Monday 4 September 2017

திருப்புளி ஆழ்வார் (உறங்காப்புளி)

பெருமாள்கோவில் - ஆழ்வார்திருநகரி

ஆதிநாதர் கோவில்     ஒரு     காலத்தில்     தாமிரபரணி
ஆற்றங்கரையிலிருந்தது. பின்னர் கோவிலையும் ஊரையும்
பெரிய தாக்கும் பொருட்டு வடக்கே கரையை தள்ளி வைத்து
அலகல்லும் படித்துறையும் கட்டினர். ஸ்ரீ ஆதிநாதர் கோவிலும்
புளியமரமும் அவற்றை ஒட்டி இருந்தன. அப்புளி இன்றும்
பொந்தாயிரம் புளியாயிரம் என்ற பழமொழிக் கொப்ப பல
பொந்துகளுடன் முதிர்ந்துள்ளது: இன்றும் ஸ்ரீ நம்மாழ்வாருக்கு
பிடிக்காத காரியங்கள் இந்த தலத்தில் நடந்தால் இப்புளிய
மரத்திலிருந்து நிணநீர் வடிவது கண்கூடு.
நம்மாழ்வாரோடு இந்தப்புளி (லட்சுமணன்) தொடர்பு கொண்டது
போல்     திருக்கண்ணங்குடியில்     திருமங்கையாழ்வாருடன்
உறங்காப்புளி தொடர்பு கொண்டு விட்டது.
ஆழ்வார்கள் என்றாலே அது ஸ்ரீ நம்மாழ்வாரைத்தான்
குறிக்கும். சின் முத்திரையோடு சிறு குழவியாக தவழ்ந்து வந்து
இந்தப் புளியமரத்தின் பொந்தில் அமர்ந்த நம்மாழ்வார் 16
ஆண்டுகள் கழித்து வாய் திறந்து திருவாய் மொழி
மலர்ந்தருளினார். வேதத்தின் சாரத்தை திருவாய் மொழியாக
நம்மாழ்வார் வடித்துக்கொடுத்த இடம்தான், இது,
ஸ்ரீராமன் மட்டும் ஆதிசேடன் மடியில் அமர்ந்தால் போதுமா,
அர்ச்சாவதார மூர்த்திகளான தாங்களும் அமர வேண்டாமோ
என்று நினைத்து பல திவ்யதேசங்களில் எழுந்தருளியுள்ள
எம்பெருமான்கள் புளியமரத்தின் இலைகளிலும், கிளைகளிலும்
அமர்ந்துகொண்டு எம்மைப் பாடுக, எம்மைப்பாடுக என்று நான்
முந்தி நீ முந்தி என்று நம்மாழ்வாரிடம் பாடல் கேட்டதாக
ஐதீகம்.
ஸ்ரீ நம்மாழ்வாரும் எந்த திவ்ய தேசத்திற்கும் நேரில் செல்லாது
இந்தப் புளியமரத்தின் பொந்தில் இருந்து கொண்டே திவ்ய
ஸ்தலங்கட்கு பாசுரம் அருளினார்

No comments:

Post a Comment