Tuesday 6 March 2018

ஆசியாவின் ஆதர்ஸம் மாசேதுங்”

“ஆசியாவின் ஆதர்ஸம் மாசேதுங்”

ஆசியவாசிகள் என்ற தோரணையில் ஆசியாவின் பூர்வீகப் பண்பான பாசம், இந்தியாவின் விசயத்தில் மாசேதுங்கை சொக்க வைத்திருப்பதாக அவருடைய ஹிருதயத்திலிருந்து நேரே வெளி வந்த வார்த்தைகளிலிருந்து நாம் அறிந்து பூரிக்கிறோம். அமெரிக்கப் பிரச்சாரம், மாசேதுங்கை ஒரு சமயம், ஊதாரியாகவும், மறுசமயம் போக்கிரியாகவும் அர்த்தப்படுத்தி காட்டும். ஆனால் மாசேதுங் ஊதாரியுமல்ல – போக்கிரியுமல்ல – ஆக்கிரமிக்கிற ஆசையில் போரைஅடித்தளமாக அமைத்துக் கொண்ட ஒவ்வொரு நாட்டின் உச்சியிலும் ஆணி அறைய வந்த ஆசியாவின் ஆதர்ஸ புருசன் என்பதை அவருடைய தீர்க்கச் சொற்கள் நிரூபித்து விட்டன.

குறிப்பு: (பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் இந்திய சீன உறவு பற்றி நேதாஜி இதழில் எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி)

No comments:

Post a Comment