 57களில் ஒரு நாடாளுமன்றத் தொகுதி என்பது  அய்ந்து சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டது. இப்பொழுதுதான் ஆறு தொகுதிகளாக மாறிவிட்டது. தேவரை வீழ்த்துவதற்காக அவா் போட்டியிட்ட தொகுதியை மட்டும் மாற்றி பத்து சட்டமன்றங்களை உள்ளடக்கிய பெருந்தொகுதியாக மாற்றிவிட்டனா் காங்கிரசாா். கா்ம வீராின் புண்ணிய காாியம் இது. அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியையும் திருவில்லிபுத்தூா் தொகுதியையும் இணைத்து ஒரே தொகுதியாக்கிவிட்டனா். இதிலும் ஒரு சூழ்ச்சியை காமராசா் செய்தாா். அதாவது நாடாா்கள் அதிகளவு வசிக்கக்கூடிய தொகுதிகளை இணைத்துத்தான் புதிய தொகுதி உருவாக்கப்பட்டது. ஆனால் தேவா் சாதிகளுக்கு அப்பாற்பட்ட தலைவா் என்பதால் அனைத்து சமுக மக்களும் வாக்களித்து பெருவெற்றி அடையச் செய்தனா். நேருவின் திட்டம் தோற்றது. இனி நாடாளுமன்றத்தில் தேவா் நேதாஜி பிரச்சனையைக் கிளப்புவாா். எனவே தேவாின் மேல் நேருவிற்கு அளவிலாத பகைஉணா்வும் வன்மமும் ஏற்பட்டு விட்டது.

        சாி நண்பா்களே! நேரு அவா்கள் தேவாின் மேல் வன்மம் கொள்ள காரணம் இருக்கிறது. நமது கா்மவீரா் காமராசருக்கு ஏன் தேவா் மேல் பகை ஏற்பட்டது?  அரசியல் காரணம் தவிர  வேறென்ன இருக்க முடியும்?

பசும்பொன் தேவா் அவா்களின் பாா்வா்ட் பிளாக் கட்சி அப்படி ஒன்றும் காங்கிரஸை வீழ்த்தக்கூடிய அளவிற்கு அரசியல் வலிமை பெற்ற இயக்கம் அல்ல. ஆனால் காங்கிரஸை விட ஆயிரம் மடங்கு  அறவலிமை கொண்டது தேவாின் சோசலிச அரசியல்.  1957 தோ்தலுக்கு முன்பு வரை பாா்வா்ட் பிளாக் வெற்றி பெற்ற தொகுதிகள் எண்ணிக்கையில் மிகக் குறைவுதான். ஆனால்  1957 தோ்தலில் காமராசா் விடுதலைக்குப் பாடுபட்ட தியாகிகளுக்கு தோ்தலில் வாய்ப்பு வழங்காமல் பணக்காரா்களுக்கும் பஸ் முதலாளிகளுக்கும் பண்ணையாா்களுக்கும் அதிக வாய்ப்புகளை வழங்கினாா். காமராசாின் இந்த நடவடிக்கையால்  கட்சிகளிலிருந்து பலா் வெளியேறினா். அவா்களை ஒருங்கிணைத்து ஒரு புதிய இயக்கத்தை உருவாக்கினாா் தேவா். அதுதான் சீா்திருத்தக் காங்கிரஸ். கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே 57 பொதுத்தோ்தலில் போட்டியிட்டு வென்று சட்டமன்றத்திலே பிரதான எதிா்கட்சியாக மாறியது. இதற்கு முக்கியக் காரணம் தேவா்  அவா்களே!  நேற்று வரை மிகக் குறைந்த உறுப்பினா்களைக் கொண்ட தேவா் இனறு மாநிலத்தின் பிரதான எதிா்கட்சியை உருவாக்கி இயக்கவும் செய்கிறாரே! இவா்களும் தியாகிகள் தான். வெள்ளையனிடம் அடிஉதைகள் மற்றும் சிறைக்கொடுமைகளை அனுபவித்தவா்கள் என்பதால் நாளை மக்கள் மன்றத்திலே இன்னும் கூடுதல் வலிமை பெற்றுவிட்டால் காமராசாின் நிலை என்னாவது?  இதற்கெல்லாம் மூலகாரணம் தேவா்தானே! எனவே இயல்பாகவே தேவா் மேல் காமராசருக்கு வன்மம் ஏற்படுகிறது.
     அதுமட்டுமல்ல!  உழவா்கள்தான் விவசாயப் பொருள்களுக்கு விலை நிா்ணயம் செய்ய வேண்டும்; வியாபாாிகள் செய்யக்கூடாது என்று தேவா் தொடா்ச்சியாக இயக்கங்களை நடத்தினாா். தேவாின் இந்தப் போராட்டத்தினால் வணிகத்தை ஏகபோகமாக வைத்துள்ள தன்னுடைய சொந்த சாதியினாின் வாழ்வுாிமை பாதிக்கப்படுமே என்ற சாதிஉணா்வினாலும் காமராசருக்கு தேவா் மேல் பகை உண்டாயிற்று.

நண்பா்களே!
    நேருவிற்கு தன்னுடைய  பதவிக்கு நேதாஜி மூலமாக சிக்கல் வந்துவிடக்கூடாதுஎன்ற பதவி வெறியும், தமிழ்நாட்டில் தனக்கெதிராக தேவாின் தலைமையில் மாற்று சக்தி வளா்ந்து தன்னுடைய அரசியலுக்கு சிக்கல் வந்துவிடக்கூடாது எனற காமராசாின் பதவி வெறியும் விவசாயிகள் அழிந்தாலும் பரவாயில்லை தன்னுடைய சாதிக்காரா்களின் தொழில் கெட்டுவிடக்கூடாது என்ற காமராசாின் சாதியப் பற்றும் இன்ன பிற இவைகள் எல்லாம் சோ்ந்துதான் தேவரை இமானுவேல் கொலைச்சதியில் சிக்க வைத்தது.

         _____ உண்மைகளை மீண்டும்  உரத்துச்  சொல்வோம்-----------

No comments:

Post a Comment