Monday 4 September 2017

நாய்க்கு முத்தி

காந்திஸ்வரத்தில் கருவூர்ச்
சித்தர் என்னும் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார் அவரிடம் ஒரு
நாய் இருந்தது. அது தினந்தோறும் குருகூர்த் தெருவிற்கு வந்து
ஸ்ரீ வைணவர்கள் உணவருந்திவிட்டு எறிந்த எச்சில் இலையில்
உள்ள மீத உணவை உண்டுவந்தது.
ஒரு நாள் அவ்விதம் எச்சில் இலையுணவை அருந்திவிட்டு
நதியைக் கடந்து வரும்போது ஒரு நீர்ச்சூழல் ஏற்பட்டு
அதனின்றும் மீள முடியாமல் உயிர் துறக்க நேர்ந்தது. அது
உயிர் துறக்கும் சமயம் அதன் கபாலம் வெடித்து மாபெரும்
ஜோதியாய் எழுந்து விண்ணுடன் கலந்தது. ஆகா இத்தகைய
பேறு தமக்கு வாய்க்கவில்லையே என்று கருதிய கரூவூரார்
வாய்க்குங் குருகைத் திருவீதி எச்சிலை வாரியுண்ட
நாய்க்கும் பரமபதமளித்தாய் அந்த நாயோடிந்தப்
பேய்க்குமிட மளித்தாற்பழுதோ பெருமாள் மகுடஞ்
சாய்க்கும் படிக்கு கவி சொல்லு ஞானத் தமிழ்க்கடலே
                என்று பாடினார்.

No comments:

Post a Comment