Tuesday 12 September 2017

முத்துராமலிகத்தேவர் திருக்கோவில்

முத்துராமலிகத்தேவர் திருக்கோவில்

இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் எனும் கிராமத்தில் உள்ளது இத்திருத்தலம். 1908 - 1963 தேவர்சுவாமிகள் வாழ்ந்த காலம். இளம் வயது முதலே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார் . அதிதீவிர முருக பக்தர் இவர். மிகச்சிறந்த ஆன்மீக சொற்பொழிவு பல நிகழ்த்தியுள்ளார். இவர்  நிகழ்த்திய வள்ளலார் பற்றிய சொற்பொழிவை நூலாக வெளியிட்டுள்ளனர் வள்ளலார் பக்தர்கள். திருச்செந்தூர், பொள்ளாச்சி குடலுருவி மாரியம்மன் கோவில் மற்றும் கேரளா என பல இடங்களில் ஆற்றிய சொற்பொழிவுகள் புகழ்பெற்றவைகளாகும். ஆன்மீகத்தை விஞ்ஞானதோடு தொடர்படுத்தி பேசுவது இவரின் தனிச் சிறப்பு. அர்த்தமுள்ள இந்துமதம் எனும் நூலில் கண்ணதாசன் பசும்பொன் தேவரை நான் அறிந்த வரையில் உண்மையான, ஒழுக்கமான, பிரமச்சாரி
உண்டென்றால் அது உத்தம சீலர் பசும்பொன் தேவர் அவர்கள்
மட்டுமே" எனக்குறிப்பிட்டுள்ளார்.
தீவிர வள்ளலார் பற்றாளரான தேவர் வீட்டில் வள்ளலார் பூஜை இன்றளவும் உள்ளது. தனது கடைசி காலத்தில் மதுரை திருநகரில் வாழ்ந்து அங்கேயே மறைந்தார்.பிறந்த நாளிலேயே 1963ம் ஆண்டு சித்திடைந்த சித்தர் தேவர். தான் இறக்கப்போகும் நாளை முன்னரே கணித்துக் கூறியதுடன் பசும்பொன் கிராமத்தில் அடக்கம் செய்யுமாறு கூறிவிட்டு மறைந்தார். வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் பசும்பொன் வந்து தேவருக்கு வள்ளலார் முறைப்படி ஜீவசமாதி நிலை அமைத்தார். தொடர்ந்து மண்டலபூஜை நடைபெற்று 1963 டிசம்பர் 5தேதி பக்தர்களால் குருபூசை விழா நடைபெற்றது.  வல்லநாடு சித்தர் தொடர்ந்து 12ஆண்டு குருபூசையில் கலந்துகொண்டு பூஜை நடத்தினார். அதன் பிறகு தமிழக அரசே இவ்விழாவை தொடந்து நடத்துகிறது. வள்ளலார் பற்றாளரான தேவர் குருபூசையில் பல லட்சம் பேருக்கு அன்னாதானம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது அதை உறுதிசெய்கிறது.

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...

******************************************

நான் எடுத்த புகைப்படங்கள்

No comments:

Post a Comment