விபூதி வீரமுத்து கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் பகுதியில் இருந்தவர். தேவர் சமூகத்தினை சேர்ந்தவர்.
ஈவேரா தமது காலத்தில் ராமர் படத்தினை சேர்ப்பால் அடித்து ஹிந்து வெறுப்பை காட்டியபோது. எதிர்த்து கேள்வி கேட்ட ஆண் மகன்.
ஈவேரா கும்பல் தங்களுக்கே உள்ள பகுத்தறிவுடன்... “ என் பணத்தில் நான் காசுகொடுத்து வரைந்த படத்தினை எனது செருப்பால் நான் அடிப்பதில் என்ன தவறு? இதை கேட்க நீயார் ? என விபூதியை கேட்டனர்.
மறுதினம் ...
அதே இடத்தில் ஈவேராவின் படத்தினை வரைந்து அதை செருப்பால் அடித்தார் வீபூதி வீரமுத்து ...
கேள்விகேட்டு கோபத்துடன் வந்த ஈவேரா அண்ட் கோ வுக்கு அவர்கள் பாணியிலேயே பதில் சொன்னார் வீபூதி வீர முத்து
என் பணத்தில் நான் காசுக்கொடுத்து வரைந்த படத்தினை எனது செருப்பால் அடிப்பதில் என்ன தவறு இதை கேட்க நீயார் ?
ஈவேரா கும்பலுக்கு பதில் சொல்ல முடியவில்லை...
கருப்புக்கு ஒரு மறுப்பு போன்று பல நூல்களை எழுதி பதிப்பித்து நாஸ்திக அராஜக கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் வீபூதி வீரமுத்து.
சிலம்புச்செல்வர் ம.பொ.சி அவர்கள் திராவிட எதிர்ப்பு மாநாடு நடத்தியபோது அதில் கலந்துகொண்டு சிறப்பித்தவர்.
விபூதியின் நூல்கள் அடுக்கு மொழியில் துணிவுடன் கடுமையாக திராவிட கழகத்துக்கு அதன் தலைமைக்கு சவுக்கடி கொடுத்து வந்தது.
No comments:
Post a Comment