Saturday 3 March 2018

அசோக் கோஷ்

தலைவர் அசோக் கோஷ் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று.நேதாஜி,தேவரை பின்பற்றி இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்.நேதாஜி,தேவரை போல தூய பிரம்மச்சரிய வாழ்க்கையை மேற்கொண்டவர்.70 ஆண்டுகளாக தொடர்ந்து ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தின் மேற்குவங்க மாநில பொதுச்செயலாளராக இருந்தவர்.மேற்குவங்க மாநில மக்களாலும்,ஃபார்வர்டுபிளாக் இயக்க தோழர்களாலும் "வங்கத்து பசும்பொன் தேவர்" என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.கொல்கத்தாவில் உள்ள ஃபார்வர்டுபிளாக் தலைமை அலுவலகத்திலுள்ள ஒரு அறையில் தங்கி மிகவும் எளிமையான முறையில் வாழ்ந்தவர்.94 வயதிலும் கண் பார்வை இல்லாத போதிலும் பம்பரமாக சுழன்று இயக்க பணிகளை செய்து இயக்கத்தில் உள்ள இளைஞர்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்தவர்.நேதாஜி,தேவர் ஆகிய இருபெருந் தலைவர்களின் கொள்கைகள் வழி நடந்தவர்.1939 செப்டம்பர் 3 அன்று சென்னை கடற்கரையில் நடைபெற்ற தமிழ் மாநில ஃபார்வர்டுபிளாக் ஆரம்ப விழா பொதுக்கூட்டத்தில் தேவர் திருமகனாரை அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தின் தமிழ் மாநிலத் தலைவராக நேதாஜி அறிவித்த போது உடன் இருந்தவர்.தமிழகத்தில் கச்சத்தீவு போல மேற்குவங்க மாநிலத்தில் பெருபாரி என்ற பகுதி உள்ளது.அதனை போராடி மீட்டெடுத்த காரணத்தால் மேற்குவங்க மாநில மக்கள் இவரை "பெருபாரி மீட்பு போராளி" என்று அழைப்பது உண்டு.மேற்குவங்க மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களாலும் மிகவும் மதித்து போற்றப்பட்டவர்.ஜோதிபாசு முதல் மம்தா பானர்ஜி வரை அனைத்து முதல்வர்களும் தனது அலுவலகத்திற்கே வந்து சந்திக்க கூடிய அளவிற்கு மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக திகழ்ந்தார்.கொல்கத்தா வாழ் தமிழர்களாலும்,தமிழ்சங்கத்தாலும் மிகவும் மதிக்கப் பெற்றவர்.மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து இடதுசாரி ஆட்சியை ஏற்படுத்தியவர்.7 இடதுசாரிய கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்ட இடதுசாரி அணியின் பொதுச்செயலாளராக இருந்தவர்.35 ஆண்டுகளுக்கு மேல் இடதுசாரிய ஆட்சி இருந்த போதும் தனக்கென்று எந்தவொரு சிபாரிசும் கேட்டு சென்றதில்லை.எம்எல்ஏ,எம்பி போன்ற பதவிகளில் இல்லாத போதிலும் மக்கள் மத்தியில் ஒரு செல்வாக்கு பெற்ற தலைவராக திகழ்ந்தார்.ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தின் பீஷ்மராக இருந்து இயக்கத்தை வழி நடத்தியவர்.கொல்கத்தாவில் 9 3/4 அடி உயரமுள்ள தேவர் திருவுருவ சிலையை நிறுவியவர்.தமிழகம் வந்தால் பசும்பொன்னிற்கு தான் முதலில் செல்ல விரும்புவார்.தலைவர் அசோக் கோஷ் அவர்களின் மறைவு ஃபார்வர்டுபிளாக் இயக்கத்திற்கு மட்டுமில்லை மேற்குவங்க மாநிலத்திற்கே ஒரு பேரிழப்பாகும்.தேவர் திருத்தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஃபார்வர்டுபிளாக் இயக்கத்தை வலுப்படுத்துவதே நாம் அவருக்கு செலுத்துகின்ற உரிய மரியாதையாகும்.தலைவர் அசோக் கோஷ் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த செவ்வணக்கம்.ஜெய்ஹிந்த்!!!

No comments:

Post a Comment