Friday 14 July 2017

காம்ரேட் அசோக் கோஷ்

"வங்கத்து பசும்பொன் தேவர்" என்று மேற்குவங்க மாநில மக்களாலும்,ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தினராலும் அன்போடு அழைக்கப் பெற்றவர் காம்ரேட் அசோக் கோஷ் அவர்கள்.நேதாஜி அவர்களை பின்பற்றி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்.தமிழகத்தில் கச்சத்தீவு போல மேற்குவங்க மாநிலத்தில் பெருபாரி என்ற பகுதியை போராடி மீட்டெடுத்தவர்.1939 செப்டம்பர் 3-ல் சென்னை கடற்கரையில் நடைபெற்ற தமிழ் மாநில ஃபார்வர்டுபிளாக் ஆரம்ப விழா பொதுக்கூட்டத்தில் தேவர் திருமகனாரை அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தின் தமிழ் மாநிலத் தலைவராக நேதாஜி அறிவித்த போது உடன் இருந்தவர்.நேதாஜி,தேவர் ஆகிய இருபெருந் தலைவர்களிடமும் நெருங்கி பழகியவர்.அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தின் மேற்குவங்க மாநில பொதுச்செயலாளராக தொடர்ந்து 70 ஆண்டுகள் இருந்தவர்.நேதாஜி,தேவரை போல இவரும் தூய பரிசுத்த பிரமச்சாரியாக வாழ்ந்தவர்.கொல்கத்தாவில் உள்ள ஃபார்வர்டுபிளாக் தலைமை அலுவலகத்திலுள்ள ஒரு அறையில் தங்கி மிகவும் எளிமையான முறையில் வாழ்க்கையை நடத்தி வந்தவர்.94 வயது வரை இயக்கப்பணிகளை செவ்வனே செய்து வந்தவர்.24 மணி நேரமும் இரவு,பகல் பாராமல் இயக்கப்பணி ஆற்றியவர்.மேற்குவங்க மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களாலும் மிகவும் மதிக்கப்பட்டவர்.எம்எல்ஏ,எம்பியாக இருந்திட வேண்டும் என்று ஒருபோதும் ஆசைப்பட்டிராத பதவி ஆசைஅற்ற பகலவர்.ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தின் பீஷ்மராக இருந்து இயக்கத்தை வழிநடத்தியவர்.மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி இடதுசாரி கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தியவர்.மேற்குவங்க மாநில முதல்வர்களான ஜோதிபாசு அவர்கள் முதல் மம்தா பானர்ஜி அவர்கள் வரை ஃபார்வர்டுபிளாக் கட்சி அலுவலகத்திற்கே நேரடியாக வந்து இவரை சந்திக்கின்ற அளவிற்கு மக்கள் செல்வாக்கு பெற்ற மகத்தான தலைவராக திகழ்ந்தவர்.தன் வாழ்நாளில் எந்த இடத்திலும் எதற்காகவும் யாரிடமும் இவர் சிபாரிசு கேட்டு சென்றதில்லை.7 இடதுசாரி கூட்டு இயக்கத்தின்(LEFT FRONT) தலைவராக இருந்தவர்.கொல்கத்தாவில் 24 மணி நேரத்தில் 7 1/2 அடி உயரமுள்ள தேவர் சிலையை நிறுவியவர்.தேவர் பெயரில் நூலகம் அமைத்து வந்தவர்.நான் மிகவும் போற்றும் இரண்டு தலைவர்கள் என்றால் நேதாஜியும்,தேவரும் தான் என்று கூறியவர்.தமிழகம் வந்தால் இவர் முதலில் செல்ல விரும்பும் இடம் பசும்பொன் தான்.வாழ்க நேதாஜி!! வாழ்க தேவர் புகழ்!! வாழ்க ஃபார்வர்டுபிளாக்!! ஜெய்ஹிந்த்!!!

புகைப்படம்

1தேவருக்கு மாலை அணிவிக்கிறார்


2.ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் தலைநிமிர்ந்த பதாகை பிடல் காட்ஸ்ரோ அவர்களை வங்கத்து பசும்பொன் தேவர் அவர்கள் கொல்கத்தா விமானநிலையத்தில் வரவேற்ற போது எடுக்கப்பட்டது.ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் தலைநிமிர்ந்த பதாகை பிடல் காட்ஸ்ரோ அவர்களை வங்கத்து பசும்பொன் தேவர் அசோக் கோஷ் அவர்கள் கொல்கத்தா விமானநிலையத்தில் வரவேற்ற போது எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment